February

பெப்ரவரி 14

சந்தோஷமாயிருங்கள்என்று மறுபடியும் சொல்லுகிறேன் (பிலி.4:4).

இயேசுவில் சந்தோஷமாயிருத்தல்மிக சிறந்த காரியம். நீ இதைச் செய்ய முயலும்போது முதல் தடவை தவறுவதுபோல் காணப்படலாம்.பரவாயில்லை சந்தோஷம் உண்டாகாதபோது, உனக்குள் மகிழ்ச்சியின் ஊற்றில்லாதபோது,காணக்கூடிய தைரியமோ ஆறுதலோ இல்லாதபோது இன்னும் முயன்று அவைகள் எல்லாம் சந்தோஷம்என்று எண்ணு. கர்த்தர் உன் எண்ணத்தை நிறைவேற்றுவார். பலிவதமான சோதனைகள் சூழும்போதுஅவைகளைச் சந்தோஷம் என்று எண்ணு. கர்த்தர் உன்னை வெற்றிக்கொடியையும் ஆனந்த கொடியையும்,போர்முனைக்கு எடுத்துச்செல்ல அனுமதித்து, பின்பு சத்துரு உன்னைப் பிடிக்கவோமேற்கொள்ளவோ விட்டு விட்டுச் சும்மா இருப்பாரோ? ஒருபோதும் இரார். உன் முயற்சியில்பரிசுத்தஆவியானவர் கை தாங்கி, உன் இருதயத்தைத் துதியாலும், மகிழ்ச்சியாலும் நிரப்புவார்.உன் இருதயம் உள்ளே புதுப்பிக்கப்படுவதையும், உற்சாகமடைவதையும் நீ காண்பாய். ஆகவேஉம்மில் சந்தோஷமாயிருக்க எப்போதும் சந்தோஷமாயிருக்க எனக்கு கற்பியும்.

துதியின் சத்தத்தோடு சாத்தானை எதிர்த்தால்

பலவீனமான பக்தனும் அவனைத் தோற்கடிப்பான்.

ஆவியால்நிறைந்து…. உங்கள் இருதயத்தில் கர்த்தரைப்பாடிக் கீர்த்தனம் பண்ணுங்கள்(எபேசி.5:18-19).

ஆவிக்குரிய ஜீவியத்தைஉற்சாகப்படுத்த ஏதுகரமாகப் பாடல்களை உபயோகிக்கும்படி இங்கு பரி.பவுல் ஏவுகிறார்.தன்னுடைய வாசகர்களை மாம்சத்திலல்ல, ஆவியில் உற்சாகமடையச் சொல்லுகிறார். மாம்சஎழுப்புதல் அல்ல, ஆவியின் எழுப்புதலே தேவை.

கிறிஸ்தவன் பாடுகையில்

சிலவேளை ஓர் ஒளி காண்கிறான்.

பாட விருப்பம் இல்லாதபோதும்பாடுவோமாக. இதனால் சோர்ந்த ஆவிக்கு உற்சாகமளித்து, களைப்பைப் பலனாக மாற்றலாம்.

நடு இராத்திரியிலே, பவுலும்சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினாhகள். காவலில் வைக்கப்பட்டவர்கள்அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் (அப்.16:26).

கிறிஸ்துவின்அச்சடையாளங்களைச் சரீரத்தில் பெற்றிருந்த பவுலே! நீர் இவ்வாறு தேவனைமகிமைப்படுத்தியதால் நீரே மந்தைக்கேற்ற மாதிரி. ஏறக்குறைய சாகும் தறுவாயை அடையும்படிகல்லெறியப்பட்ட காயங்கள். மூன்றுதரம் இம்சையடிப்பட்ட தழும்புகள். இரத்தம் பீரிட்டுக்கழுவும்படியான பிலிப்பு நகர் சிறையில்பட்ட அடிகள் இத்தனை உபத்திரவத்தின் மத்தியில்உம்மைப் பாடும்படி செய்த கிருபை நிச்சயமாகவே எல்லாவற்றிற்கும்போதுமான கிருபை.

சாத்தானின அம்புகள் பாயுங்கால்,

கர்த்தரில் சதா சந்தோஷமாயிருப்போம்.

நம்முடைய பெருமூச்சை விடப் பாட்டே

ஆதியிலிருந்ததுபோல் சாத்தானைப் பயப்படுத்தும்.