September

ஏற்ற சாட்சிகளை எழுப்பும் தேவன்

September 26

“I have reserved to myself seven thousand men, who have not bowed the knee to the image of Baal.” (Rom. 11:4)

God never leaves Himself without a witness. In the darkest days, a voice sounds out for Him in clear, articulate tones. Often in the most unusual circumstances, He raises up some unexpected confessor to speak His Name boldly.

In the days before the flood, the earth was gripped by violence and immorality. But Noah was there to take a valiant stand for the Lord.

It seemed to Elijah that all Israel had sunk in idolatry, but God had 7000 men that had not bowed to Baal.

In the midst of spiritual deadness and moral decline John Hus, Martin Luther and John Knox stepped forth on the stage of history to defend the cause of the Most High.

More recently, God was acknowledged when the telegraph was discovered. The first message to be transmitted was “What hath God wrought!”

When Apollo 8 was returning to the earth after the first manned flight to the moon, on Christmas Eve, 1968, three astronauts took turns reading from Genesis 1:1-10, then concluded, “And from the crew of Apollo 8 we close with…God bless you, all of you on the good earth.”

In spite of the enraged protests of infidels, the United States Postal Service issued an Apollo 8 stamp with words from Genesis 1:1, “In the beginning…”

The currency of the United States bears the motto “In God we trust.”

The calendar abbreviation A.D. reminds us that this is the year of our Lord (Anno Domini).

Is it a coincidence that the stellar heavens feature a virgin, a man-child, a serpent and a cross—all important participants in the drama of redemption? Is it the Gospel in the stars?

Even atheists sometimes slip by acknowledging the Lord. An atheistic ruler said at a summit meeting in Austria in 1979, “God will not forgive us if we fail.”

There is a certain moral imperative in the universe that our God be publicly acknowledged. When the disciples praised the Lord Jesus as the King that had come in the Name of the Lord, the Pharisees demanded that Christ rebuke them. But He said to them, “I tell you that, if these should hold their peace, the stones would immediately cry out” (Lu. 19:40).

We need not fear that God’s name will ever be unsung or His honor neglected. At the very time when men pronounce Him dead, He will raise up some witness to confound His enemies and comfort His friends.

செப்டெம்பர் 26

பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன். ரோமர் 11:4

ஏற்ற சாட்சிகளை எழுப்பும் தேவன்

தம்மைப்பற்றி எடுத்துரைக்கும் சாட்சியின்றி ஒருக்காலும் தேவன் தனித்திருப்பதில்லை. மிகவும் இருள் சூழ்ந்த காலத்திலேயும் தடைகளின்றி தெளிவான குரலில் அவருக்கென்று சப்தம் தொனிக்கும். நெறிதவறி அசாதாரவமாக விளங்கும் சூழ் நிலைகளிலும், அவருடைய திருப்பேரைத் துணிவுவோடு அறிக்கை செய்யக்கூடிய எதிர்பாராத ஒருவரை அவர் எழுப்புவார்.

ஐலப்பிரளயத்திற்கு முன்னர் இப்புவியானது வன்செயலிலும், ஓழுக்கக்கேட்டினாலும் சீர்கெட்டுப் போயிருந்தது. ஆனால், கர்த்தருக்காக அன்று நோவா துணிவுடன் செயல்ப்பட்டான். இஸ்ரவேலர் நாட்டினர் அனைவரும் சிலை வணக்கத்திற்கு மூழ்கிப்போயினர் என்று எலியா நினைத்தான். ஆனால், பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம் பேர் தேவனுக்கென்று இருந்தனர்.

ஆவிக்குரிய வீழ்ச்சியும், ஒழுக்கக்கேடும் நிறைந்திருந்த காலத்தில், ஜான்ஹஸ், மார்டின்லூத்தர், ஜான்நாக்ஸ் என்பார் இவ்வுலக வரலாற்றில் மாஉன்னதமுடைய நோக்கத்தை நிலைநிறுத்தி காத்திட துணிவுடன் செயலாற்றினர்.

