April

ஏப்ரல் 3

ஏப்ரல் 3

நெருப்பில் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள் (ஏசா.24:15)

இல் என்ற வார்த்தையை கவனியுங்கள். நமக்குத் துன்பத்தையளிக்கும் சோதனையில் அவரை நாம் மகிமைப்படுத்தவேண்டும். தேவன் தமது பக்தர்களில் சிலரை சோதனையாகிய நெருப்பின் வெம்மையை உணரவிடவில்லை. என்றாலும் நெருப்பு சுடும் தன்மையுடையது.

இந்த இடத்தில்தான் அவருடைய சற்குணம், அன்பு என்பதில் நாம் வைக்கிற பூரண விசுவாசத்தினால் அவரை மகிமைப்படுத்தவேண்டும். அந்த அன்பே இச்சோதனை நமக்கு வர அனுமதித்தது. மேலும் இச் சோதனையால் தேவனுக்கு அதிக மகிமை வரும் என்று நம்பவேண்டும்.

பெரிய விசுவாசமின்றி, இந்த அக்கினியூடே நாம் செல்ல இயலாது. அற்ப விசுவாசம் நாம் தவற ஏதுவாகும். அக்கினி ஜுவாலையின்மேல் நாம் வெற்றிபெறவேண்டும்.
ஒரு மனிதன் துன்ப காலத்தில் காட்டும்பக்தியே உள்ளான பக்தி. எரியும் அக்கினி ஜுவாலைக்குள் போடப்பட்டவர்கள், கட்டவிழ்க்கப்பட்டதைத் தவிர்த்து, மற்றெல்லா விதத்திலும் உள்ளே போடப்பட்டபடியே வெளியே வந்தார்கள்.

அநேகந் தடவைகளில், தேவன் அவர் பிள்ளைகளை அக்கினியாகிய சோதனையினின்று வெளியேற்றுகிறார். அவர்கள் உடல் சேதமின்றியிருந்தது. அவர்கள் தோல் கொப்பளிக்கவில்லை. அவர்கள் தலைமயிர் கருகவில்லை. நெருப்பின் வாசனையும் அவர்கள்மேல் வீசவில்லை. கிறி ஸ்தவர்கள் சோதனையாகிய அக்கியிலிருந்து இவ்விதமாய்க் கட்டுகளிலிருந்து விடுதலை பெற்று, ஜுவாலையால் தொடப்படாமல் வெளியேற வேண்டும்.

அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார் (கொலோ.2:15). இதுவே உண்மையான வெற்றி. வியாதியில் வியாதின்மேல் வெற்றி கொள்ளவேண்டும். செத்துப் போவதாயிருந்தாலும் சாவின்மேல் வெற்றியடையவேண்டும். எதிர்மாறான சந்தர்ப்பங்களில், அவற்றின் மேலும் வெற்றி அடையலாம். போரில் நம்மை ஜெய வீரராக எழும்பச் செய்யும் வன்மை ஒன்றுண்டு என்ற என் வார்த்தைகளை நம்புங்கள். நாம் ஏறவேண்டிய உன்னதமான இடங்கள் உண்டு. அங்கிருந்து நாம் வந்த பாதையைக் கீழ் நோக்கிப் பார்த்து, பரலோகத்தின் இக்கரையிலேயே வெற்றிக் கீதம் பாடுவோம்.

நாம் தரித்திரராயிருக்கையில், மற்றவர்கள் நம்மை ஐசுவரியவான்கள் என்று மதிக்கச் செய்யவும், நாம் தரித்திரராயிருக்க, அநேகரை ஐசுவரியவான்களாக்கவும் கூடும். அதிலே நம்முடைய வெற்றி உண்டு. கிறிஸ்துவின் வெற்றி, அவர் தாழ்த்தப்பட்டதில் இருந்தது. மற்றவர்கள் பார்வையில் இழிவாய்த் தோன்றுவதே நமக்கு வெற்றியாயிருக்கலாம்.

அநேக வருத்தங்களால் பாரமடைந்திருக்கும் ஒரு பெண் அல்லது ஆண் நிம்மதியான இருதயம் உடையவராய் இருக்கக் கண்டால், அந்தக் காட்சி நம் மனதைக் கவருகிறதல்லவா? வெகுவாய்ச் சோதிக்கப்பட்டு, ஜெயவீரனாக விளங்கும் ஒருவனைக் காணும்போது அவனுடைய தீரம் நம்மை உயிர்ப்பிக்கதல்லவா? யாத்திரிகன் ஒருவன் உடல் களைப்படைந்தவனாயிருந்தும், நீங்காப் பொறுமையின் அழகைப் பெற்றவனாயிருந்தால், அது ஊக்கம் அளிக்கிறதல்லவா? அவருடைய கிருபையின் ஈவுக்கு இவை யாவும் எத்தனை அருமையான காட்சிகள்.

நீ யாவற்றை இழந்தாலும்,
வாழ்க்கை கொந்தளிக்கும் கடல்போலிருப்பினும்,
கர்த்தரால் அதிசயமாக பாதுகாக்கப்பட்டு
திருப்தியாக அமைதியாக, விடுவிக்கப்பட்டுள்ளாயா?