February

பெப்ரவரி 28

அவருடைய நாமத்தைத்துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குசெலுத்தக்கடவோம் (எபி.13:15).

ஒரு நகரத்தில் ஊழியம்செய்து வந்து ஓர் உத்தம சுவிசேடகர் ஒரு தினம் ஓர் எளிய பெண்ணின் குடிசைக்குச் சென்றார்.அவளுடைய குடிசைக்குச் செல்லும் பாதை இருண்டு குப்பை கூளம் நிறைந்திருந்தது. அவர் உள்ளேநுழையும் சப்தத்தைக் கேட்டுக் குடிசை மூலையில் படுத்துக்கொண்டிருந்த நீக்ரோ பெண் தன்னைத்தேடி எவரோ ஒரு பெண்மணி வந்திருக்கிறாளென நினைத்து கண்மணி! நீ யாரம்மா? என்று மிகவும்கனிந்த குரலில் கேட்டாள்.

சுவிசேடகர் ஒருநெருப்புக்குச்சியைக் கொளுத்தி அதன் வெளிச்சத்தில் உள்ளே கூர்ந்து பார்த்தார். அவர் அங்குகண்ட காட்சி மனதை உருக்கியது. அந்தப் பெண்ணின் முகம் பசியினால் வாடி நலிந்து சுருங்கியமுகம். ஆயினும், கண்களில் நம்பிக்கையின் ஒளி வீசியது. அவள் வாழ்க்கை தரித்திரமும்,துன்பமும் நிறைந்திருந்தது. அவள் படுக்கை கிழிந்து கந்தலாயிருந்தது. குளிரில்நடுங்கிக்கொண்டிருந்தாள். வீட்டில் நெருப்பில்லை, வெளிச்சமில்லை, ஆகாரமில்லை.முடக்குவாதமும் விசுவாசமும் தவிர வேறேதுவும் அவளுக்கு உரிமையாயில்லை. ஆயினும் அவள்:

இயேசுவன்றி என் கஷ்டம்

யாருமறியார்,யாருமறியார்

எனது துன்பம்யாருமறியார்.

அல்லேலூயா துதிபாடுவேன்.

சிலவேளை உயர்வேன்சிலவேளை தாழ்வேன்,

சிலவேளைசமநிலையிலிருப்பேன்.

சிலவேளை என்னைச்சுற்றி மகிமை பிரகாசிக்கும்

அல்லேலூயா துதிபாடுவேன்.

என்று பலவித கவிகள்பாடிக்கொண்டிருந்தாள். நான் செய்யும் வேலை யாருமறியாயார், என் தக்கம் யாருமறியார் என்றுபாடினாள். ஒவ்வொரு கவிக்கும் பல்லவி அல்லேலூயா துதி பாடுவேன் என்பதே. கடைசி சரணமாகஅவள்:

என்னுள்ளத்திலுள்ளபேரானந்தம்

இயேசு அன்றி யாருமேஅறியார்

என்று பாடினாள்.துன்பமடைந்தாலும் துக்கமடையாமல், கலங்கியும் நம்பிக்கையிழந்துபோகாமல்,உபத்திரவப்பட்டும் கைவிடப்படாமல், கீழே தள்ளப்பட்டும் அழிக்கப்படாமல்… என்ற வேதவாக்கியத்தில்தான் அந்த நீக்ரோ பெண்ணின் மனநிலைமையை வர்ணிக்கலாம்.

லூத்தர் மரணப்படுக்கையில்இருக்கையில் வேதனைகளினிடையே பின்வருமாறு பிரசங்கித்தார்: இங்குள்ள இந்த வேதனைகளும்,கஷ்டங்களும், அச்சிடுவோனின் அச்சுக்கோர்வை போலிருக்கிறது. இப்பொழுது இருக்கிறநிலைமையில் அதைப் பின்னாலிருந்து வாசிக்கவேண்டும். அது விளங்காத மொழிபோல் இருக்கும்.ஆனால் அச்சிடப்பட்ட புத்தகம் விளங்குவதுபோல் மேலோகம் சென்ற பிறகுதான் இவ்வுலககத்தின்அனுபவங்களின் அர்த்தமும் விளங்கும். ஆனால் அதுவரை நாம் புயல் வீசும்பொழுது கப்பலின்மேல்தட்டில் நடந்து, கப்பலினுள்ள ஜனங்களை ஊக்குவித்த பவுலையும், லூத்தரையும், அந்த வயதுசென்ற நீக்ரோ பெண்ணையும் நினைத்துப் பாருங்கள். அவர்கள் யாவரும் மனித சூரியகாந்திப்பூக்கள்.