February

பெப்ரவரி 24

யோவான் ஒருஅற்புதத்தையும் செய்யவில்லை. ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம்மெய்யாயிருக்கிறது (யோ.10:41).

நீ உன்னைக் குறித்து வெகுஅதிருப்தியுடையவனாயிருக்கலாம். நீ ஒரு கவிஞன் அல்ல, உன்னதமானவர்களில் ஒருவனல்ல,யாதொரு பெரிய காரியமும் நீ செய்யாதிருக்கலாம். ஒன்றிலும் நீ சிறந்தவனல்ல,சாதாரணமானவனே. உன் வாழ்க்கை ஒரே தன்மையுடையதாய் ருசிகரமற்றதாய் இருக்கலாம். ஆகிலும்நீ உன்னத ஜீவியம் நடத்தலாம்.

யோவானும், ஓர் அற்புதமும்செய்யவில்லை. ஆனால் இயேசு அவனைக் குறித்து, ஸ்திரீகளிடம் பிறந்த மனிதரிலே இவனைவிடப்பெரிய மனிதன் இதுவரை தோன்றினதில்லை என்று சொன்னார்.

யோவானின் முக்கிய வேலைஒளியைக் குறித்துச் சாட்சி சொல்லுவதே. இதுவே உனக்கும் எனக்கும் வேiலாயிருக்கட்டும்.மனிதர் இயேசுவைக் குறித்து நினைக்கவேண்டுமென்பதே அவன் ஆவல். அதனால்தான் வனாந்தரத்தில்கூப்பிடும் ஒரு சப்தமாக இருப்பதே அவனுக்குத் திருப்தியளித்தது.

கேட்கவேண்டியதேயன்றிபார்க்க முடியாத சப்தமாக மாத்திரமே இருக்க நீ சித்தமாயிரு. சூரியனின் கண் கூசும்ஒளியைப் பிரதிபலிப்பதால்தான் காணப்படாத கண்ணாடிபோலவும், அதிகாலையில் பொழுது புலரச்சிறிது நேரமிருக்கையில் எழும்பி வைகறை! வைகறை என்று அறிவித்து மறைகிற தென்றலாகவும் இருக்கஆசைப்படு.

சாதாரணமான, வெகு அற்பமானகாரியத்தையும் அவர் முன் செய்வதுபோல், செய். சேர்ந்துவாழத் தகாத ஜனங்கள் மத்தியில்நீ வசித்தாலும் அவர்களை அன்பினால் வசப்படுத்தப் பிரயாசப்படு. உன் ஜீவியத்தில் பெரியதவறு செய்து விட்டாலும் அது உன் ஜீவியம் முழுவதையும் இருளாக்க விடாதே. ஆனால் அந்த இரகசியத்தைஉன் இருதயத்தில் பூட்டி வைத்துக்கொண்டு அது பலத்தையும் இனிமையையும் கொடுக்கச் செய்.

நாம்அறிந்திருக்கிறதைவிட, அதிக நன்மையை நாம் செய்து கொண்டிருக்கிறோம். நாம் சுவிசேடவிதைகளை விதைத்து அவற்றைப் போஷிக்கும் சிற்றோடைகளையும் உண்டுபண்ணுகிறோம். அதாவதுகிறிஸ்;துவைப்பற்றிய உண்மைகளைப் பலருக்குத் தெரிவிக்கிறோம். பின்னொரு காலத்தில்நம் வார்த்தைகளே அவர்களை முதல் முதலாகக் கிறிஸ்துவைப்பற்றிச் சிந்திக்கத் தூண்டினஎன்று அவர்கள் சொல்வார்கள். என்னைக் கேட்டால் என் கல்லறையின்மேல் ஒரு பெரிய சமாதிஎழும்புவதைவிட அதைச் சுற்றி எளிமையானவர்கள் நின்று இவர் நல்ல மனிதன், இவர் அற்புதங்கள்செய்யவில்லை. ஆனால் நான் இயேசுவை அறியத்தக்கதாய் என்னிடம் கிறிஸ்துவைப்பற்றிப்பேசினார் என்று சொன்னால் அதுவே எனக்குப் பரம திருப்தியளிக்கும்.

உமதுமறைவிலிருக்கிறவர்கள் (சங்.83:3)

வசந்த காலம் வந்தது

தரையிலிருந்துபச்சிலைகள் தோன்றின

கோடை காலத்தின்மலர்கள்

இலைகளினடியிலிருந்து

மணம் கமழுகின்றன

இலைகளைத் தூக்கு! அவற்றிற்கடியில் சிறந்த

வனப்பு நமது கண்ணுக்குமறைந்திருக்கிறது

ரோஜா நிறமும் வெண்நிறமுமான

கோடை மலர்கள் வெயிலைக்காணத் தலைதூக்குகின்றன

இலைகளினடியிலிருந்து.

நோக்கங்களையும்,செய்கைகளையும் காண்போரன்றி

வேறொருவரும் காணாதவாறுபலரின் ஜீவியமும்

பரிசுத்த கிரியைகளும்அமைதியாய் வளர்ந்து

அழகு பெற மலர்ந்துநிற்பதில்லையா

இலைகளினடியிலிருந்து?

நம்பிக்கையும்விசுவாசமுமாகிய வெண் மலர்கள்

உடைந்த உள்ளத்தினின்றுஉதிக்கும்

அழகு நிறமுள்ள அன்பென்னும்மலரும்

அத்தனின் கரத்தால்அழகுற்று வளரும்

இலைகளினடியிலிருந்து

கடமையினின்றுதிக்கும் புதியபூக்கள்

நிழலில் வளர்ந்தாலும்வனப்புள்ளவைகள் ஆகின்றன

அற்புத, அரிய, இன்ப மணம்

அப் பூக்களினின்றும் வெளிவரும்

இலைகளுக்கடியிலிருந்து.

நம் கண்ணுக்குத்தோன்றாவிடினும்

மொட்டையும் மலரையும் அவர்காண்பார்

அவருடைய தெய்வீக ஒளிக்காகநாம் காத்திருப்போம்

அவரே வந்து இலைகளைத்தூக்கும்வரை காத்திருப்போம்.

கர்த்தர் தம்முடைய அருமையான ஊழியர்களை, எவரும்அறியாத திரள் கூட்டத்திலிருந்து அழைக்கிறார் (லூக்.14:23).