July

யூலை 12

யூலை 12

நான் போகும் வழியை அவர்அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன் (யோபு 23:10).

விசுவாசம் புயல்களுக்கிடையேவளருகிறது. நான்கே வார்த்தைகள்தான். ஆயினும் புயல்களிலடிபட்ட ஆத்துமாவுக்கு எத்தனைகருத்துச் செறிந்த சொற்கள்.

விசுவாசம்சோதிக்கப்படும்பொழுது காணாதவற்றைக் காணும்படியும், நடக்க இயலாக் காரியங்களைநடைமுறைக்குக் கொண்டுவரக்கூடியதுமான ஆண்டவரால் கொடுக்கப்பட்ட இயல்பான திறமையாகமாறுகிறது. அது இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளிலேயே செயலாற்றுகிறது.

ஆனால் அது பயல்களிடையேவளருகிறது. அதாவது ஆன்மீகச் சூழ்நிலைகளில் குழப்பங்கள் ஏற்படுகையில் விசுவாசம்வளருகிறது. இயற்கையின் கூறுகளில் போராட்டங்கள் எற்படுகையில், புயல்கள் ஏற்படுகின்றன.அதேபோல், ஆன்மீக உலகிலும் ஆன்மீகப்புல்கள் உண்டாகின்றன. அத்தகைய சூழ்நிலைதான்விசுவாசம் வளர்வதற்கேற்ற நிலம் ஆகும். அவ்வாறிருக்கும்பொழுது, அது துரிதமாகப் பலனளிக்கும்.காடுகளின் பாதுகாப்பான இடங்களில் உறுதி பெற்ற மரங்களைக்காண முடியாது. பலதிசைகளிலிருந்து காற்று மரத்தின்மீது வீசி, அதை அசைத்து, வளைத்து முறுக்கி அதைவலுவானதாக்கக்கூடிய வெட்ட வெளிகளிலேதான் உறுதியான மரங்கள் காணப்படும். தங்களுக்குத்தேவையான கருவிகளைச் செய்வோரும் அத்தகைய உறுதி வாய்ந்த மரங்களையே தேடிக் கண்டுபிடிப்பர்.

ஆன்மீக வாழ்விலும் அப்படியேஆன்மீக உலகிற் சிறந்த ஒருவரை நீ காணும்பொழுது, அவர் நிலைக்கு உன்னைக் கொண்டு செல்லும்பாதை காட்டு மலர்களை நிறைந்து, சூரிய வெளிச்சம் மிகுந்து இலகுவாக உள்ள பாறையல்லவென்றும்,கரடுமுரடான செங்குத்தான பாறைகள் மிகுந்து ஒடுங்கிய பாதையாகத்தானிருக்கும் என்று நீதெரிந்துகொள்ளுவாய். அப்பாதையில் கடுங்காற்று உன்னை வருட்டித் தள்ளிவிடும். கூரானபாறைகள் உன் பாதங்களைக்கிழிக்கும். முள் புதர்கள் உனது உடலைக் கீறும்.நச்சுப்பிராணிகளின் அச்சுறுத்தலும் அங்கு உண்டு.

அது துயரமும் மகிழ்ச்சியுமுள்ளபாதை. கண்ணீரும், புன்னகையும், வேதனையும், வெற்றியும் போராட்டங்களும் வெற்றிக்கீதங்களும் உள்ள பாதை. கடின உழைப்பு, அடி உதை, ஆபத்து, சித்திரவதை, தறவாகப்புரிந்துகொள்ளப்படல், தொல்லைகள், சங்கடங்கள், அவதூறு பேசப்படல் ஆகிய அனைத்தும்நிறைந்திருக்கும் அப்பாதையில். நாம் இவற்றினூடே செல்லும்பொழுது, இவை எல்லாவற்றிலேயும்நாம் நம்மில் அன்பு கூறுகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம்.

புயல்களின் மத்தியில். புயல்எங்கே கொடுரமாயிருக்கிறதோ அவ்விடத்தில் சோதனையாகிய கொடும் புயலை நீ கண்டுநடுங்கிப் பின்வாங்கலாம். ஆனால் நீ புயலுக்குள் செல். உன் சோதனையின் மத்தியில்உன்னைச் சந்திக்க உன் ஆண்டவர் இருக்கிறார். அவர் உனக்கு இரகசியங்களைக் கூறுவார். நீமலர்ந்த முகத்துடனும், தணிக்கமுடியாத விசுவாசததுடனும் வெளிவருவார். உன் விசுவாசத்தை அதன்பின்எந்தப் பிசாசின் வல்லமைiயும் குலைக்க முடியாது.