September

தீமையை வெல்லுவது எப்படி?

September 28

“Be not overcome of evil, hut overcome evil with good.” (Rom. 12:21)

If this verse had been written by uninspired men, it would have said, “Don’t let people walk all over you. Give them back a dose of their own medicine.” The world thinks in terms of retaliation and of revenge.

But we learn a different lesson in the school of Christ. We should not allow ourselves to be overpowered by evil. Rather we should use good to defeat evil.

A story attributed to Francis of Assisi illustrates the point. As a little boy was playing in the neighborhood of his home, he discovered that there was an echo when he shouted. It was his first experience with echoes, so he began to experiment. He shouted “I hate you” and the message came back “I hate you.” Raising his volume, he hollered “I hate you” and the words came back with greater intensity “I hate you.” The third time he cried out with all his strength “I hate you” and the words bounced back with great vehemence “I hate you.” This was all he could take. He ran back to his house, sobbing convulsively. His mother had heard the loud yelling out in the yard, but still she asked, “What’s the matter, dear?” He answered, “There’s a little boy out there who hates me.” She thought for a moment, then said, “I’ll tell you what to do. You go outside and tell that little boy that you love him.”

So the youngster ran out and called out “I love you.” Sure enough, the words came back, clear and gentle, “I love you.” He called again with greater emphasis, “I love you” and once again he heard the answering “I love you.” A third time he cried out with deep sincerity, “I love you” and the words came back to him tenderly, “I love you.”

As I write this, people all over the world are shouting “I hate you” at one another and wondering why tensions keep mounting. Nations are expressing hatred of other nations. Religious groups are locked in combat. Races are striving against one another. Neighbors are quarreling over the back fence. And homes are torn by quarrels and bitterness. These people are allowing themselves to become conquered by evil, because hate breeds hate. If they would just change their strategy by repaying hatred with love, they would conquer evil with good. They would discover that love breeds love.

We can never be too careful
What the seeds our hands shall sow;
Love from love is sure to ripen,
Hate from hate is sure to grow.

செப்டெம்பர் 28

நீ தீமையினாலே வெல்லப்படாமல் தீமையை நன்மையினாலே வெல்லு. ரோமர்12:21

தீமையை வெல்லுவது எப்படி?

ஆவியினால் ஏவப்படாத மனிதர்கள் இவ்வசனத்தை எழுதியிருந்தால், ‘உன்மீது ஏறி மனிதர்களை நடக்க விடாதே, அவர்கள் கொடுக்கும் அடியை அவர்களுக்கே திருப்பிக்கொடு” என்றே எழுதியிருப்பார்கள். பழிக்குப் பழி வாங்குதலையும் வஞ்சகம் தீர்த்துக் கொள்ளுதலையும் பற்றியே இவ்வுலகம் சிந்திக்கிறது.

ஆனால், கிறிஸ்துவின் பள்ளியில் வேறொரு பாடத்தை நாம் கற்கிறவர்களாக இருக்கிறோம். தீமையானது நம்மைக் கட்டுப்படுத்துவதற்கு இடங்கொடுக்கக் கூடாது. மாறாக, நாம் நன்மையைச் செய்து அதன் மூலமாகப் பொல்லாங்கைத் தோற்கடிக்க வேண்டும்.

