January

ஐனவரி 24

அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து, இளைப்பாற இடம் காணாமல் திரும்பிப் பேழையில் அவனிடத்திலே வந்தது… அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது இதோ, அது கொத்திக்கொண்டு வந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது (ஆதி.8:9,11).

நம்மைத் தைரியப்படுத்தும் அடையாளங்களை எப்பொழுதும் கொடுக்க வேண்டும். எப்போது கொடாதிருக்கவேண்டும் என்று கர்த்தர் அறிவார். நாம் எப்படியும் அவரை நம்பலாம் என்பது எத்துணை நலமானது. அவர் நம்மை நினைவு கூருகிறார் என்பதற்கு யாதொரு ஆதாரமும் காணாதிருப்பதுவே சிறந்த காரியம். நமது பலன்களால் உணரப்படும் அடையாளங்களைவிட அவருடைய வார்த்தை, நினைவுகளும் அவருடைய வாக்குத்தத்தம் இவைகளே உறுதியும் நம்பிக்கையுமானவை என்பதை நாம் அறியவேண்டுமென்று அவர் விரும்புகிறார். நாம் காணத்தக்க அடையாளங்களை நமக்கு அனுப்பினால், அதுவும் நல்லதே. அடையாளங்களின்றியே அவரை நம்பின நாம், அவற்றை இன்னும் அதிக மேன்மையாக ஏற்றுக்கொள்வோம். அவருடைய வார்த்தையன்றி வேறோரு அத்தாட்சியும் தேடாதோர் அவருடைய அன்பின் அத்தாட்சிகள் பலவற்றைப் பெறுவர்.

புயல் முகில் இருண்டு வந்தாலும்
வானம் வெண்கலம் போல் அசைவற்றிருந்தாலும்,
அவர் ஒவ்வொரு ஜெபத்திற்கும் செவி சாய்ப்பார்
கீழே விழும் சிறு சிட்டின் சத்தமும் கேட்பார் – அவரை நம்பு

துக்க பாரம் நெருங்கும்போது
அருமையான பொருளை இழக்கும்போதும்
அவரைத் துதி, அப்போது நம் கஷ்டம் லாபமே
நமக்குரியதெல்லாம் அவரிடம் உண்டு – அவரைப் போற்று

நம் கரம் அவர் கையில் வைங்குங்கால்
வழி தூரமானாலும், அறியாது பயந்திடினும்
நம்மை நேர் வழி நடத்துவார்
நம்மை அருகில் வைக்க – நம் கரம் அவர் கரத்தில்

உன் வழி அடைபட்டு நீ வெருண்டிருக்கையில்
அழகிய உலகப்பொருள்கள் நீ;ங்குகையில்
அவர் உன்னோடு தங்கித்தரிக்க வருகிறார்
நம்பிக்கையோடு அமர்ந்திரு – இளைப்பாறு

தாமதம் நம் ஜெபம் தள்ளப்பட்டது என்பதைக் குறிப்பதல்ல. நம்முடைய அநேக ஜெபங்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றிற்கிடையில் கீழ்க்கண்டபடி எழுதப்பட்டுள்ளது. என் வேளை இன்னும் வரவில்லை. கர்த்தர் ஒரு நோக்கத்தையும் அது நிறைவேறும் காலத்தையும் குறித்து வைத்துள்ளார். நம்முடைய வாசஸ்தலத்தின் அளவைக் குறிப்பிட்ட தேவன் விடுதலை அடையும் வேளையையும் குறிப்பிட்டுள்ளார்.