February

பெப்ரவரி 11

ஆசாரியர்கள் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலேபட்டமாத்திரத்தில்….. தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் (யோ.3:13).

வழி திறக்கும்வரை ஜனங்கள்தங்கள் கூடாரங்களில் காத்திராமல் விசுவாசத்துடன் நடக்கவேண்டியதாயிருந்தது. ஆற்றில்வழி பிறக்குமுன் அவர்கள் கூடாரங்களை அவிழ்த்துச் சாமான்களைக் கட்டி முன்னேறிச் செல்லவரிசையாய் நின்று ஆற்றங்கரைக்கும் செல்லவேண்டும்.

அவர்கள் ஆற்றங்கரைக்குச்சென்று ஆற்றினுள் இறங்கு முன் தண்ணீர் ஓட்டம் நின்று குவியக் காத்திருப்பார்களானால் அதுவீணாய்க் காத்திருப்பதாகும். ஆனால் தண்ணீர் குவியுமுன் அவர்கள் ஆற்றினுள் அடி எடுத்துவைக்கவேண்டும்.

நாம் முன்னேறிச் செல்லும்வழியை அறியாவிட்டாலும் கர்த்தருடைய வார்த்தையையே நம்பி நம் கடமைகளைநிறைவேற்றிக்கொண்டே முன்னேறிச் செல்லப் பழக வேண்டும்.

கஷ்டங்கள் நீங்கினபின்கடந்து செல்வோமென்றிருப்பதால், கஷ்டங்களால் நாம் தடைப்பட்டுப் போகிறோம்.நம்பிக்கையோடு நாம் முன்னேறிச் சென்றால் நமக்கு முன்பாகப் பாதை திறக்கப்படும்.தடங்கலில்லாததுபோல் முன்னேறிச் செல்லவேண்டிய சமயம் தடங்கல் நீங்கட்டும் என்று நாம்செயலற்று நிற்கிறோம்.

மிகுந்த கஷ்டங்கள்மத்தியிலும் விடா முயற்சி என்ற சிறந்த பாடத்தைக் கொலம்பஸ் உலகத்திற்குக்கற்றுக்கொடுத்தான்.

அவனுக்குப் பின் ஆசோர்தீவும்

கெர்குலிஸ் வாசல் என்றமலையும் இருந்தன.

முன்னால் கரையேதும்காணவில்லை.

கரையற்ற கடலைக்கண்டான்.

உதவித் தலைவன் இதோஇருண்டுவிட்டது

இப்போது நாம்ஜெபிக்க வேண்டும்.

பேசும் தலைவரை நான்என்ன சொல்லட்டும்? என்றான்.

தொடர்ந்து கப்பலோட்டிசெல் என்றான் தலைவன்.

என் மனிதர் கலகம்செய்கிறார்கள்,

அவர்கள் மெலிந்து பலமற்றுப்போனார்கள்.

உறுதியான மனமுடையஉதவித்தலைவனும்

வீடுபோக மனதாகிக் கண்ணீர்விட்டான்.

பொழுது விடியும்வரைகடலின்றி கரை காணாவிடில்

தலைவரே, நான் என்னசொல்லட்டும்?

இன்று விடியும்போது நீ சொல்என்றான்

தொடர்ந்து கப்பலை ஓட்டிச்செல் என்றான் தலைவன்.

அவர்கள் பயணம் செய்தனர்.மென்மேலும் சென்றனர்.

இந்தப் பயங்கரக் கடல்கடுரமாயிருக்கிறது

தன் உதட்டைக் கடித்துப்பல்லைக்காட்டிக்

கடிப்பதற்கு காத்திருக்கிறது

தைரியமுள்ள தலைவரே!நம்பிக்கையிழந்தபின்

நாம் என்ன செய்வதென்று ஒருநல் வார்த்தை சொல்க

பாயும் பட்டயம்போல்முன்னேறிச் செல் என்னும் பதிலே வந்தது.

களைப்புடன் பயந்து கப்பலைஓட்டினான்

இரவின் இருளினூடேநோக்கினான்

அந்தகாரமான இரவிலே ஓர்ஒளி!

ஓர் ஒளி! ஓர் ஒளி கண்டான்.அது

நட்சத்திரக் கொடியாய்விரிந்தது

பொழுது விடியும்வேளையாயிற்று

அவன் ஒரு புது உலகைக் கண்டுபிடித்து

மேன்மேலும் செல்லுங்கள்என்ற போதனை கொடுத்தான்.

முன்னேறிச் செல்லும்விசுவாசம் வெற்றிகொள்ளும்.