அசிசியைச் சேர்ந்த பிரான்ஸிஸ் என்பவரைப் பற்றி கதையொன்று இதனை விளக்கிக் கூற வல்லதாயிருக்கிறது. அவர் சிறுவனாய் இருந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். வீட்டின் அருகே உள்ள இடத்தில் அச்சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அங்கே எதிரொலி கேட்கிறது என்பதை அவன் அறிந்தான். எதிரொளியோடு அவன் உரையாடுவது அவனுக்குப் புது அனுபவமாயிருந்தது. அதனை அறிந்துகொள்வது அவனுக்கு மிகவும் ஆவலுடையதாகயிருந்தது. ‘நான் உன்னை வெறுக்கிறேன்” என்று சத்தமாகக் கூறினான். ‘நான் உன்னை வெறுக்கிறேன்” என்ற தொனி எதிரொலித்தது. தன்னுடைய குரலை உயர்த்தி ‘நான் உன்னை வெறுக்கிறேன்” என்று மீண்டும் கத்தினான். ‘நான் உன்னை வெறுக்கிறேன்” என்ற எதிரொலி பதிலாகக் கிடைத்தது. மூன்றாம் முறை அவன் தனது பலத்தையெல்லாம் கூட்டி, ‘நான் உன்னை வெறுக்கிறேன்” என்று மிகுந்த சத்தத்தோடு கத்தினான். அதே பலத்தோடு ‘நான் உன்னை வெறுக்கிறேன்” என்ற பதில் மகா சத்தத்தோடு திரும்பி வந்தது. அதற்கு மேலாக அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தேம்பி அழுதவனாக தன் வீட்டை நோக்கி ஓடினான். அவனுடைய அழுகையைக் கேட்ட தாய் ‘என்ன நடந்தது என் மகனே?” என்று பரிவோடு கேட்டாள். ‘அருகில் வசிக்கும் ஒரு சிறுவன் என்னை வெறுக்கிறான்” என்ற சிறுவன் அழுதவண்ணம் பதில் கூறினான். சற்று யோசித்த புத்தியுள்ள தாய், ‘நீ என்ன செய்ய வேண்டுமென்று உனக்குச் சொல்லித் தருகிறேன். வெளியில் சென்று அந்தச் சிறுவனிடம் உன்னிடத்தில் அன்பு கூருகிறேன் என்று சொல்” என்று கூறினாள்.

உடனடியாக வெளியே ஓடிச்சென்ற சிறுவன், ‘நான் உன்னிடத்தில் அன்பு கூருகிறேன்” என்று கூறினான். எதிர்பார்த்த வண்ணம் மிகத்தெளிவான, மிருதுவான குரல், ‘நான் உன்னிடத்தில் அன்பு கூருகிறேன்” என்று எதிரொலித்தது. ஊக்கத்தோடு, ‘நான் உன்னிடத்தில் அன்பு கூருகிறேன்” என்று கூறிய சிறுவனுக்கு மீண்டும் அதே பதில் கிடைத்தது. மூன்றாவது முறையாக அவன் உள்ளத்தின் நிறைவோடு, ‘நான் உன்னிடத்தில் அன்பு கூருகிறேன்” என்று சத்தமிட்டான். அதே அன்போடு அவன் பதிலைப் பெற்றுக்கொண்டான்.

இதை நான் எழுதுகிற வேளையில், உலகில் உள்ள மக்கள் அனைவரும், ‘நான் உன்னை வெறுக்கிறேன்” என்று ஒருவரை நோக்கி ஒருவர் சத்தமிட்டுக் கூறிவிட்டு ஏன் மனிதர்கள் இவ்வளவு பதற்றம் அடைகின்றனர் என்று வியப்படைகின்றனர். நாடுகள் மற்ற நாடுகளின்மீது கொண்டுள்ள வெறுப்பைத் தெரிவிக்கின்றன. சமயக்குளுக்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்கின்றன. ஓரினத்தார் மற்றோரினத்தாரோடு சண்டையிட்டுக்கொள்கின்றனர். அடுத்த வீட்டுக்காரர்கள் கொல்லைப்புற வேலி எங்கே போடவேண்டுமென்று சண்டையிடுகின்றனர். கசப்பினாலும், சண்டையினாலும் குடும்பங்கள் சிதறுகின்றன. தீமையினால் வெற்றிகொள்ளப்படுவதற்கே மனிதர்கள் தங்களை ஒப்புவிக்கின்றனர். வெறுப்பு ,வெறுப்பைப் பெருகச் செய்கிறது. வெறுப்பற்குப் பதிலாக அன்பைச் செலுத்துகிறவர்களாகத் தங்களுடைய நடத்தையை மனிதர்கள் மாற்றிக் கொண்டால், தீமையை நன்மையால் வெல்லுகிறவர்களாக அவர்கள் மாறி விடுவர். அன்பு அன்பைப் பெருக்குகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