தொலைத்தந்தி கண்டுபிடிக்கப்பட்ட நாளில் தேவனுடைய திருப்பெயர் பாராட்டப்பட்டது. ‘தேவன் நிறைவேற்றிய ஒன்று” என்றே முதல் செய்தி அனுப்பப்பட்டது. அப்பொலோ 8 என்னும் விண்கலம் நிலவிற்கு மனிதனை ஏந்திச்சென்று இப்புவிக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. அந்த நாள் 1968ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் விழாவிற்கு முந்தின இரவு, விண்கலனில் இருந்த மூன்று விண்வெளி வீரர்கள் ஆதியாகமம் 1:1-10 ஆகிய வசனங்களைப் படித்தனர். ‘அப்பொலோ 8-இல் பயணம் செய்யும் விண்வெளி வீரர்களாகிய நாங்கள் அனுப்பும் செய்தி இதுவே. நல்ல பூமியின் குடிகளே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று சொல்லி முடித்தனர்.
தேவ நம்பிக்கையற்றவர்கள் பலத்த எதிர்ப்பைத் தொரிவித்தனர். என்றாலும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ‘ஆதியிலே தேவன்” என்ற சொற்றொடருடன் அப்பொலோ 8இன் தபால் தலையை வெளியிட்டனர். ‘தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறோம்” என்று அந்த நாட்டின் பணத்தின் மீது முத்திரை பொறிக்கப்பட்டிருக்கிறது.

நாள்காட்டியில் கி.பி. என்று எழுதியிருப்பது கர்த்தருடைய ஆண்டைக் குறிக்கிறது.

வானத்து நட்சத்திரங்களில் ஒரு கூட்டத்தைக் கோடிட்டு இணைத்துப் பார்க்கும்போது ஒரு கன்னி, ஒரு ஆண் குழந்தை, ஒரு சர்ப்பம், ஒரு சிலுவை, ஆகியவற்றின் படம் தெரிகின்றது. இவையாவும் மீட்பின் பிரதிபலிப்பாக ஜொலிக்கின்றன. இதற்குச் சிறப்பேதும் இல்லையா? விண்மீன்கள் விளம்பும் நற்செய்தி அல்லவா இது!.

சில வேளைகளில், தேவன் இல்லையென்று வாதிடுகிறவர்களும் கர்த்தருடைய பெயரில் சில அறிக்கைகளைச் செய்கின்றனர். 1979-ஆம் ஆண்டு ஆஸ்ட்ரிய நாட்டில் நடந்த பன்னாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் ஒரு நாத்திகத் தலைவர், ‘நாம் இதில் தவறுவோமென்றால் தேவன் நம்மை மன்னிக்கமாட்டார்.” என்று கூறினார்.

இப்பிரபஞ்சத்தில் தேவனுடைய திருப்பெயர் வெளியரங்கமாக அறிக்கை செய்யப்படவேண்டும் என்னும் ஒழுங்கு கட்டளையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று சீடர்கள் இயேசு கிறிஸ்துவைப் புகழ்ந்து போற்றிய வேளையில், பரிசேயர்கள், சீடர்களை அதட்டும்படி இயேசு கிறிஸ்துவினிடம் வேண்டினர். ஆனால் கர்த்தரோ, ‘இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும்” என்று அவர்களுக்குப் பதிலுரைத்தார். (லூக்கா 19:40).

தேவனுடைய நாமம் பாராட்டைப் பெறாது என்றோ, புறக்கணிக்கப்படும் என்றோ நாம் அச்சம்கொள்ளத் தேவையில்லை. அவர் இறந்து போய்விட்டார் என்று மனிதர்கள் கூறும்போது, அவருடைய எதிரிகள் குழப்பமடையத்தக்கவாறும் அவருடைய நண்பர்கள் ஆறுதல் அடையும்படியும் எவரேனும் ஒருவரைக் கர்த்தர் சாட்சியாக எழுப்புவார்.

