January

ஐனவரி 27

தேவன்தாமே…. உங்களைச் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவராக (1.பேது.5:10).

நாம் கிறிஸ்துவை எந்தப் புது உறவிலும் உரிமையாக்கிக் கொள்ளுமுன், அவர் நமக்கு எப்படியும் உரிமையாவார் என்று மனமாற ஒப்புக்கொள்ள அறிவென்னும் ஒளி தேவை. அது சாத்தியமா என்னும் கேள்வியே நம்பிக்கையை ஒழிக்கும். இவ்வறிவைப் பெற்றபின் நாம் முன்னேறிச் செல்லவேண்டும். பூமியில் ஊன்றப்பட்ட மரம் வேரூன்றுவதுபோலவும், திருமணத்தின்போது மணமகள் தன்னை முழுவதுமாய் மணமகனுக்கு ஒப்புக்கொடுத்து விடுவதுபோலவும் நாம் நன்கு தேர்ந்து தெளிந்து எவ்வித சந்தேகமுமின்றி நித்தியமாக அவருக்கு ஒப்புவிக்கவேண்டும்.

பின்பு நாம் நம்மைச் சோதித்து, ஸ்திரப்படுத்தி, நிலை நிறுத்துவார். நம் உறவு உறுதிப்படும் காலம்வரை நாம் அமர்ந்திருக்கவேண்டும். அது ஒடிந்த கையைச் சீர்ப்படுத்த வைத்தியனிடம் ஒப்படைப்பதுபோலாகும். அவர் தெப்பை வைத்து அசையாமல் கட்டுகிறார். தேவனும் ஆவிக்குரிய கட்டுகளை வைத்து இருக்கிறார். விசுவாசத்தின் முதல் படியைக் கடக்கும்வரை நாம் அமர்ந்திருக்க இந்தக் கட்டுகள் பயன்படுகின்றன. இது நமக்கு எளிதாகத் தோன்றாது. கிறிஸ்துவுக்குள் நம்மை நித்திய மகிமைக்கு அழைத்த கிருபையுள்ள தேவன் நாம் சிறிது காலம் பாடனுபவித்தபின் நம்மை சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைப்படுத்துவார்.

பாவம், வியாதி இவை குறித்த ஓர் இயற்கை விதியுண்டு. நாம் சமயத்திற்கேற்றாற்போல் கவலையின்றி நடந்தால் நாம் கீழே தள்ளப்பட்டுச் சாத்தானின் வல்லமைக்கு அடங்கியவர்களாவோம். ஆனால் கிறிஸ்துவில் சரீர வாழ்வுக்கும் ஆவிக்குரிய வாழ்வுக்கும் வேறொரு நியதி உண்டு. இதன்படி நடந்தால் இதன்மூலம் நாம் முன் கூறிய இயற்கை விதியை மேற்கொள்ளலாம்.

ஆனால் அச்சட்டப்படி நடக்க ஆவிக்குரிய சக்தியும், ஒரே நோக்கமும், நிலையான நடவடிக்கையும், விசுவாச பழக்கமும் தேவை. இது இயந்திர சாலையில் சக்தியை உபயோகிப்பது போன்றது. சுற்றும் தோல்ப்பட்டையைத் திருப்பிவிட்டுச் சுற்றிக்கொண்டேயிருக்கச் செய்யவேண்டியதுதான். நம் கடமை இணைக்கும்பொழுது பெரிய சக்தி வேலைசெய்து முழு இயந்திரமும் இயங்கும்.

நம்மைப் பரிசுத்தப்படுத்துவதிலும் குணமாக்குவதிலும் தேவையான பரிசுத்த ஆவியின் கிரியைக்குத் தெரிந்தெடுத்தல், நம்புதல், தரித்திருத்தல், கர்த்தரோடு இடைவிடாது சஞ்சாரம் செய்தல் என்ற ஆவிக்குரிய விதி உண்டு.