October

கைவிடக் கூடாத சத்தியம்

October 17

“Buy the truth, and sell it not.” (Prov. 23:23)

There is often a price to be paid in obtaining the truth of God, and we should be willing to pay the price, whatever it may be. Once having obtained the truth, we should not give it up.

The verse is not to be taken with such strict literalness that we would buy Bibles and Christian literature, but would not sell them under any circumstances. Buying the truth here means making great sacrifices to achieve the knowledge of divine principles. It may mean hostility from one’s family, loss of employment, separation from religious ties, financial loss, or even physical abuse.

To sell the truth means to compromise it or abandon it altogether. We should never be willing to do that.

In his book Church in the House, Arnot wrote: “It is a general law of human nature that what comes lightly, goes lightly. What we gain by a hard struggle, we retain with a firmer grasp, whether it be our fortune or our faith. Those men who have obtained great wealth without any trouble or toil of their own, often scatter it and die in poverty. It is seldom that the man who gains a fortune by gigantic labor wastes the wealth he has won. In like manner, give me the Christian who has fought his way to his Christianity. If it is through fire and water that he has reached the wealthy place, he will not lightly leave his rich inheritance.”

Saints of all ages have turned their back on family, fame and fortune in order to enter the strait gate and walk the narrow way. Like the Apostle Paul, they have counted all else but loss for the excellency of the knowledge of Christ Jesus the Lord. Like Rahab they have renounced the idols of paganism and acknowledged Jehovah as the only true God, even if it seemed like betrayal of their own people. Like Daniel, they have refused to sell the truth, even if it meant being thrown into a den of bloodthirsty lions.

We live in a day when the spirit of the martyrs is largely gone. Men would rather compromise their faith than suffer for it. The voice of the prophet is missing. Faith is flabby. Convictions concerning the truth are condemned as dogmatism. In order to achieve a show of unity, men are willing to sacrifice fundamental doctrines. They sell the truth and buy it not.

But God will always have those choice souls who so value the hidden treasure of truth that they are willing to sell all that they have to buy it, and having bought it, they are unwilling to sell it at any price.

ஒக்டோபர் 17

சத்தியத்தை வாங்கு அதை விற்காதே. நீதிமொழிகள்:23:23.

கைவிடக் கூடாத சத்தியம்

தேவனுடைய சத்தியத்தைப் பெறுவதற்கு நாம் அவ்வப்போது விலையைச் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். அந்த விலை எதுவாயிருப்பினும் அதைச் செலுத்த ஆயத்தம் உடையவர்களாக இருக்க வேண்டும். அதனைப் பெற்றுக் கொண்ட பிறகு, அதனை நாம் ஒருபோதும் கைவிடக்கூடாது.

வேதாகமங்களையும், கிறிஸ்தவ இலக்கியங்களையும் விலை கொடுத்து வாங்க வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் அவற்றை விற்கக்கூடா என்று எழுத்தின்படி இந்த வசனத்திற்குப் பொருள் கொள்ளக்கூடாது. தெய்வீகக் கொள்கைகளைப் பற்றிய ஞானத்தைப் பெற்றுக்கொள்ள நாம் பெரிதான தியாகங்களைச் செய்யவேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஒருவேளை அது குடும்பச் சூழ்நிலையில் எதிர்ப்பதாக இருக்கலாம். வேலையை இழக்க நேரிடலாம். மத சம்பந்தமான தொடர்பு முறிந்து போகலாம். பொருளாதார இழப்பாகலாம் அல்லது சரீரப் பாதிப்பாகவும் இருக்கலாம்.

சத்தியத்தை விற்பது என்பது யாது? சத்தியத்தை விட்டுக்கொடுப்பது அல்லது முற்றிலுமாகக் கைவிடுவது என்பதே இங்கே விற்பது என்று சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதற்கு நாம் ஒருக்காலும் உடன்படக்கூடாது.

