November

சிறப்பானதே இறைவனுக்கு

November 17

“And if ye offer the blind for sacrifice, is it not evil? and if ye offer the lame and sick, is it not evil? offer it now unto thy governor; will he be pleased with thee, or accept thy person? saith the Lord of hosts.” (Mal. 1:8)

There was no question as to what God required in sacrificial animals. They had to be without spot or blemish. He expected His people to offer the choicest animals from their herds or flocks. God wants the best.

But what were the Israelites doing? They were offering blind, lame and sick animals. The choice animals would bring a high price in the market, or would be desirable for breeding. So the people offered the culls, saying in effect, “Anything is good enough for the Lord.”

Before we look down on the Israelites with shock and scorn, we should ponder whether we twentieth century Christians might also be dishonoring God by failing to give Him the best.

We spend our lives building a fortune, trying to make a name for ourselves, living in a status home in suburbia, enjoying the finer things, then give God the fag end of a burned-out life. Our finest talents go to business and the professions, and the Lord gets our spare evenings or weekends.

We raise our children for the world, encouraging them to make a lot of money, marry well, and own a prestigious home with all the modern conveniences. We never hold the work of the Lord before them as a desirable way in which they should spend their lives. The mission field is all right for other people’s children, but not for ours.

We spend our money on expensive cars, recreational vehicles, sailing boats, and high class sports equipment, then give a paltry dollar or two to the work of the Lord. We wear expensive clothes, then get a feeling of euphoria when we donate our cast-offs to the Salvation Army.

What we are saying, in effect, is that anything is good enough for the Lord, but that we want the best for ourselves. And the Lord is saying to us, “Go, and offer it to the President. See if he would be pleased with it.” The President would be insulted. Well, so is the Lord. Why should we treat Him in a way we would not think of treating the President?

God wants the best. He deserves the best. Let us determine with all sincerity that He will have our best.

நவம்பர் 17

நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டு வந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே. அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து. அவன் உன் மேல் பிரியமாயிருப்பானே? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார். மல்கியா 1:8

சிறப்பானதே இறைவனுக்கு

தேவனுக்குப் பலி செலுத்தும்படி தெரிந்து கொள்ளப்படும் விலங்குகள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வித கேள்வியும் எழக்கூடாது. அவை மாசற்றதாயும், குற்றமற்றதாயும், இருக்கவேண்டும். மாட்டு மந்தையிலோ ஆட்டு மந்தையிலோ மிகவும் சிறப்பானதையே அவருடைய மக்கள் அவருக்குச் செலுத்த வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார். மிகவும் நேர்த்தியானதே தேவனுக்குத் தேவை.

ஆனால் இஸ்ரவேலர் செய்தது யாது? அவர்களோ, கண் குருடானதையும், கால் ஊனமானதையும், நோயுற்றதையும் பலி செலுத்தினார்கள். வலிமையுள்ள விலங்குகள் அதிக விலை பெறும். அல்லது இனப்பெருக்கத்திற்கு அவை தேவை. ஆகவே, கேவலமானதைத் தெரிந்தெடுத்து, ‘கர்த்தருக்கு எல்லாம் நல்லது” என்று கூறிப் பலியிட்டனர்.

இஸ்ரவேல் மக்களை அதிர்ச்சியோடும் ஏளனத்தோடும் நாம் எண்ணிப் பார்ப்பதற்கு முன்னர், இருபத்தோராம் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்களாகிய நாம் எங்ஙனம் தேவனைக் கனவீனப் படுத்துகின்றோம், சிறந்ததை அவருக்குக் கொடுக்கத் தவறுகிறோம் என்பதைக் குறித்துச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

எதிர்காலத்திற்குத் தேவையென்று பெருஞ்செல்வத்தைச் சேர்க்கவேண்டும், நமக்கென்று ஒரு பெயரை நிலை நிறுத்தவேண்டும், நகர்புறச் செல்வப் பகுதியில் மாளிகைபோன்ற வீட்டில் வசிக்கவேண்டும். நேர்த்தியானவற்றை அனுபவித்து மகிழவேண்டும் என்று நம்முடைய வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிடுகிறோம். பின்னர், எல்லா வலிமையும் இழந்து போன வாழ்வின் கடைசிப் பகுதியை தேவனுக்குத் தருகிறோம். நேர்த்தியான திறமைகளைத் தொழில் வளர்ச்சிக்காகச் செலவிடுகிறோம். சில மாலை வேளைகளையும், வாரத்தின் கடைசிநாளையும் கர்த்தருக்காகச் செலவிடுகிறோம்.

உலகத்தின் மேன்மையை அடைய வேண்டுமென்னும் நோக்கத்துடன் நமது பிள்ளைகளை வளர்க்கிறோம். அவர்கள் பெரும்பணம் சம்பாதிக்க வேண்டும், நல்ல இடத்தில் திருமணம் செய்ய வேண்டும், நவீன வசதிகள்கொண்ட சிறந்ததொரு வீட்டை வாங்கவேண்டும் என்று நாம் நினைக்கிறோம். தங்களுடைய வாழ்நாட்களைச் சிறந்த வழியில் கழிக்க, கர்த்தருக்காகப் பணி செய்வதே  உன்னதமானது என்னும் கருத்தைக் குறித்து அவர்கள் முன்னர் நாம் பேசுவதில்லை. மற்றவர்களுடைய பிள்ளைகள் ஊழியம் செய்ய முன்வருவார்கள் எனில் சரி, ஆனால் நம்முடைய பிள்ளைகள் அந்த வேலைக்குப் போகக்கூடாது என்றே நினைக்கிறோம்.

