June

யூன் 3

யூன் 3

அக்கரைக்குப் போவோம்வாருங்கள் (மாற்.4:35).

ஆண்டவராகிய கிறிஸ்துவின்கட்டளைக்குட்பட்டே நாம் செல்லும்பொழுதுகூட, புயல்களுக்கு நாம் தப்ப இயலாது. இந்தவசனத்தில் கூறப்பட்ட சந்தர்ப்பத்தில், சீடர்கள் கிறிஸ்து நாதரின்கட்டளைக்கேற்பத்தான் சென்றனர். இருந்தபோதிலும், மிகுந்த கடுமையான புயலை அவர்கள்சந்தித்தனர். அவர்களது படகு கடலில் அழிந்து போகத்தான பேராபத்தில் அவர்கள் இருந்தனர்.தங்களது துன்பத்தில் ஆண்டவரை உதவி செய்ய அழைத்தனர்.

ஒருவேளை கிறிஸ்து நாதர்நமக்கு உதவிக்கு வரத் தாமதமாகலாம். அது நமது விசுவாசம் சோதிக்கப்பட்டும்பலப்படுவதற்காக இருக்கலாம். நமது ஜெபங்கள் இன்னும் ஆழமானவைகளாக இருக்கவேண்டுமென்பதற்காகஇருக்கலாம். அப்பொழுதுதான் நமக்கு விடுதலை கிட்டும்பொழுது அதை இன்னும் அதிகமாகப்பாராட்டிக்கொள்ள முடியும்.

ஆண்டவர் ஏன் உங்களக்குவிசுவாசம் இல்லாது போயிற்று, என்று மென்மையான அவர்களைக் கடிந்துகொண்டார். புயலின்மத்தியிலும் ஏன் நீங்கள் வெற்றி முழக்கம் செய்யக்கூடாது. கொந்தளிக்கும் அலைகளையும்,சீறி வீசும் காற்றையும் நோக்கி, நீங்கள் எங்களுக்கு எவ்விதக் கெடுதலும் செய்யஉங்களால் முடியாது, ஏனென்றால் எங்கள் மீட்பராகிய கிறிஸ்து எங்களோடிருக்கிறார் என்று ஏன்கூறலாகாது?

கதிரவனொளியில் நாம்அமைதியுடன் இருக்கையில் நாம் நம்புவது புயல் எழும்பும்பொழுது நாம் நம்புவதைக் காட்டிலும்எளியது. துன்பத்தில் சோதிக்கப்பட்டாலன்றி நம் விசுவாசம் எவ்வளவு பெரிதென்று நாம்அறிந்துகொள்ள முடியாது. அதற்காகத்தான் நம் மீட்பர் நம் துன்பங்களில் நம்மோடிருக்கிறார்.

கர்த்தருக்குள் நீங்கள்பெலனுள்ளவர்களாகவும், அவருடைய வலிமையைக் கொண்டவர்களாகவும் இருப்பீர்களென்றால் உங்களுடையவலிமை ஏதோ ஒரு துன்பத்தில் பிறந்ததாகத்தானிருக்கவேண்டும்.

கிறிஸ்தென்னோடேன்படகிலிருப்பின்,

பறித்திடும் புயல்கண்டுஅஞ்சேன் நான்.

அக்கரைக்கும்போவோமென்றுதான் அண்டவர் கூறினாரேயொழிய கடலின் மத்தியில் மடியச்செல்வோம் என்று கூறவில்லை.