January

ஐனவரி 4

இயேசுஅவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன்,இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான் (யோ.4:50)

நீங்கள்ஜெபம்பண்ணும்போது….. விசுவாசியுங்கள் (மாற்.11:24)

குறிப்பிட்டு ஜெபிக்கவேண்டிய ஒரு காரியம் இருக்கும்பொழுது, கர்த்தரை நம்பி உங்கள்ஜெபத்திற்கு விடை பெற்று அதற்காக அவருக்கு நன்றி செலுத்தும் வரையில் ஜெபியுங்கள்.ஜெபத்திற்கு விடை வெளியரங்கமாய் கிடைக்கத் தாமதமாகும்பொழுது அவிசுவாசத்தோடுஜெபிக்கக்கூடாது. அப்படிப்பட்ட ஜெபம் அனுகூலமாயிராமல், தடையாயிருக்கும். அவ்வாறுஜெபித்தால், ஜெபித்து முடிக்கும்போது உங்கள் விசுவாசம் பலம் குன்றியதாக அல்லது முழுவதும்அற்றுப்போய் விட்டதாக மாறக் காண்பீர்கள். இத்தகைய அவசரமான ஜெபத்திற்கு தூண்டுதல்தன்னலமும், சாத்தானுமாகும். விசுவாசம் அற்றுப்போகும் விதமாய் ஜெபியாதீர்கள். மேலும்அக்காரியத்தைக் கர்த்தரிடத்திற்கு கொண்டு வந்து விசுவாசத்தோடு ஜெபியுங்கள். நீங்கள்அவரிடம் பதிலுக்கு காத்திருப்பதாகவும், அவரை இன்னும் நம்புவதாகவும் சொல்லி,கிடைக்கப்போகிற அப்பதிலுக்காக நன்றி செலுத்துங்கள். நாம் பெற்றுக்கொள்வோம்என்கிற நம்பிக்கையோடு அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவது நம் விசுவாசத்தைப்பலப்படுத்தும். நம்முடைய விசுவாசம் குறையத்தக்கதாய் ஜெபிக்கும் ஜெபம் கர்த்தருடையவசனங்களிலுள்ள வாக்குத்தத்தங்களையும் அவர் நம்முடைய இருதயங்களில் ஆகும் என்றுரைக்கும்மெல்லிய சத்தத்தையும் மறுப்பதாகும். அத்தகைய ஜெபங்கள் மனதின் அமைதியின்மையைக்காட்டும். அமைதியின்மை அவிசுவாசத்தின் அறிகுறி. விசுவாசத்தவர்களாகிய நாமோ இளைப்பாறுதலில்பிரவேசிக்கிறோம். (எபி.4:3). நாம் ஜெபிக்கும் காரியம் கிடைப்பது கடினம் என்றஎண்ணத்தையே முக்கியமாகக் கொண்டு ஆண்டவருடைய வாக்குத்தத்தை நினையாமல் விசுவாசம்அற்றுப்போகச் செய்யும் ஜெபம் செய்கிறோம். ஆபிரகாம் தன் சரீரம் செத்துப்போனதைஎண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச்சந்தேகப்படாமல் இருந்தான் (ரோ.4:10,20). நம் விசுவாசம் அற்றுப்போகத்தக்கதாய்ஜெபியாதபடி விழித்திருந்து ஜெபம்பண்ணவேண்டும்.

விசுவாசம் உணர்ச்சியுமல்ல,காண்பதுமல்ல, பகுத்தறிவுமல்ல, கர்த்தருடைய வார்த்தைகளை அப்படியே நம்புவதே.

நாம் கவலைகொள்ளஆரம்பிப்பதே விசுவாசத்தின் முடிவு. கவலையின் இறுதியே உண்மையான விசுவாசத்தின் ஆரம்பம்.

நமக்குச் சகலமும்சௌகரியமாயிருக்கும்போது நாம் விசுவாசத்தைப்பற்றி அறியமாட்டோம். அமைதலான வேளையில்கர்த்தர் வாக்குத்தத்தங்களை அருளுகிறார். அவர் தம்முடைய உடன்படிக்கைகளைப் பெரிய கிருபைநிறைந்த வார்த்தைகளால் முத்திரையிடுகிறார். பின்பு நாம் எவ்வளவாய் விசுவாசிக்கிறோம்என்று பார்க்கிறதற்கு சோதனைக்காரனை வரவிடுகிறார். சோதனைகள் அவர்வாக்களித்தவைகளுக்கெல்லாம் நேர்மாறாயிருப்பதுபோல் தெரியும். அச்சமயத்தில்தான்விசுவாசம் தன் கிரீடத்தைப் பெறும். புயலிலும் நடுக்கத்திலும் இருக்கும் அச்சமயமேகப்பலோட்டிகள், கர்த்தாவே நீர் சொல்ல ஆகும் என்று நான் விசுவாசிக்கிறேன் என்றுசொல்லுவதற்கேற்ற சமயம்.

அவரை நம்பி அவரையேபற்றிக்கொள்

விண்மீனின் வெளிச்சத்திலும்,சூரியனின் ஒளியிலும்,

வாழ்வின் சாவிலும்,உயிரிலும் உள்ளத்திலும்

அவரது அறிவு நிறைந்த இரவில்

விண்மீன்கள் ஒளிர்வது போலத்

துன்பத்தின் நடுவிலும் அவரது

தெய்வீக நோக்கம்பிரகாசிக்கும்.