February

பெப்ரவரி 07

என்ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் (சங்.43:5).

நாம்துக்கித்து இருக்க என்ன நியாயமுண்டு? இரண்டே காரணங்கள் உண்டு. நாம் இதுவரைமனந்திரும்பாவிட்டால் துக்கிக்கவேண்டும். இன்னும் பாவத்தில் ஜீவித்தால்துக்கிக்கவேண்டும்.

இவை இரண்டையும் தவிரதுக்கிக்க ஒரு காரணமுமில்லை. மற்ற யாவற்றையும் ஸ்தோத்திரத்தோடு கூடிய வேண்டுதலாககர்த்தருக்கு முன்பாக ஜெபத்தில் ஏறெடுக்கலாம். நம்முடைய சகல தேவைகளுக்கும், கர்த்தரின்வல்லமையின்பேரிலும், அவர் அன்பின் பேரிலும் உள்ள விசுவாசத்தைப் பயன்படுத்தலாம். நீகர்த்தரில் நம்பிக்கையாயிரு. இதை நினைவுகூருங்கள். எல்லா வேளைகளிலும், கர்த்தர்பேரில்நம்பிக்கையை வைக்கலாம். நம்முடைய தேவை எதுவாயிருந்தாலும், நம் தொல்லைகள் எத்தனைபெரிதாயிருந்தாலும், உதவி கிடைப்பது அரிதாகக் காணப்படினும் நாம் கர்த்தர்மேல்நம்பிக்கை வைப்பதே நமது கடன். அது வீணல்ல என்று பின்பு நாம் அறிந்துகொள்வோம்.கர்த்தரின் உதவி ஏற்ற வேளையில் கிட்டும்.

கடந்த 70 வருடம் 4மாதங்களாகிய என் ஜீவிய நாட்களில் எத்தனையோ ஆயிரம் வேளைகளில் இது உண்மை என்றுகண்டிருக்கிறேன்.

உதவிகிடைப்பது அரிது என்று எனக்குத் தோன்றினபோது உதவி கிடைத்தது.ஏனென்றால் தேவன் தமக்குரிய வழிவகைகள் உடையவராயிருக்கிறார். அவா ஓர்எல்லைக்குட்பட்டவரல்ல. பத்தாயிரம் சமயங்களில் பத்தாயிரம் வித்தியாசமான வகைகளில்கர்த்தர் நமக்கு உதவிசெய்வார். நம் காரியத்தைப் பிள்ளைத் தன்மையின் நம்பிக்கையானமனதுடன் தேவன் முன்னிலையில் வைத்து நம் இருதயத்தின் ஆவலை அவருக்கு அர்ப்பணம் செய்து,நீர் என் விண்ணப்பத்தைக் கேட்டு விடையளிக்க நான் அபாத்திரன், ஆனாலும் என் அருமை இரட்சகர்நிமித்தம் என் ஜெபத்திற்கு விடையளியும். விடையளிக்கும்வரை அமைதியாய்க்காத்திருக்கவும் கிருபையளியும். ஏனென்றால் உமக்குந்த வேளையில், உகந்தமுறையில் பதில்அளிப்பீரென்று நம்புகிறேன் என்று சொல்வதே நம் கடமை.

நான்இன்னும் அவரைப் புகழுவேன். நாம் அதிகமாய் ஜெபித்து விசுவாசத்தைப் பயன்படுத்தி அதிகப்பொறுமையோடு காத்திருந்தால் மிகுதியான ஆசீர்வாதம் பெறுவோம். அநேகந் தடவைகளில் என் ஜீவியத்தில்நான் இச்சத்தியத்தை உண்மையென்று கண்டுள்ளேன். ஆகையால் நான் எனக்குள்ளே அடிக்கடிகர்த்தர்மேல் நம்பிக்கை வை என்று சொல்லிக்கொள்வேன்.