May

விசாரிக்கும் தேவன்

May 7

“He careth for you.” (1 Pet. 5:7)

The Bible is fairly full of tokens of God’s marvelous care for His people. During Israel’s forty-year trek through the wilderness, they ate food from heaven (Ex. 16:4), had an unfailing supply of water (1 Cor. 10:4), and were equipped with shoes that never wore out (Deut. 29:5).

It is the same in our wilderness journey. To prove this, our Lord reminds us how His care for us is so much greater than His care for birds, flowers and animals. He speaks of sparrows, for instance. He provides their food (Mt. 6:26). Not one of them is forgotten before God (Lu. 12:6). Not one falls to the ground without Him (Mt. 10:29), or, as H. A. Ironside said, “God attends the funeral of every sparrow.” The moral of the story, of course, is that we are of more value to Him than many sparrows (Mt. 10:31).

If He clothes the lilies of the field more beautifully than Solomon was ever attired, He will much more clothe us (Mt. 6:30). If He makes provision for the care of oxen, how much more will He care for our needs (1 Cor. 9:9).

As our High Priest, the Lord Jesus bears our names on His shoulders—the place of power (Ex. 28:9-12) and on His breast—the place of affection (Ex. 28:15-21). Also our names are engraved in the palms of His hands (Isa. 49:16), a fact that inevitably reminds us of the nail wounds He sustained for us at Calvary.

He knows the exact number of the hairs of our head (Mt. 10:30). He numbers our tossings at night and keeps count of our tears in His book (Psa. 56:8 RSV).

Whoever touches us, touches the apple of His eye (Zech. 2:8). No weapon formed against us can prosper (Isa. 54:17).

Whereas the heathen carry their gods on their shoulders (Isa. 46:7), our God carries His people (Isa. 46:4).

When we go through the waters, the rivers or the fire, He is with us (Isa. 43:2). In all our afflictions, He is afflicted (Isa. 63:9).

The One who guards us neither slumbers nor sleeps (Psa. 121:3, 4). Someone has called this characteristic of God “the divine insomnia”.

The Good Shepherd who gave His life for us will not withhold any good from us (John 10:11; Psa. 84:11; Rom. 8:32).

He cares for us from the beginning of the year to the end (Deut. 11:12). He bears us even to old age (Isa. 46:4). In fact He will never leave us or forsake us (Heb. 13:5). God really cares!

மே 7

அவர் உங்களை விசாரிக்கிறவர் (1.பேதுரு 5:7)

விசாரிக்கும் தேவன்

வியத்தகுவகையில் தேவன் தமது மக்களிடம் அக்கறை உடையவராக இருக்கிறார் என்பதற்கான போதுமான பல குறிப்புக்களை வேதம் கொண்டிருக்கிறது. பாலைவனத்தில் நாற்பதாண்டுக் காலம் இஸ்ரவேல் மக்கள் பயணம் மேற்கொண்ட காலத்தில், வானத்தினின்று பொலிந்த மன்னாவை உண்டனர் (யாத்.16:4). வற்றாத நீரைப் பருகினர் (1கொரி.10:4). அவர்களுடைய காலணிகள் பழையதாகப் போகவுமில்லை. (உபா.29:5).

நாம் மேற்கொள்கின்ற இவ்வுலகப் பலைவனப் பயணத்தில் அதுவே உண்மையாக இருக்கிறது. இதனை உறுதிப்படுத்த பறவைகளையும், பூக்களையும், விலங்குகளையும் குறித்து அவர் கொண்டிருக்கிற அக்கறையைக் காட்டிலும், நம்மீது அவர் கொண்டிருக்கும் அக்கறை மேலானது என்று ஆண்டவர் நினைவூட்டுகிறார். எடுத்துக்காட்டாக குருவியைக் குறித்து அவர் பேசுகிறார். அவற்றிற்குத் தேவையான உணவைத் தருகிறார். (மத்.6:26).அவற்றில் ஒன்றையும் அவர் மறந்து போவதில்லை. (லூக்.12:6). அவருடைய சித்தமின்றி அவற்றில் ஒன்றும் கீழே விழுவதில்லை (மத்.10:29). இதனை H. A. அயன்வைடு அவர்கள், ‘ஒவ்வொரு குருவியின் அடக்க நிகழ்ச்சியிலும் தேவன் கலந்து கொள்கின்றார்” என்று கூறியுள்ளார். அநேக குருவிகளைக் காட்டிலும் நாம் சிறப்பானவர்கள் என்பதே இதில் கற்பிக்கப்பட்டுள்ள பாடம். (மத்.10:31).

சாலோமோன் உடுத்திராத அளவிற்கு அழகுற, காட்டுப் பூக்களுக்கு தேவன் உடுத்துவாராயின் நமக்கு எத்தனை சிறப்பாக ஆடைகளை அணிவிப்பார் (மத்.6:30). எருதுகளுடைய தேவைகளை நிவர்த்தி செய்யும் தேவன், நமது தேவைகளைச் சந்திப்பார் என்பது அதனிலும் மேலான உண்மையாகும் (1.கொரி.9:9).

நமது பிரதான ஆசாரியர் என்னும் அடிப்படையில் நமதாண்டவர், வல்லமையின் இருப்பிடமாகிய தமது தோளிலும், (யாத்.28:9-12), நேசத்தின் இருப்பிடமாகிய தமது மார்பிலும் (யாத்.18:15-21), நமது பெயர்களைத் தாங்கி வருகிறார். மேலும் நம்முடைய பெயர்களை தமது உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார். (ஏசா.49:16). நமக்காக ஆணிகளால் அவர் பெற்ற காயங்களை இவ்வுண்மை தவறாமல் நினைவுபடுத்துகிறது.