“வீட்டிலே சபை” என்னும் நூலில் ஆர்னாட் என்பார் எழுதியுள்ளதாவது, “எளிமையாகப் பெற்றுக்கொண்டது நம்மைவிட்டு எளிமையாகப் போய்விடும்” என்பது பொதுவான இயற்கையின் நியதியாக இருக்கிறது. செல்வமாயினும், நம்பிக்கையாயினும், கடினமாகப் போராடிப் பெற்றதை நாம் உறுதியாகப் பற்றிக் கொள்கிறோம். தங்களுடைய சொந்த முயற்சியும் உழைப்புமின்றி பெருஞ்செல்வத்தைப் பெற்றவர்கள், அதனை வீணாகச் செலவு செய்து, வறுமையில் மடிகின்றனர். மிகவும் கடிமாக உழைத்து பெருஞ்செல்வத்தைத் திரட்டிய மனிதன் அதனை ஒருபோதும் வீணாகச் செலவழிப்பதில்லை. தீயின் ஊடாகவும், வெள்ளத்தின் ஊடாகவும், கடந்து சென்று அச்செல்வத்தை அவன் சேகரிப்பானானால், தான் சேகரித்த செல்வத்தை எளிதில் விட்டுக் கொடுக்கமாட்டான்.

இடுக்கமான வாசல் வழியாக உட்புகுவதற்காகவும், நெருக்கமான பாதையின் வழியாக நடப்பதற்காகவும் எல்லாக் காலத்திலும் பல பரிசுத்தவான்கள் தங்களுடைய குடும்பத்தையும், செல்வத்தையும், புகழையும் துறந்தனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக, அப்போஸ்தலனாகிய பவுல் எல்லாவற்றையும் நஷ்டமாக எண்ணினதுபோல அவர்களும் எண்ணினர். புற இனத்தவரின் உருவச் சிலைகளை வெறுத்துத் தள்ளி, யேகோவா ஒருவரே உண்மையான தேவன் என்று ராகாப் ஏற்றுக்கொண்டது போல அவர்களும் ஏற்றுக் கொண்டனர். அது அவர்களுடைய சொந்த ஜனங்களைக் காட்டிக்கொடுப்பதாகத் தோன்றிடினும் அதனை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இரத்தவெறி பிடித்த சிங்கங்களின் குகைக்குள்ளாக போடப்படுவதாக இருந்தாலும், தானியேல் சத்தியத்தை விற்க மறுத்துரைத்தான். அதுபோலவே அநேக விசுவாசிகள் நடந்து கொண்டனர்.

நாம் வாழ்கின்ற இந்நாட்களில், உயிர்த்தியாகம் செய்த விசுவாசிகளின் உணர்ச்சிப் பெருக்கு பெரிதும் மங்கிப்போயிருக்கிறது. மனிதர்கள் தங்களுடைய விசுவாசத்தை கைவிடுகின்றனரேயொழிய, அதற்காகப் பாடுபடுகிறதில்லை. தீர்க்கதரிசிகளின் சத்தம் கேட்கப்படுவதில்லை. விசுவாசம் வலுவிழந்து போயிருக்கிறது. சத்தியத்தில் உறுதியாக ஒருவர் இருப்பாரானால், கொள்கைப் பிடிவாதமுடையவர் என்று குற்றப்படுத்துகின்றனர். ஒற்றுமையைக் காண்பிக்க வேண்டுமென்று கருதி, மனிதர்கள் அடிப்படைச் சத்தியங்களைத் தியாகம் செய்யவும் ஆயுத்தமுடையவர்களாக இருக்கின்றனர். சத்தியத்தை வாங்குவதற்குப் பதிலாக அதை விற்றுவிடுகின்றனர்.

மறைந்துகிடக்கும் மதிப்புமிக்க சத்தியத்தை வாங்குவதற்கு, தமது செல்வத்தையெல்லாம் விற்க ஒருவர் முடிவு செய்கிறார். அதனை அவ்வாறு வாங்கிய பின்னர் எந்தப் பெரிய விலைக்கும் விற்க அவர் முன்வருவதில்லை, இவ்வகையான ஆத்துமாக்களை தேவன் எப்பொழுதும் விரும்புகிறார்.

