February

பெப்ரவரி 10

பிரியமானவர்களே, நீங்கள் பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்(ரோ.12:19).

செயல்படுவதைவிட அமர்ந்திருப்பதற்கு அளவிடக்கூடாத அதிகமான பெலன் அவசியமாகிறது.அமர்ந்திருத்தலே சக்தியின் உன்னத பயனாகிறது. இயேசுவிற்கு விரோதமாகத் தீமையானகுற்றங்களைச் சாட்டினபோது, அவருடைய பதில அமைதியான மௌனமே. இது நீதிபதிகளையும்,பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் திகைக்கச் செய்தது. கோபத்தை உண்டாக்கக் கூடியவாறுஅவ்வளவாகத் தூஷித்தும், கொடுமைப்படுத்தியும், கேலி செய்தும், அவரைத் துன்புறுத்தியபோதுஅவர் செய்த பதில் சப்தமின்றி அமர்ந்திருந்ததேயாகும். அநியாயமாய்க்குற்றுஞ்சாட்டப்பட்டவர்கள், முகாந்தாரமின்றிக் கொடுமையாய் நடத்தப்பட்டவர்கள்,கர்த்தருக்கு முன் அமைதியாய் இருப்பதற்கு எவ்வளவு திடான பலன் தேவை என்பதை அறிவார்கள்.

மனிதர் உன்நோக்கத்தை தவறாக அர்த்தப்படுத்தி

உன்மேல் குற்றமுண்டுஎன்று சொல்லும்போது

நீ தவறு செய்தாய்என்று சொல்லும்போது

மௌனமாயிருப்பதே உன்வழி

அவர்களல்ல கிறிஸ்துவேஉன் நீதிபதி

திடன்கொள்,பயப்படாதே.

பரிசுத்த பவுல் இவைகள் ஒன்றும் என்னை அசைப்பதில்லை என்று சொல்லியிருக்கிறான்.

இவைகளில்ஒன்றும் என்னைச் சேதப்படுத்தாது என்று அவன் சொல்லவில்லை. அசைக்கப்படுவதும்,சேதப்படுத்துவதும் வெவ்வேறு வித்தியாசமான காரியங்கள். பரி. பவுல் வெகு இளகிய மனமுடையவர்.பரி. பவுல் அழுததுபோல் வேறு எந்த அப்போஸ்தலனும் அழுததாகச் சொல்லப்படவில்லை. அதிகப்பலனுள்ள மனுஷனே அழுகிறான். மனிதர் எல்லாரிலும் புருஷத்துவம் நிறைந்த மனிதனாகிய இயேசுகண்ணீர் விட்டார். ஆகையால் இவைகளில் ஒன்றும் என்னைச் சேதப்படுத்தாது என்றுசொல்லப்படவில்லை. ஆனால் அந்த அப்போஸ்தலன் தன் நம்பிக்கையினின்றும் சிறிதளவுஅசையாதிருக்க உறுதி செய்துகொண்டான். நாம் எண்ணுகிற பிரகாரம் அவன் எண்ணவில்லை.சௌகரியத்தை அவன் தேடவில்லை. இந்த அழிந்துபோகிற பக்தி வைராக்கியமாயிருப்பதுவும்,அவருடைய புன்னகையைப் பெறுவதுமே அவனுடைய நோக்கமாயிருந்தது. கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதேஅவனுக்கு ஊதியமாகவும், கிறிஸ்துவின் புன்னகையே அவனுக்கு மோட்சமாகவுமிருந்தது.