September

அக்கினிக் கடலுக்குத் தப்புதல்

September 27

“But the fearful, and unbelieving, and the abominable, and murderers, and whoremongers, and sorcerers, and idolaters, and all liars, shall have their part in the lake which burneth with fire and brimstone: which is the second death.” (Rev. 21:8)

It probably comes as a shock to anyone reading this verse that the fearful and unbelieving are listed together with what we would think of as outrageous, vile sinners, and that they will share the same punishment for all eternity.

It probably comes as an added surprise to note that the fearful are listed first. This should be tremendously sobering to any who excuse their timidity as a trifling matter. Perhaps they are afraid to accept the Lord Jesus because of what their friends might say, or because they are of a naturally retiring disposition. God does not excuse it as a trifle; He views it as culpable cowardice.

It should also be sobering to those who are listed second—the unbelieving. We hear people say, “I can’t believe” or “I wish I could believe.” But those are insincere statements. There is nothing about the Savior that makes it impossible for men to believe in Him. The trouble does not lie in man’s intellect but in his will. Unbelievers don’t want to believe on Him. The Lord Jesus said to the unbelieving Jews of His day, “…you refuse to come to me to have life” John 5:40 NIV).

No doubt many of the fearful and unbelieving think of themselves as decent, cultured and moral people. In this life they would want nothing to do with murderers, with the immoral, or with those who practice magic arts. But the irony is that they will spend eternity together because they never came to Christ for salvation.

Their doom is “the lake which burneth with fire and brimstone: which is the second death.” This is, of course, the supreme tragedy. People may argue about the existence of hell and the fact of eternal punishment, but the Bible is very explicit. Hell does exist at the end of a Christless life.

What makes it especially sad is that neither the fearful or the unbelieving or any of the others listed in our verse have to go to the lake of fire. It is completely unnecessary. If they would just repent of their fears and doubts and other sins, and turn to the Lord Jesus in simple, trusting faith, they would be forgiven, cleansed and made fit for heaven.

செப்டம்பர் 27

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபச்சாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர், அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள். வெளிப்படுத்தல் 21:8.

அக்கினிக் கடலுக்குத் தப்புதல்

அட்டூழியம் செய்கிறவர்கள், பயங்கரமான பாவிகள் என்று கருதப்படுகிறவர்களோடு, பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும் சேர்த்து பட்டியல் இடப்பட்டள்ளதையும், என்றென்றும் அவர்கள் அனைவரும் ஒரேவிதமான தண்டனையை அனுபவிக்கப் போகின்றனர் என்பதையும் இவ்வசனத்தின் மூலமாக அறிகிற எவருக்கும் இவ்வுண்மை அதிர்ச்சியைத் தரும்.

இப்பட்டியலில் முதலாவதாக, பயப்படுகிறவர்கள் சொல்லப்பட்டிருக்கிறது நமக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது. தங்களுடைய கோழைத்தனத்தை அற்பமான விஷயம் என்று எண்ணுகிறவர்களுக்கு இந்த உண்மை மிகுந்த கவலையைத் தரும். அவர்களுடைய நண்பர்கள் என்ன கூறுவார்களோ என்று எண்ணி ஒதுங்கி வாழும் இயல்புடைய மனப்பாங்கினாலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள அவர்கள் அஞ்சுகிறவர்களாக இருக்கலாம். இதை அற்பமானது என்று தேவன் பொறுத்துக் கொள்வதில்லை. அவர் இதனைத் தண்டனைக்குரிய குற்றமாவே கருதுகிறார்.

பட்டியலில் அடுத்த இடத்தில் இருக்கிறவர்களாகிய அவிசுவாசிகளுக்கும் இது மனக்கவலையை தருவதாக இருக்கிறது. ‘என்னால் நம்ப முடியவில்லை” அல்லது ‘நான் நம்ப விரும்புகிறேன்” என்று சில மனிதர்கள் கூறுவதைக் கேட்கிறோம். அவர்களுடைய அறிக்கைகள் நேர்மையானவை அல்ல. அவரை அவர்கள் நம்பக் கூடாதபடி, இரட்சகர் தம்மைப் பற்றிய உண்மைகளை மனிதர்களுக்குக் கடினமாக வைக்கவில்லை. மனிதனுடைய அறிவாற்றலில் பிரச்சனை எதும் இல்லை. அவனுடைய சித்தத்திலேதான் அது இருக்கிறது. அவிசுவாசிகள் அவரிடத்தில் நம்பிக்கை கொள்ள விரும்புவதில்லை. விசுவாசிக்காத யூதர்களிடம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, ‘உங்களுக்கு ஐPவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.” என்று இப்புவிவாழ்வின்போது கூறினார் (யோவான் 5:40).

பயப்படுகிறவர்கள் மற்றும் அவநம்பிக்கை உடையவர்களில் பொரும்பாலோர் தங்களைப் பெருந்தன்மை வாய்ந்தவர்களென்றும், பண்பாடுமிக்கவர்கள் என்றும், ஒழுக்கமுடையவர்கள் என்றும், நினைத்துக் கொள்கின்றனர் என்பதில் ஐயமேதுமில்லை. கொலைகாரர்கள், ஒழுக்கக்கேடானவர்கள், சூனியக்காரர்கள், ஒருவரோடும் அவர்கள் இவ்வாழ்வில் எவ்விதத் தொடர்பும் கொள்வதில்லை. இருந்தபோதிலும் அவர்கள் இரட்சிப்படைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடம் வராத காரணத்தினால், தங்களது நித்தியத்தை அப்படிப்பட்டவர்களோடு கழிக்கப்போகிறார்கள் என்பது வினைப்பயனாக இருக்கிறது.

