February

பெப்ரவரி 27

அப்பொழுது ஒரு புருஷன் பொழுதுவிடியுமளவும் அவனுடனே போராடி….(ஆதி.32:24).

தனித்திருந்தான்.நம்முடைய மனதில் இவ்வார்த்தைகள் வெவ்வேறு எண்ணங்களைக் கொண்டுவரலாம். சிலருக்கு அதுயாருமின்றித் தனித்திருத்தலாகும். வேறு சிலருக்கு அமைதலும், ஓய்வும் என்று தோன்றும்.கர்த்தரின்றித் தனித்திருத்தல், சொல்லக்கூடாத நிர்பந்த நிலைமை, ஆனால் அவரோடுதனித்திருத்தல், பரலோக மாட்சிமையை முன்ருசித்தலாகும். அவரைப் பின்பற்றுகிறவர்கள் இன்னும்அதிக நேரம் அவரோடு தனித்திருந்தால் நமக்குள் ஆவிக்குரிய இராட்சதர்கள் இருப்பார்கள்.

நமது எஜமான் முன்மாதிரிகாட்டினார். அவர் எத்தனை தடவை பிதாவோடே தனித்திருக்கச் சென்றார் என்பதைக் கவனி. நீஜெபம்பண்ணும்போது உன் அறை வீட்டில் பிரவேசித்து கதவைப் பூட்டி ஜெபி (மத்.6:6). இக்கட்டளையில்பெரியதொரு நோக்கம் அடங்கியுள்ளது.

எலியா, எலிசாஎன்பவர்களின் மாபெரிய அற்புதங்கள், அவர்கள் கர்த்தரோடு தனித்திருக்கும்போதுதான்உண்டாயின. கர்த்தரோடு தனித்திருந்தவேளையில் தான் யாக்கோபு இளவரசனானான். அங்குதான்நாமும் ஆண்களும் பெண்களும் ஆச்சரியமடையக்கூடிய இளவரசர்கள் ஆகலாம் (கரி.3:8).யோசுவாவிடம் கர்த்தர் வந்தபோது அவன் தனித்திருந்தான் (யோசு.1:1). கிதியோனும்,யெப்தாவும் இஸ்ரவேல் புத்திரரை மீட்கும் வேலைiயை அடையும்போது தனித்திருந்தார்கள்(நியா.6:11-29). வனாந்தரத்தில் முட்செடியினருகில் மோசே தனித்திருந்தான். (யாத்.3:1-5).தேவதூதன் அவனிடம் வரும்போது கொர்நேலியு தனித்து ஜெபித்துக்கொண்டிருந்தான்(அப்.10:7). யோவான்ஸ்நானகன் வனாந்தரத்தில் தனித்திருந்தான் (லூக்.1:80).அன்புள்ள சீடனாகிய யோவான் பத்மு தீவிலே தனித்துச் சிறையிலிருக்கும்போது ஆண்டவரண்டைஅதிகம் நெருங்கியிருந்தான்.

ஆண்டவரோடு தனித்திருக்கஆசைகொள். ஆசீர்வாதத்தைப் பெறுங்கால், ஏனையோருக்கு ஆசீர்வாதம் கொடுக்கக் கூடியவர்களாயிருப்பதால்,நாம் ஆண்டவரோடு தனித்திருத்தலைக் குறித்து கவனமின்றியிருந்தால், நாம் நம்மை மடடுமல்ல,மற்றவர்களையும் ஆசீர்வாதம் அற்றவர்களாக்குகிறோம். தனித்திருத்தல், வேலையைக்குறைத்துக்கொள்வதாயிருக்கலாம். ஆனால் அதனால் அதிக சக்தியுண்டாகிறது. அதன் விளைவாகஅவர்கள் இயேசுவையன்றி வேறோருவரையும் காணவில்லை என்பது போலாகும்.

கர்த்தரோடு தனித்திருந்துஜெபத்தின் மகிமையைக் குறித்து எவ்வளவு சொன்னாலும் மிகையாது.

தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்

அவரோடு தனியே இருந்திருக்காவிட்டால்

அமைதியாய் கர்த்தருக்கு

வாசலைத்திறந்திருக்காவிட்டால்

பெரியதொன்றும்செய்திருக்கமாட்டார்கள்.