நமது தலையிலுள்ள முடிகளெல்லாம் எத்தனை என்று அவர் சரியாக அறிந்திருக்கிறார். (மத்.10:30). இரவில் நாம் புரண்டு படுப்பதை எண்ணி நமது கண்ணீரின் அளவை அளந்து தமது புத்தகத்தில் பதித்து வைத்திருக்கிறார். (சங்.56:8).

நம்மைத் தொடுகிறவன், அவரது கண்மணியைத் தொடுகிறான் (சக.2:8), நமக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதுபோம் (ஏசா.54:17), புற இனத்தவர் தமது கடவுளரைச் சுமந்து செல்கின்றனர் (ஏசா.46:7), நமது தேவனோ தமது மக்களைச் சுமந்து செல்கின்றார் (ஏசா.46:4), நீர்நிலைகள், ஆறுகள், தீ, ஆகியவற்றின் ஊடாகச் செல்லும்போது அவர் நம்மோடிருக்கிறார். (ஏசா.43:2). நம்முடைய நெருக்கங்களில் அவர் நெருக்கப்படுகிறார். (ஏசா.63:9). நம்மைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை, (சங்.121:3-4). தமது ஜீவனை நமக்காக அளித்த நல்ல மேய்ப்பர் எந்த நன்மையையும் வழங்காதிரார் (யோ.10:11, சங்.84:10, ரோ.8:32). ஆண்டின் தொடக்கத்திலிருந்து முடிவுவரை நம்மீது அக்கறை கொண்டுள்ளார் (உபா.11:12). நமது முதிர் வயதுவரை நம்மைத் தாங்குவார் (ஏசா.46:4) அவர் நம்மை விட்டுவிலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை (எபி.13:5) ஆம்! தேவன் உண்மையாகவே நம்மை விசாரிக்கிறவர் ஆவார்.

7. Mai

»Er ist besorgt für euch.« 1. Petrus 5,7

Die Bibel ist voller Beispiele von Gottes wunderbarer Fürsorge für Sein Volk. Während Israels vierzigjähriger Wüstenreise aßen sie Brot vom Himmel (2. Mose 16,4), hatten eine unerschöpfliche Wasserreserve (1. Korinther 10,4) und waren mit unbegrenzt haltbaren Schuhen ausgerüstet (5. Mose 29,5).

Mit unserer Wüstenreise ist es das Gleiche. Um dies zu beweisen, macht uns der Herr deutlich, dass Seine Sorge für uns um vieles größer ist als seine Sorge für Vögel, Blumen und Tiere. So spricht Er zum Beispiel von Sperlingen. Er sorgt für ihre Nahrung (Matthäus 6,26). Keiner von ihnen ist vergessen bei Gott (Lukas 12,6). Keiner fällt ohne Seinen Willen auf die Erde (Matthäus 10,29), oder, wie sich H.A. Ironside ausdrückt: »Gott nimmt an der Beerdigung eines jeden Sperlings teil.« Die Moral der Geschichte ist natürlich die, dass wir für Ihn weit wertvoller sind als viele
Sperlinge (Matthäus 10,31).

Wenn Er die Lilien des Feldes prächtiger kleidet als Salomo in all seiner Herrlichkeit, wie viel mehr wird Er uns kleiden (Matthäus 6,30). Wenn Er für die Ochsen besorgt ist, wie viel mehr wird Er dann für unsere Bedürfnisse sorgen (1. Korinther 9,9).

Als unser Hoherpriester trägt der Herr Jesus unsere Namen auf Seinen Schultern, der Stelle der Kraft (2. Mose 28,9-12), und auf Seiner Brust, der Stelle der Zuneigung (2. Mose 28,21). Auch sind unsere Namen in Seine Handflächen eingezeichnet (Jesaja 49,16), eine Tatsache, die uns unweigerlich an die Nägelwunden erinnert, die Ihm auf Golgatha um unseretwillen zugefügt worden sind.

Er kennt die genaue Zahl der Haare auf unserem Kopf (Matthäus 10,30). Er zählt unser Umherirren und registriert in Seinem Buch jede einzelne unserer Tränen (Psalm 56,8).

Wer uns antastet, tastet Seinen Augapfel an (Sacharja 2,8). Keiner Waffe, die wider uns gebildet wird, wird es gelingen, uns etwas anzutun (Jesaja 54,17).

Während die Heiden ihre Götter auf ihren Schultern tragen müssen (Jesaja 46,7), trägt unser Gott uns (Jesaja 46,4).

Wenn wir durch Wasserströme oder Feuerfluten gehen, ist Er bei uns (Jesaja 43,2). In all unseren Bedrängnissen ist Er bedrängt (Jesaja 63,9).

Der, der uns hütet, schläft und schlummert nicht (Psalm 121,3.4). Jemand hat diesen Charakterzug Gottes einmal die »göttliche Schlaflosigkeit « genannt.

Der Gute Hirte, der Sein Leben für uns hingegeben hat, wird uns kein Gutes vorenthalten (Johannes 10,11; Psalm 84,11; Römer 8,32).

Er sorgt für uns vom Anfang des Jahres bis zum Ende (5. Mose 11,12). Er trägt uns bis ins Greisenalter (Jesaja 46,4). Ja, Er wird uns nicht versäumen noch verlassen (Hebräer 13,5). Gott sorgt wirklich für uns!