17. Oktober

»Kaufe Wahrheit und verkaufe sie nicht.« Sprüche 23,23

Man muss oft etwas dafür hergeben, wenn man die Wahrheit Gottes haben will, und wir sollten bereit sein, diesen Preis zu zahlen, was es auch sein mag. Und wenn wir die Wahrheit einmal bekommen haben, dann sollten wir sie auch nie wieder loslassen.

Nun ist der Vers nicht so streng wörtlich zu verstehen, dass wir so viele Bibeln und christliche Bücher wie nur möglich kaufen müssten, sie aber unter keinen Umständen wieder verkaufen dürften. Die Wahrheit kaufen bedeutet hier vielmehr, große Opfer auf sich zu nehmen, um Kenntnisse über Gott und Seine Grundsätze zu erwerben. Das kann einem beispielsweise die Feindschaft
der eigenen Familienmitglieder eintragen, den Verlust der Arbeitsstelle bedeuten oder die Trennung von früheren religiösen Bindungen, finanzielle Verluste oder auch körperliche Misshandlungen mit sich bringen.

Die Wahrheit verkaufen, bedeutet, faule Kompromisse zu schließen oder sie ganz preiszugeben. Dazu sollten wir niemals bereit sein.

Arnot schreibt in seinem Buch »Die Kirche zu Hause«: »Es ist eine allgemeine Regel in der Natur des Menschen, dass das, was mit Leichtigkeit kommt, auch mit Leichtigkeit wieder geht. Was wir aber durch einen schweren Kampf errungen haben, das halten wir auch energisch fest, sei es nun unser Vermögen oder auch unser Glaube. Die Menschen, die ohne nennenswerte
eigene Sorgen und Mühen zu einem großen Reichtum gekommen sind, vergeuden ihn oft und sterben schließlich in Armut. Es ist dagegen selten, dass ein Mensch, der ein Vermögen durch riesige Anstrengungen erworben hat, diesen schwer errungenen Reichtum einfach verschwendet. Genauso geht es dem Christen, der seinen Weg zum Glauben erkämpft hat. Falls er durchs
Feuer und durchs Wasser gehen musste, um diesen Platz des Reichtums zu finden, wird er dies köstliche Erbe auch nicht leichtfertig wieder aufgeben.«

Zu allen Zeiten haben sich heilige Menschen von ihren Familien, ihrem Ruhm und ihrem Vermögen abgewandt, um durch die enge Pforte einzugehen und auf dem schmalen Pfad zu wandern. Wie der Apostel Paulus haben sie alles andere für wertlos gehalten im Vergleich zu der Herrlichkeit der Erkenntnis Jesu Christi, des Herrn. Wie Rahab haben sie auf die Götzen des Heidentums verzichtet und den Herrn als den einzig wahren Gott anerkannt, selbst wenn es so aussah wie Verrat an ihrem eigenen Volk. Wie Daniel haben sie sich geweigert, die Wahrheit zu verkaufen, selbst wenn das für sie bedeutete, in den Feuerofen geworfen zu werden, der so heiß war, dass man sogar Eisen darin hätte schmelzen können.

Wir leben heute in einer Zeit, in der der Geist des Martyriums weitgehend verloren gegangen ist. Die Menschen würden eher ihren Glauben aufgeben, als für ihn zu leiden. Die Stimme des Propheten kann man nirgends mehr hören. Der Glaube ist schlaff. Feste Überzeugungen des Glaubens werden als Dogmatismus verurteilt. Und um das Bild der großen Einigkeit nicht zu stören, sind die Menschen auch bereit, grundlegende Lehren aufzugeben. Sie verkaufen die Wahrheit und kaufen sie nicht.

Aber Gott wird immer einige auserwählte Menschen haben, die den verborgenen Schatz der Wahrheit so hoch schätzen, dass sie bereit sind, alles, was sie haben, zu verkaufen, nur um diese Wahrheit zu erhalten; und wenn sie sie erworben haben, sind sie nicht mehr bereit, sie zu irgendeinem Preis wieder herzugeben.