February

பெப்ரவரி 06

கடலை உலர்ந்த தரையாக மாற்றினார். ஆற்றைக் கால் நடையாய்க் கடந்தார்கள். அங்கே அவரில் களிகூர்ந்தோம் (சங்.66:6).

வெள்ளத்தைக் கடக்கையில் அங்கே அவரில் களிகூர்ந்தோம் என்றுசங்கீதக்காரன் சொல்லுகிறான். நடுக்கமும் பயமும் வேதனையும் கொள்வார்களென நாம் எதிர்பார்க்கக்கூடிய இடம் அது. ஆனாலும் அவர்கள் களிகூர்ந்தார்கள்.

இவ்விதமாகதங்கள் அனுபவத்தில் கண்டவர்கள் அநேகருண்டு. துக்கமும் கலக்கமுமான காலங்களில் அவர்கள்அவற்றை மேற்கொள்ளவும் மகிழவும் கூடியவர்களாயிருக்கிறார்கள்.

உடன்படிக்கை செய்வதில் கர்த்தர் எத்தனை சமீபமாயிருக்கிறார். அவருடைய வாக்குத்தத்தங்கள் எத்தனைபிரகாசமாய்த் தோன்றுகின்றன. நாம் சுகமாய் இருக்கும் நாட்களில் இந்த மகிமையைக்காணமாட்டோம். பகலில் நாம் நட்சத்திரங்களைப் பார்க்கக்கூடாதபடி சூரியன்மறைத்துக்கொள்வதுபோல் அவைகள் மறைக்கப்படுகின்றன. துக்கமாகிய இருண்ட இரவுவரும்போதுதான், வேதம் கூறும் ஆறுதல், நம்பிக்கை என்ற நட்சத்திரக் கூட்டங்கள்தெரிகின்றன.

யாபேக்கில்யாக்கோபு கண்டதுபோல் உலக சூரியன் அஸ்தமித்த பின்தான் தேவதூதன் வருகிறான். அவனோடுநாம் போராடி மேற்கொள்ளுகிறோம்.

சாயங்கலாத்தில்ஆரோன் தேவாலயத்தின் விளக்குகளை ஏற்றினான். துன்பமாகிய இரவில்தான் விசுவாசியின்பிரகாசமான விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

நாடு கடத்தப்பட்டுத் தனித்திருக்கும்போதுதான் யோவான் இரட்சகரைக் குறித்து மகிமையானதரிசனங்கண்டான். இப்பொழுதும் அத்தகைய பத்மு தீவுகள் அநேகம் உண்டு. அவற்றைநினைக்கும்போதெல்லாம் தேவனின் பிரசன்னமும், தாங்கும் கிருபையும் நாம் தனிமையிலும்துன்பத்திலும் இருக்கும்பொழுது அவர் நமக்குக் காட்டிய அன்புமே நமது நினைவுக்கு வருகின்றன.

இவ்வுலகதுன்பங்களாகிய யோதானையும் சமுத்திரத்தையும் இப்பொழுதும் கடந்து செல்லும் எல்லாயாத்திரீகர்களும் கர்த்தரின் கிருபைகளை நினைவுகூருகிறார்கள். நித்தியத்தைத் தங்கள் முன்வைத்தே இவ்வாறு நினைவு கூருகிறார்கள். நாங்கள் ஆறுகளைக் கால்நடையாய்க் கடந்தோம்.அங்கே துன்பமாகிய அலை எங்கும் எழும்பி மோதுகையில் அங்கே அவரில் களிகூர்ந்தோம்.

அவளுக்குத்திராட்சைத் தோட்டங்களையும் நம்பிக்கையின் வாசலாகும்படி துன்பத்தின் வாசலையும்கொடுப்பேன்…. அவள் அங்கே…. பாடுவாள்(ஓசி.2:15).