April

ஏப்ரல் 23

ஏப்ரல் 23

நான் துன்பத்தின்நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர் (சங்.138:7).

துன்பத்தின் மத்தியில்போனாலும் என்று எபிரெய பாஷையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவை எத்தனைவிஸ்தரிப்படங்கிய வார்த்தைகள். நாம் கஷ்டப்படும் நாட்களில் தேவைன நோக்கிக்கூப்பிட்டிருக்கிறோம். அவர் இரட்சிப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தைக் காட்டிக்கெஞ்சியுள்ளோம். ஆனால் இரட்சிப்பு அருளப்படவில்லை. சத்துரு நம்மை விடாமல் மென்மேலும்தள்ளிக்கொண்டு போய், போர்முனையில் கஷ்டத்தின் மத்தியில் கொண்டு போய்விடுகிறான்.இதற்குமேல் கர்த்தரைத் தொந்தரவு செய்வது எப்படி என்று நினைக்கிறேன்.

மார்த்தாள் ஆண்டவரே நீர்இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்று சொன்னபொழுது(யோ.12), அவள் நம்பிக்கை இழந்த போதிலும் அவளுக்கு இன்னொரு வாக்குக் கொடுக்கிறார்.உன் சகோதரன் மறுபடியும் எழுந்திருப்பான் என்கிறார். நாம் கஷ்டத்தின் மத்தியில் நடந்துஇரட்சிப்பின் காலம் கடந்துபோயிற்று என்று மார்த்தாளைப்போல், நினைக்கத்தக்கதாகச்சோதிக்கப்படும்போது, அவர் தமது வாக்குத்தத்தத்தால் நம்மைச் சந்திக்கிறார். நான்துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை இரட்சிப்பீர்.

அவருடைய பதில் அநேகநாட்கள் தாமதித்தாலும், நாம் துன்பத்தின் மத்தியில் நடந்து போனாலும் துன்பத்தின்மையமே நம்மை அவர் கைவிடாது இரட்சிக்கும் இடமாகும். மேலும், நம்பிக்கைக்கு இடமில்லைஎனத் தோன்றும் நேரமே, அவர் சத்துருவின் உக்கிரத்திற்கு எதிராய்த் தமது கரத்தை நீட்டி தம்மை நம்பினோருக்கு ஜெயமாய் முடியச் செய்யும்வேளையாகும். நாம் ஏன் மனம் சோர்ந்துபோகவேண்டும்?

புயலின் மையம்
சுழல் காற்று உன்னைத்தூக்கிச் செல்லும்
என்று அஞ்சாதே!
புயல் வரும் என்றுபயத்தோடு காத்திராதே!
கல் மழையாகிய அதன்சாட்டையைப் பார்த்து நடுங்காதே!
புயலின் விளிம்பை விட்டுநடுவே செல்
அங்கு சூரிய ஒளி உண்டு,தங்கத் தாழ்வாரம் உண்டு.
விசுவாச புயலின்கொடுரத்தின் மத்தியிலும்
அவரைக் காணும்.

உக்கிரப் புயல் வீசிக் குமுறும்
பயமுறுத்தும் தீங்கு கரையில் மோதும்.
அலைகள் மலைகளாகும், வயல்கள் போர்க்களங்களாகும்.
ஆனால் கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஆத்துமா,
புயலிலும் அமைதி கண்டு தைரியமாய்ப் பாடும்.
இரவின் இருளிலும் நம்பிக்கை இழக்கலாகாது
புயல்காற்று ஒளியை சிறிது மறைத்தாலும்
மிகுந்த இருளுக்கப்பால் வெள்ளி மிளிரும்.
பரலோக ஒலி அவரின்பால் உனதாகும்.

துக்கம் உன் கண்களை மறைக்காமல் பார்த்துக்கொள்
தேவனின் முகத்தையும், அவர் நீல மேகத்தையும் பார்.
ஆபத்திற்கும் பாவத்திற்கும் மறைவு புயலே.
பத்திரமாய் இருக்கத் தேவனே உன்னை
அதனுள் அழைத்துச் செல்கிறார்
அவரோடிருக்கையில் கடுங்காற்று அமரும்
காற்றின் சீற்றத்தில்தான் பாடல் தொனி உண்டு.
புயல் மேகம் வருகையில் அமைதியாய்ச் சந்தோஷமாயிரு.
புயலின் மையத்தில் தேவன் தம் பிள்ளையைப்பார்த்துப்
புன்னகை பூக்கிறார்.