April

ஏப்ரல் 28

ஏப்ரல் 28

இஸ்ரவேல் புத்திரர்கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி,காலேபின் தம்பியாகிய கேனாசுடைய குமாரனாகிய ஒத்தனியேல் என்னும் ஒரு இரட்சகனைஅவர்களுக்கு எழும்பப்பண்ணினார். அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்தது (நியா.3:9-10)

ஆண்டவர் தமக்கான வீரர்களைஆயத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுகிறார். தகுந்த தருணம் வரும்பொழுது, ஒரு கணத்தில்அவர்களுக்கான இடத்தில் அவர்களைப் பொருத்துகிறார். எங்கிருந்து அவ்வீரர் தோன்றினார்களெனஉலகம் அதிசயிக்கிறது.

அருமையான நண்பரே, தூயஆவியானவர் உமது வாழ்க்கையில் ஏற்படுத்தும் கண்டிப்புகள், கட்டுப்பாடுகளின் மூலமாக,நம்மைஆயத்தப்படுத்தட்டும். சலவைக்கல் போன்ற உமது வாழ்க்கைக்கு இறுதிச் சிறுசிறு வேலைகளைச்செய்த பின்னர், அதை ஆண்டவருக்கு உயர் மேடையிலேயோ அழகு மாடத்திலேயோ வைப்பதற்கு இலகுவாகஆயத்தமான வாழக்கையாக இருக்கும்.

ஒத்தனியேலைப்போல, நாமும்மக்களை நியாயம் தீர்த்து, கிறிஸ்து நாதருடன் அவருடைய நாலாயிர ஆண்டு ஆட்சிக் காலத்தில்அரசாளக்கூடிய ஒரு நாள் வரும். மாட்சி நிறைந்த அந்நாள் வருமுன்னர், நம்மை அதற்கெனஆயத்தப்படுத்த ஆண்டவரை நாம் அனுமதிக்க வேண்டும். அவர் ஒத்தனியேலைக் கீரியாத்செம்பேரில் ஆயத்தம் செய்ததுபோல, நமது நாடோடிய வாழ்கையிலும் அவர் நம்மை ஆயத்தம்செய்ய நாம் அனுமதிக்கவேண்டும். தூயஆவியானவர் ஒத்தனியேலை ஆயத்தப்படுதினாரென்றால்,விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவராகியவர் அவனுக்கு ஓர் அரியாசனத்தையும்ஏற்படுத்தியிருந்தாரென்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.

மானிடவன்மையும்,மானிடமேன்மையும்

மானிடவாழ்வின்மகிழ்விலிருந்து வருவதறன்று

அலையற்ற கடலில் மிதக்கும்பாசியல்ல,

அதிலும்மேலாகமுயன்றிடுவோனே வீரனாவான்.

அவ்வப்போதுபள்ளத்தாக்குகளில் இறங்கி, ஏறியே செல்ல வேண்டும். அதேபோலத்தான் வெற்றி எனும் உயர்பாதையிற் செல்ல விரும்பும் எவனும், துன்பங்களாகிய இருண்ட பள்ளத்தாக்குகளின்வழியாகத்தான் சென்றாக வேண்டும்.