விலையுயர்ந்த வாகனங்கள், உல்லாசப்படகு, உயர்தர விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு நமது பணத்தைச் செலவுசெய்து விட்டு, ஏதோ நூறு அல்லது இருநூறு ரூபாக்களைக் கர்த்தருடைய பணிக்காகக் கொடுக்கிறோம். நல்ல உயர்தரமான ஆடைகளை அணிந்துவிட்டு, பழைய துணிமணிகளை ஊழியப் பணிக்காகக் கொடுக்கிறோம். அதிலே பெருமிதமும் கொள்கிறோம்.

நமது செயல்களின் கருத்து என்ன? கர்த்தருக்கு எதுவாயினும் நல்லது தான். மிகச் சிறந்தது நமக்கு வேண்டும். கர்த்தர் நம்மிடம், ‘இதைக் கொண்டு போய் குடியரசுத் தலைவரிடம் கொடு, அவர் இதில் மகிழ்ச்சி அடைகிறாரா என்று பார்” என்று சொல்லுகிறார். குடியரசுத் தலைவர் இதனை அவமானமாகக் கருதுவார். இந்த நாட்டின் தலைவரை எவ்விதமாக நடத்தக்கூடாதென்று நினைக்கிறோமோ, அவ்விதமாக கர்த்தரை ஏன் நாம் நடத்தவேண்டும்?

தேவன் மிகவும் சிறந்ததையே விரும்புகிறார். அவருக்குச் சிறந்ததே தகும். எல்லாவிதத்திலும் மனமார்ந்தபடி நாம் சிறந்ததெனக் கருதுவதை அவருக்குக் கொடுக்க முடிவு செய்வோமாக.

17. November

»Auch wenn ihr Blindes darbringt, um es als Opfer zu schlachten, ist es für euch nichts Böses; und wenn ihr Lahmes und Krankes darbringt, ist es für euch nichts Böses. Bring es doch deinem Landpfleger! Wird er Gefallen an dir haben oder dein Angesicht erheben? spricht der Herr der Heerscharen.« Maleachi 1,8

Es war für das Volk Gottes keine Frage, was der Herr an Opfertieren von ihm verlangte. Sie mussten ohne Fehl und Tadel sein. Er erwartete von Israel, dass es die ausgesuchtesten Tiere aus seinen Herden opferte. Gott will immer das Beste von uns haben.

Aber was taten die Israeliten? Sie opferten Gott blinde, lahme und kranke Tiere. Die Rinder und Schafe erster Wahl konnten ja noch einen hohen Preis auf dem Markt erzielen, oder sie waren begehrt für die Zucht. Deshalb boten die Leute Gott den Ausschuss an und gaben damit zu verstehen: »Für den Herrn ist das gut genug. «

Doch bevor wir nun mit Erschütterung und Verachtung vom hohem Ross aus auf die Israeliten herabblicken, sollten wir überlegen, ob wir Christen des 20. Jahrhunderts nicht vielleicht Gott genau solche Schande machen, wenn wir ihm auch unser Bestes vorenthalten. Wir verbringen unser Leben damit, ein Vermögen aufzubauen, uns einen Namen zu machen, ein Eigenheim im Grünen zu erwerben, uns an den schönen Dingen des Lebens zu freuen, und haben dann für Gott nur noch das schäbige Ende eines ausgebrannten Lebens übrig. Unsere besten Begabungen
werden ins Geschäft und in den Beruf gesteckt, und der Herr bekommt nur noch unsere freien Abende oder unsere Wochenenden.

Wir erziehen unsere Kinder für diese Welt, ermutigen sie, viel Geld zu verdienen, beim Heiraten eine gute Partie zu machen und ein ansehnliches Haus zu kaufen, das mit allem modernen Komfort ausgestattet ist. Wir halten ihnen aber niemals die Arbeit des Herrn vor Augen als einen lohnenswerten Weg, für den sie ihr Leben einsetzen sollten. Das Missionsfeld ist eine gute Sache, aber immer für die Kinder anderer Leute und nicht für unsere.

Wir geben unser Geld für teure Autos aus, für Freizeitfahrzeuge, Segelboote und erstklassige Sportausrüstungen, und dann spenden wir auch noch den einen oder anderen jämmerlichen Euro für die Arbeit des Herrn. Wir tragen teure Kleider und geraten dann regelrecht ins Schwärmen, wenn wir unsere abgelegten Sachen für einen guten Zweck gestiftet haben.

Was wir damit ausdrücken, ist letzten Endes, dass für den Herrn schon alles gut genug ist, dass wir aber das Beste für uns selbst behalten wollen. Und der Herr sagt dann zu uns: »Geh doch einmal hin und biete das deinem Bundespräsidenten an. Und dann sieh mal zu, ob er sich darüber freuenwürde.« Der Präsident wäre vermutlich beleidigt. Ja, und so geht es dem Herrn auch. Warum sollten wir Ihn so behandeln, wie wir es mit dem Bundespräsidenten nie im Leben machen würden?

Gott will das Beste von uns haben. Und Er verdient auch das Beste. Wir wollen uns in aller Aufrichtigkeit vornehmen, dass Er auch das Beste bekommen soll.