January

ஐனவரி 11

என் ஜனத்தை ஆற்றுங்கள்….. என்று… தேவன் சொல்லுகிறார் (ஏசா.40:1).

ஆறுதலைச் சேர்த்து வையுங்கள். இதுவே தீர்க்கதிரிசியின் ஊழியம். உலகம் எண்ணில்லாத ஆறுதலற்ற இருதயங்ககளால் நிறைந்திருக்கிறது. நீ இந்த ஊழியத்தைச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமுன் அற்கு ஏற்ற பயிற்சி அடையவேண்டும். உன்னுடைய பயிற்சி மிகக் கடினமானது. இந்த ஆறுதலைப் பூரணமாய் நீ அளிப்பதற்கு முன்னதாக, எண்ணிறந்த இருதயங்களிலிருந்து, இரத்தக்கண்ணீர் வடியச் செய்யும் அதே கஷ்டங்களை நீ அனுபவிக்கவேண்டும். இவ்விதமாய் உன் சொந்த ஜீவியமே ஆறுதலளிப்பதாகிய தெய்வீக செய்கையை நீ கற்றுக்கொள்ளும் வைத்தியசாலை ஆகும். உன் காயங்களை அந்தப் பரம வைத்தியர் கட்டும் விதத்தைப் பார்த்து, எங்குமுள்ள காயப்பட்டோருக்கு நீ முதலுதவி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்காகவே நீ காயப்படுகிறாய். நீ ஒரு குறிப்பிட்ட துன்பத்தை ஏன் அனுபவிக்கிறாய் என்பதைப் பற்றி உன் இருதயத்தில் கேள்வி எழும்புகிறதா? பத்து வருடம் காத்திரு. உன்னைப்போல் கஷ்டம் அனுபவிக்கிற அநேகரைக் காண்பாய். அவர்களிடம் நீ எப்படி வருத்தமடைந்து தேற்றப்பட்டாய் என்பதை உரைப்பாய். உன் அனுபவத்தைச் சொல்லி, கர்த்தர் உனக்கு அளித்த ஆறுதல் எனும் தைலத்தை அவர்களுக்கும் அளித்து, வருந்துவோரின் இருதயத்தில் நம்பிக்கை உண்டாக்கி, அவ்வாறு அவநம்பிக்கை என்னும் இருள் அவர்கள் இருதய்தினின்றும் விலகும்போது நீ அதைக் கண்டு தேவன் ஏன் உன்னை வருத்தத்திற்குள்ளாக்கினார் என்று அறிவாய். அப்பொழுது உனக்கு நிறைந்த அனுபவத்தையும் உதவிசெய்யுந்தன்மையையும் அளிப்பதற்காக உன்னை சிட்சித்த தேவைன எண்ணி அவருக்கு துதி செலுத்துவாய்.

தேவன் நம்மைச் சௌகரியமாயிருக்க அல்ல. மற்றவர்களை ஆற்றித்தேற்றும் உதவிக்கரங்களாக இருப்பதற்காகவே ஆற்றித் தேற்றுகிறார்

ரோஜாவின் மணத்தைப் பெற
அதைக் கசக்கி வருத்த வேண்டும்.
வானம்பாடியின் இனிய கீதம்,
வருந்தும் போதேயுண்டாகும்.
அன்பினால் வருந்துவதும் சிநேகத்தால் அழுவதும்
அன்பின் ஆழம் அறியவே.
உன்னத காரியம் யாவும்
வருத்தத்தின் வழியே
இது எப்போதும் அப்படியா
விலையேறப்பெற்ற காரியம்
அவை எப்போதும் கசக்கி
அடித்து பிழிய வேண்டுமா?