May

பிசாசின் தந்திரங்கள்

May 10

“…we are not ignorant of his devices.” (2 Cor. 2:11)

It is important to know the devices of our enemy, the Devil. Otherwise he is likely to take advantage of us.

We should know that he is a liar, and has been from the beginning. In fact, he is the father of lies (John 8:44). He lied to Eve by misrepresenting God, and he has been doing it ever since.

He is a deceiver (Rev. 20:10). He mixes a little truth with error. He imitates or counterfeits everything that is of Cod. He poses as an angel of light and sends out his messengers as ministers of righteousness (2 Cor. 11:14,15). He deceives by using great signs and lying wonders (2 Th. 2:9). He corrupts the minds of people (2 Cor. 11:3).

Satan is a murderous destroyer (John 8:44; 10:10). His goal and the goal of all his demons is to destroy. There is no exception to that statement. As a raging lion, he goes about seeking whom he may devour (1 Pet. 5:8). He persecutes God’s people (Rev. 2:10) and destroys his own slaves through drugs, demon-ism, alcohol, immorality and related vices.

He is the accuser of the brethren (Rev. 12:10). The word “devil” (Gr. diabolos) means accuser or slanderer, and as his name is, so is he. All those who slander the brethren are doing the devil’s work.

He sows discouragement. Paul warned the Corinthians that if they did not forgive the repentant backslider, Satan might gain an advantage by plunging the brother into extreme discouragement (2 Cor. 2:7-11).

Just as Satan, speaking through Peter, sought to dissuade Jesus from going to the Cross (Mark 8:31-33), so he encourages Christians to spare themselves from the shame and suffering of crossbearing.

A favorite ploy of the Wicked One is to divide and conquer. He seeks to sow strife and discord among the saints, knowing that “a house divided against itself cannot stand.” Sad to say, he has been all too successful in this strategy.

He blinds the minds of unbelievers lest the light of the Gospel of the glory of Christ should shine unto them and they should be saved (2 Cor. 4:4). He blinds them by amusements, false religion, procrastination and pride. He occupies them with feelings rather than facts, and with themselves rather than Christ.

Finally, Satan attacks right after great spiritual victories or mountaintop experiences, when the danger of pride is greatest. He looks for a weak spot in our armor, and shoots straight for it.

The best defense against the Devil is to live in unclouded fellowship with the Lord, covered by the protective gear of a holy character.

மே 10

அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே. 2.கொரிந்தியர் 2:11

பிசாசின் தந்திரங்கள்

நமது எதிரியாகிய பிசாசின் தந்திரங்களை நாம் அறிந்திருக்க வேண்டியது இன்றியமையாதது. இல்லையெனில் அவனுக்கென்று நம்மை அனுகூலமாக்கிக் கொள்வான். அவன் பொய்யனென்றும், ஆதிமுதல் பொய்யனாக இருக்கிறான் என்று நாம் அறிந்திருக்க வேண்டும். அவன் பொய்க்குப் பிதாவாயிருக்கிறான் (யோ.8:44). தேவனைக் குறித்துத் தவறாக ஏவாளிடம் பொய் கூறினவன். அப்போதிருந்து அதைச் செய்து கொண்டிருக்கிறான்.

அவன் மோசம்போக்கிறவன் (வெளி 20:10). தவறுகளோடு அவன் சிறிதளவு உண்மையைக் கலந்துவிடுவான். தேவனைப் போல அவன் நடிக்கிறான். ஒளியின் தூதனாக அவன் தன்னைக் காட்டிக்கொள்கிறான். தன்னுடைய தூதர்களை, நீதியின் ஊழியர்களது வேஷத்தை அணிந்து கொண்டவர்களாக அனுப்புகிறான் (2.கொரி.11:14-15). சகல வல்லமையுள்ள அடையாளங்களோடும், பொய்யான அற்புதங்களோடும், அவன் ஏமாற்றுகிறான் (2.தெச.2:9).

சாத்தான் மனித கொலைபாதகனாயிருக்கிறான். (யோ.8:44, 10:10). அவனும் அவனுடைய பிசாசுகளும் அழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதில் எந்தவித விலக்குமில்லை. கர்ச்சிக்கிற சிங்கமென, எவனை விழுங்கலாமோ என்று சுற்றித்திரிகிறான் (2.பேது.5:8). தேவனுடைய பிள்ளைகளுக்கு இன்னல்கள் பல அளிக்கிறான் (வெளி 2:10). போதைப் பொருட்கள், பிசாசு பிடித்தல், மது, ஒழுக்கக்கேடு, இன்னும் பல கேடுகளால் தமது அடிமைகளை அழிக்கிறான்.

சகோதரர்கள் மீது குற்றம் சுமத்துகிறான் (வெளி 12:10). பிசாசு என்னும் சொல்லிற்கு இணையான கிரேக்க சொல்லிற்குக் குற்றம் சுமத்துகிறவன், பழிச்சொல் பகர்பவன் என்பது பொருள். அவன் தன் பெயருக்கு ஏற்றபடி இருக்கிறான். சகோதரருக்கு எதிராகப் பழிச்சொல் கூறுவோர் பிசாசினுடைய வேலையைச் செய்கின்றனர்.

அவன் துக்கத்தை விதைக்கிறான். தவறு செய்தவன் மனம் வருந்தின பிறகும் மன்னிக்கப்படாவிட்டால் பிசாசு அவனைத் துக்கத்தின்மேல் துக்கம் அடையச் செய்வான் என்று பவுல் எச்சரித்துள்ளார் (2.கொரி.2:7-11).