‘இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலே” அவர்களுடைய முடிவாயிருக்கிறது. இது மிகவும் கொடிய சோகக் கதையாகும். நரகம் உண்டோ என்றும் நித்திய தண்டனை அளிக்கப்படுமோ என்றும் மக்கள் எதிர்வாதம் புரிகின்றனர். ஆனால், திருமறை அதைக் குறித்து மிகவும் வெளிப்படையாகப் பேசுகிறது. கிறிஸ்துவற்ற வாழ்க்கைக்குப் பின்னர், நிச்சயமாக நரகம் காத்திருக்கிறது.

பயப்படுகிறவர்களோ, அவநம்பிக்கையுடையவர்களோ, மற்றும் வசனத்தில் குறிக்கப்பட்டுள்ள மற்றவர்களோ எவரும் அக்கினிக் கடலுக்குள் செல்லவேண்டியதில்லை என்னும் உண்மையை அவர்கள் அறியாதிருக்கிறார்களே என்பது நமக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. முற்றிலும் அது தேவையற்றது. தங்களுடைய அச்சம், ஐயம், மற்றும் பிற பாவங்கள் ஆகியவற்றிற்காக மனம் வருந்தி, எளிமையான நம்பிக்கையோடு கூடிய விசுவாசத்துடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவண்டை வருவார்களாயின் மன்னிப்பை பெற்று, தூய்மையடைந்து விண்ணுலகத்திற்குத் தகுதியடைவர்.

27. September

»Aber den Feigen und Ungläubigen und mit Gräueln Befleckten und Mördern und Unzüchtigen und Zauberern und Götzendienern und allen Lügnern ist ihr Teil in dem See, der mit Feuer und Schwefel brennt, das ist der zweite Tod.« Offenbarung 21,8

Es trifft den, der diese Verse liest, wahrscheinlich wie ein Schlag, dass die Feigen und Ungläubigen hier zusammen mit denen aufgezählt werden, die wir als zügellose, bösartige Sünder bezeichnen würden, und dass sie für alle Ewigkeit mit der gleichen Strafe belegt werden.

Und es trifft uns vielleicht zusätzlich als Überraschung, dass die Feigen hier auch noch an erster Stelle kommen. Das sollte ungeheuer ernüchternd wirken auf jeden, der seine Schüchternheit bisher als eine unbedeutende Sache entschuldigt hat. Vielleicht fürchtet er sich, den Herrn Jesus anzunehmen, weil er nicht weiß, was seine Freunde dazu sagen werden, oder weil er von Natur aus eher zurückhaltend ist. Gott entschuldigt das aber nicht als eine Nebensächlichkeit; Er sieht es vielmehr als schuldhafte Feigheit an.

Es sollte genauso ernüchternd auf die wirken, die hier an zweiter Stelle genannt werden: die Ungläubigen. Wir hören oft Menschen sagen: »Ich kann einfach nicht glauben« oder »Ich wünschte, ich könnte das glauben«. Aber das sind eigentlich unehrliche Sätze. Es gibt nichts am Heiland, was es für Menschen unmöglich macht, an Ihn zu glauben. Die Schwierigkeiten liegen nicht beim Verstand, sondern beim Willen. Ungläubige wollen nicht an Ihn glauben. Der Herr Jesus hat zu den ungläubigen Juden Seiner Zeit gesagt: »… und ihr wollt nicht zu mir kommen, damit ihr
Leben habt« (Johannes 5,40).

Zweifellos halten sich viele von den Feigen und Ungläubigen für anständige, gebildete und sittsame Menschen. In diesem Leben wollen sie bestimmt nichts zu tun haben mit Mördern, mit Unzüchtigen oder mit denen, die magische Künste anwenden. Aber die Ironie liegt gerade darin, dass alle diese Leute die Ewigkeit zusammen verbringen werden, eben weil sie sich niemals an Jesus Christus gewandt haben und so nicht von Ihm errettet worden sind. Ihr Schicksal ist »der See, der mit Feuer und Schwefel brennt, das ist der zweite Tod«. Natürlich ist das das Schlimmste, was man sich vorstellen kann. Die Leute mögen darüber streiten, ob es die Hölle und eine ewige Bestrafung gibt oder nicht, aber die Bibel spricht hier sehr deutliche Worte. Es gibt die Hölle am Ende eines Lebens ohne Christus.

Und was die Sache besonders traurig macht, ist die Tatsache, dass weder die Feigen noch die Ungläubigen noch irgendjemand von den anderen, die in unserem Bibelvers aufgezählt sind, unbedingt in diesen Feuersee kommen müssen. Es ist sogar ganz und gar unnötig. Wenn sie Buße tun würden wegen ihrer Ängste und Zweifel und wegen ihrer anderen Sünden und sich dem Herrn Jesus in einem einfachen, vertrauensvollen Glauben zuwenden würden, dann würde ihnen vergeben, sie wären gereinigt und hätten alle Voraussetzungen, um in den Himmel zu kommen.