அயர்லாந்து நாட்டில் ஆன்மீக எழுப்புதல் ஏற்பட்ட 1859-ஆம் ஆண்டில்,படிப்பறியா ஒரு எளிய மனிதன் இரட்சிக்கப்பட்டான். பின்னர், அவன் 1300 நபர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்ந்தான். அவன் தன்னுடைய எளிய சாட்சியினால் 600-க்கும் அதிகமான உடன் வேலையாட்களை கிறிஸ்துவினண்டை வழிநடத்தினான்.

26. September

»Ich habe mir siebentausend Mann übrig bleiben lassen, die vor Baal das Knie nicht gebeugt haben.« Römer 11,4

Gott bleibt niemals ohne einen Zeugen. Noch in den dunkelsten Tagen erschallt irgendwo eine Stimme für Ihn, die ein klares Zeugnis für Ihn ablegt. Er erweckt oft unter den ungewöhnlichsten Umständen einen unerwarteten Bekenner, der Seinen Namen mutig ausspricht.

In den Tagen vor der Sintflut war das Leben auf der Erde bestimmt von Gewalt und Unmoral. Aber Noah war da, der tapfer zu dem Herrn stand.

Elia kam es so vor, als ob ganz Israel dem Götzendienst verfallen wäre, aber Gott hatte noch 7000 andere, die sich nicht vor dem Baal gebeugt hatten.

Mitten in geistlicher Leblosigkeit und moralischem Verfall traten Johannes Hus, Martin Luther und John Knox auf die Bühne der Geschichte, um die Sache des Höchsten zu verteidigen.

Nicht ganz so lange ist es her, dass die Telegraphie erfunden worden ist. Die erste Botschaft, die auf diesem Wege übermittelt wurde, hieß: »Siehe, was hat Gott getan!«

Als das Raumschiff Apollo 8 von seinem ersten bemannten Mondflug zur Erde zurückkehrte, lasen drei Astronauten am Weihnachtsabend 1968 abwechselnd aus 1. Mose 1-10 vor und sagten zum Abschluss: »Und wir von der Mannschaft der Apollo 8 wünschen Ihnen, dass … Gott Sie segnen möge, Sie alle auf der guten Erde.«

Trotz der wütenden Proteste von Ungläubigen gab die Post der Vereinigten Staaten eine Briefmarke zu Apollo 8 heraus mit Worten aus 1. Mose 1: »Im Anfang …«

Die Banknoten der USA tragen die Inschrift »Auf Gott vertrauen wir.« Die alten Worte »Anno Domini« bei der Angabe eines Datums erinnern daran, dass das das Jahr unseres Herrn ist.

Selbst Atheisten erkennen manchmal aus Versehen den Herrn an. Ein atheistischer Machthaber sagte bei einem Gipfeltreffen 1979 in Österreich: »Gott wird uns niemals verzeihen, wenn wir jetzt versagen.«

Es gibt ein gewisses moralisches Gebot in der Welt, dass unser Gott öffentlich anerkannt und gelobt werden soll. Als die Jünger den Herrn Jesus Christus als den König priesen, der im Namen des Herrn zu ihnen kam, da verlangten die Pharisäer, dass Christus sie deswegen tadeln und zum Schweigen bringen sollte. Aber Er erwiderte: »Ich sage euch, wenn diese schweigen, so werden die Steine schreien« (Lukas 19,40).

Wir brauchen uns gar keine Sorgen zu machen, dass Gottes Name irgendwann einmal nicht mehr besungen oder dass Ihm nicht mehr genug Ehre zukommen wird. Immer dann, wenn die Menschen Ihn für tot erklären, wird Gott selbst einige Zeugen erwecken, die Seine Feinde beschämen und Seine Freunde trösten werden.