28. September

»Lass dich nicht vom Bösen überwinden, sondern überwinde das Böse mit dem Guten.« Römer 12,21

Wenn dieser Vers von Menschen geschrieben worden wäre, die nicht von Gott inspiriert wären, dann hätte er ungefähr so gelautet: »Lasst euch nicht von den Leuten unterkriegen. Schlagt sie mit ihren eigenen Waffen.« Denn die Welt denkt nur in Ausdrücken der Vergeltung und Rache.

Aber in der Schule Jesu Christi lernen wir etwas ganz anderes. Wir sollen nicht zulassen, dass wir vom Bösen überwältigt werden. Wir sollen vielmehr das Gute benutzen, um das Böse zu besiegen.

Eine Geschichte, die man Franz von Assisi zuschreibt, verdeutlicht das sehr gut. Ein kleiner Junge entdeckte beim Spielen plötzlich, dass es ein Echo gab, wenn er laut rief. Es war das erste Mal, dass er ein Echo hörte, und so fing er gleich an, es auszuprobieren. Er rief: »Ich hasse dich!«, und prompt kam der Satz auch wieder zurück: »Ich hasse dich!« Jetzt strengte er sich an und schrie noch lauter: »Ich hasse dich!!«, und die Worte kamen auch mit größerer Lautstärke zurück. Zum dritten Mal brüllte er aus Leibeskräften: »Ich hasse dich!!!«, und die Worte erklangen ihm mit der
gleichen Heftigkeit entgegen: »Ich hasse dich!!!« Mehr konnte der Junge nicht ertragen. Er lief zurück ins Haus und schluchzte erbärmlich. Seine Mutter hatte das laute Schreien vom Hof her gehört, aber sie fragte doch: »Was ist denn los, mein Kleiner?« Und der Junge antwortete: »Da draußen ist ein kleiner Junge, und der hasst mich!« Die Mutter dachte einen Moment nach, und dann sagte sie: »Pass auf, ich weiß, was du jetzt tun musst. Du gehst wieder nach draußen und sagst dem kleinen Jungen, dass du ihn lieb hast.«

Also lief der Kleine wieder nach draußen und rief laut: »Ich hab dich lieb.« Und mit der gleichen Zuverlässigkeit kamen die Worte zurück, deutlich und freundlich: »Ich hab dich lieb.« Noch einmal erhob er die Stimme mit größerer Betonung und lauschte wieder auf die Antwort. Und zum dritten Mal rief er aus ganzem Herzen: »Ich hab dich lieb!«, und mit der gleichen Zärtlichkeit kam es zurück: »Ich hab dich lieb!«

Während ich dies hier schreibe, rufen Menschen überall in der Welt einander zu: »Ich hasse dich!«, und fragen sich gleichzeitig, warum die Spannungen immer weiter zunehmen. Völker drücken ihren Hass gegen andere Völker aus. Religiöse Gruppen haben sich durch ihre Konflikte regelrecht verbarrikadiert. Verschiedene Rassen kämpfen miteinander. Nachbarn haben Streit, den sie über den Gartenzaun hinweg austragen. Und Familien werden durch Zank und Verbitterung zerrissen. Alle diese Menschen lassen es zu, dass sie vom Bösen überwältigt werden, weil Hass immer neuen Hass hervorbringt. Wenn sie einfach ihr Vorgehen ändern und Hass mit Liebe vergelten würden, dann könnten sie das Böse mit Gutem überwinden. Dann würden
sie entdecken, dass Liebe wieder Liebe hervorbringt.

Sorgsam lasst uns darauf achten, Welche Saat wir streuen aus; Liebe nur lässt Liebe reifen, Säen wir Hass, wird Hass daraus.