April

ஏப்ரல் 27

ஏப்ரல் 27

மரித்தேன், அனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் (வெளி 1:18).

மலர்கள்! ஈஸ்டர் லீலிமலர்களே, பல்லாண்டு காலமாக நீங்கள் துயரப்படும் மக்களுக்குக் கூறிவந்த நிலையான அழியாதவாழ்வின் செய்தியை இன்று காலை எனக்கும் கூறுங்களேன்!

ஞானம் நிறைந்த நல்லநூலாகிய வேதாகமமே! சாவது ஆதாயம் என்னும் உறுதியான நிச்சயத்தை உன்னில் நான்வாசித்துப் பெற்றுக்கொள்ளட்டும்.

கவிஞர்களே! நிச்சயவாழ்வுக்கான நற்செய்தியை உங்களுடைய கவிதைகள்மூலம், மீண்டும் மீண்டும் எனக்கு எடுத்துக்கூறுங்களேன்!

பாடகர்களே! மகிழ்ச்சியின்பாடல்களை உரக்கப் பாடுங்கள்.

உயிர்த்தெழுதலைப்பற்றியகீதத்தை நான் மீண்டும் மீண்டும் கேட்டானந்திக்கட்டும்.

மரங்களே, மலர்களே,பறவைகளை, கடலே, காற்றே, வானமே உயிர்த்தெழுதலின் செய்தியை என் காதில் கூறுங்கள்.அடுத்தடுத்துக் கூறுங்கள். பாடுங்கள், எதிரொலியுங்கள். காற்றிலுள்ள ஒவ்வொரு துகளும்,அணுவும் அதனால் நிரப்பப்படட்டும்.

நம்பிக்கை உறுதியாகுமட்டும்அது மறுபடியும், மறுபடியும் கூறப்படட்டும். நிச்சயம் ஐயமில்லா நிலையாகட்டும். இறுதியில்நாங்களும் அமைதியான, பிரகாசமான முகத்துடனும், உறுதியான விசுவாசத்துடனும், எங்கள்மரணத்திற்குச் செல்லும் நேரத்திலும் பீடு நடைபோட்டுச் செல்லக்கூடியவர்களாகட்டும்.

கவலை நிறைந்த முகத்தினராய்,

கல்லறைகளைக் கவனத்துடன்

பராமரித்துத் துயருறும் மக்களே!

பராமரிக்கும் கல்லறைகளைவிட்டு

பரமனின் நீலநிற வான்தனை நோக்கிப்

பார்க்க உங்கள் கண்களைத் திருப்புங்கள்,

துக்கத்திற்கு இது காலமல்ல,

துயரத்திற்கு நேரம் இதுவல்ல,

துக்கமலர்களையல்ல, இன்பமலர்களையே

தொடுத்து மகிழுங்கள். இன்பத்தையே

தொகுத்து விடுங்கள். இளைத்த ஆன்மாக்கள்

உயிர்ப்பு நாளின் மணியோசை கேட்டிடட்டும்.

இயேசு சாவின் சிறையில் இன்றும்,

இறுகிய கல்லறை அடைப்பிற்குப் பின்னும்,

இருந்திடில் அவர் சாவின் கைதியாய்,

இறை அவர் சாவை வென்றெழா திருப்பின்,

யார்; உம் கண்ணீர் துடைத்திடுவார்?

எவர் அதை நிறுத்தி விட்டிடுவார்?

கிறிஸ்துநாதர் மாண்டேபோயிருந்தால்,

பரிதாபத் துக்கத்திற்கிடமேயில்லை.

அவர் மரணம் ஜெயித்தெழுந்தார்.

அவர் உயிர்த்தெழுந்ததை வென்றார்.

உன் கவலை விட்டுப்பெருமூச்சு ஒழித்திடு,

உயிர்ப்பின் நாளில் உன்னத கீதம் பாடிடும்.

பெயர்பெற்ற போதகர் ஒருவர் உயிர்த்தெழுதல் திருநாளுக்கென அருளுரை ஒன்றை ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். தீடிரென்று அவருடைய மனதில் ஓர் எண்ணம் கவர்ந்தது. அதென்னவெனில் அவருடையகர்த்தர் உயிரோடிருக்கிறார் என்பதே, உணர்ச்சிமேலிட அவர் எழுந்து குதித்தார். அங்குமிங்கும்நடந்தார். ஆம். கிறிஸ்து உயிரோடிருக்கிறார். அவர் நான் இருந்தேன் என்று கூறிய மகான்அல்ல, அவர் நான் இருக்கிறேன் என்று கூறிக்கொண்டேயிருக்கும் கர்த்தர், என்று மீண்டும்மீண்டும் சொல்லிக் கொண்டே உலாவினார். இயேசுநாதரின் வாழ்வு நடந்து முடிந்த ஒருநிகழ்ச்சியல்ல. அது நடந்துகொண்டே இருக்கும் ஓர் உயிருள்ள நிகழ்ச்சியாகும். இதுஉயிர்த்தெழுதலின் நாளின் எத்தனை மேன்மையான உண்மை.

ஓவ்வொருகல்லறையினின்றும் ஓர் உயிர்த்தெழுதலின் மலர் மலரும் என்பதும், ஒவ்வொரு கல்லறையிலும் ஒருதேவதூதன் இருக்கிறான் என்பதும் நமது நம்பிக்கை. நாம் உயிர்த்தெழுந்த கர்த்தர்மீதுநம்பிக்கை வைத்திருப்பவர்கள். கடந்த காலங்களை எண்ணி அவருடைய கல்லறையில்தான் அவரைஆராதிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். மேல் நோக்கி உயிருடன் வாழும் கிறிஸ்துநாதரைத் தொழுவோம். அவர் உயிரோடிருப்பதனால், நாமும் உயிரோடிருப்போம்.