இயேசு கிறிஸ்து சிலுவையை நோக்கிச் சென்றபோது, பேதுருவின் மூலமாய்ப் பிசாசு பேசி, அவரைத் தடைசெய்ய முயன்றான் (மாற்கு 8:31-33). அதுபோலவே, சிலுவையைச் சுமப்பதால் உண்டாகும் அவமானத்தையும் பாடுகளையும் கிறிஸ்தவர்கள் சகிக்காதபடிக்குத் தடைசெய்கிறான்.

பிரிவினை செய்து வெற்றிபெறுவது அவனுக்குக் கைவந்த கலை. ‘தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் நிலைநிற்காது” என்பதை அறிந்து பரிசுத்தவான்களுக்கிடையே பிரிவினையையும், பூசலையும் உண்டாக்குகிறான். இதில் மாபெரும் வெற்றியும் அடைந்துள்ளான்.

அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்கி, கிறிஸ்துவின் மகிமையாகிய நற்செய்தியின் ஒளி அவர்கள் உள்ளத்தில் பிரகாசிக்காதபடி செய்து, இரட்சிப்படைவதைத் தடுக்கிறான் (2. கோரி.4:4). கேளிக்கைகள், தவறான மதம், காலம் தாழ்த்துதல், பெருமை, ஆகியவற்றால் அவன் அவர்களைக் குருடராக்குகிறான்.

கடைசியாக, ஆவிக்குரிய பெரிய வெற்றிகள் அடைந்தவர்களை, பெருமை என்னும் ஆயுதத்தால் சாத்தான் தாக்குகிறான். நமது சர்வாயுத வர்க்கத்தில் எந்தப்பாகம் பலவீனமாக இருக்கிறது என்பதை அறிந்து அதை நோக்கி அவன் தாக்குகிறான். பரிசுத்தத்துடன் கர்த்தரோடு நெருங்கி வாழ்வதே, பிசாசுக்கு எதிராக ஒரு விசுவாசி செய்யக்கூடிய சிறந்த தற்பாதுகாப்பாகும்.

10. Mai

»… denn seine Gedanken sind uns nicht unbekannt.« 2. Korinther 2,11

Es ist wichtig, die Taktiken unseres Feindes, des Teufels, zu kennen. Sonst übervorteilt er uns sehr leicht.

Wir sollten wissen, dass er ein Lügner ist, und zwar von Anfang an. Ja, er ist der Vater der Lüge (Johannes 8,44). Er belog Eva, indem er ihr eine falsche Vorstellung von Gott vermittelte, und hat das seither immer wieder getan.

Er ist ein Verführer (Offenbarung 20,10). Er vermischt ein wenig Wahrheit mit Irrtum. Er imitiert oder verfälscht alles, was von Gott ist. Er nimmt die Gestalt eines Engels des Lichts an und sendet seine Boten – als Diener der Gerechtigkeit getarnt – aus (2. Korinther 11,14.15). Er betrügt durch den Einsatz von großen Zeichen und Wundern der Lüge (2. Thessalonicher 2,9). Er verdirbt das Denken der Menschen (2. Korinther 11,3).

Satan ist ein mörderischer Verderber (Johannes 8,44; 10,10). Sein Ziel und das all seiner Dämonen ist es, zu zerstören, und zwar ohne jede Ausnahme. Er geht als brüllender Löwe umher und sucht, wen er verschlinge (1. Petrus 5,8). Er verfolgt das Volk Gottes (Offenbarung 2,10) und zerstört seine eigenen Sklaven durch Drogen, Dämonismus, Alkohol, Unmoral und ähnliche Laster.

Er ist der Verkläger der Brüder (Offenbarung 12,10). Das Wort »Teufel« (griechisch »diabolos«) bedeutet »Ankläger« oder »Verleumder«, und wie sein Name sagt, so ist er. Jeder, der die Geschwister verleumdet, tut das Werk des Teufels.

Er sät Traurigkeit und Depression. Paulus warnte die Korinther vor der Gefahr, dass der gefallene, nun aber bußfertige Bruder vom Satan übervorteilt und durch übergroße Traurigkeit verschlungen werden könnte, wenn sie ihm nicht vergeben würden (2. Korinther 2,7-11).

Wie Satan durch den Mund des Petrus den Herrn Jesus vom Kreuz abhalten wollte (Markus 8,31-33), so versucht er auch heute noch Christen zu überreden, sich der Schande und dem Leiden des Kreuztragens zu entziehen.

Eine Lieblingstaktik des Bösen ist es, zu teilen und zu herrschen. Er versucht, unter den Heiligen Streit und Zwietracht zu säen, da er weiß, dass »jedes Haus, das wider sich selbst entzweit ist, nicht bestehen wird«. Leider müssen wir sagen, dass er mit dieser Strategie gewaltigen Erfolg hat.

Er verblendet das Denken der Ungläubigen, damit ihnen nicht ausstrahle der Lichtglanz des Evangeliums der Herrlichkeit des Christus und sie errettet werden (2. Korinther 4,4). Er verblendet sie durch Vergnügungen, falsche Religionen, ständiges Aufschieben sowie durch Hochmut und Stolz. Er beschäftigt sie mit Gefühlen statt mit Tatsachen und mit ihrem Ego statt mit Christus.

Schließlich greift Satan uns oft unmittelbar nach großen geistlichen Siegen oder christlichen Gipfelerlebnissen an, wenn die Gefahr von Stolz am größten ist. Er sucht eine schwache Stelle in unserer Rüstung und feuert präzise auf diesen Punkt.

Die beste Verteidigung gegen den Teufel ist ein Leben in ungebrochener Gemeinschaft mit dem Herrn, bedeckt mit der Schutzkleidung eines heiligen Charakters.