May

மனிதனுடைய வழி

May 4

“There is a way which seemeth right unto a man; but the end thereof are the ways of death.” (Prov. 14:12)

Twice in the book of Proverbs (14:12 and 16:25) we learn that man’s judgment as to the right way is not reliable. What seems right to him ends in disaster and death.

During World War II the Navy gave a vivid illustration of this to its flight personnel. It was trying to impress on them that when they were flying at high altitudes and did not use their oxygen, they could not trust their senses. A pilot was instructed to enter a decompression chamber and sit down at a table on which was a sheet of mathematical problems. Oxygen was withdrawn from the chamber to simulate high altitudes. When the air became less dense, the pilot was told to solve the problems. He was also told that no one had done so correctly so far.

The pilot would breeze through the problems with utmost confidence that he had beaten the system. The problems seemed easy, and he had every assurance that he would receive a perfect score. There was no doubt in his mind about it.

But when oxygen was fed back into the chamber, and he emerged to have his paper corrected, he learned that his ability to solve problems had been seriously impaired by the lack of oxygen getting to his brain. The lesson was, of course, that if he flew at high altitudes without using his oxygen, he wouldn’t be able to trust his own judgment, and he would be inviting a crash.

Man’s judgment has been seriously impaired by sin. He feels absolutely sure that the way to heaven is by doing the best he can. If you tell him that no one has ever been saved by good works, he still has every confidence that he will be the first to beat the system. He is certain that God would never turn him away from the gates of heaven.

But he is wrong, and if he persists in his lack of “spiritual oxygen”, he will perish. His safety lies in trusting the Word of God rather than his own judgment. If he does so, he will repent of his sins and receive the Lord Jesus Christ as his Lord and Savior. Because God’s Word is truth, those who believe it can be confident that they are following the right route.

மே 4

மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு. அதின் முடிவோ மரணவழிகள் (நீதி.14:12)

மனிதனுடைய வழி

மனிதனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி நம்பத்தகுந்தது அன்று என்று நீதிமொழிகள் நூலில் இருமுறை நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம் (14:12, 16:25). அவனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி, அழிவிலும் மரணத்திலும் முடிவடையும்.

இரண்டாம் உலகப்போரின் நாட்களில், இதற்கு மிகத் தெளிவான விளக்கத்தைக் கப்பற்படை தமது விமானிகளுக்கு அளித்தது. மிகவும் உயரத்தில் பறக்கும்போது அந்த விமானிகள் பிராணவாயுவைக் கண்டிப்பாகப் பயன்படுத்தவேண்டும் என்பதை மனதில் ஆழமாகப் பதியவைக்க மேலதிகாரிகள் முயற்சி செய்தனர். தங்களது புலன் உணர்வை நம்பி பிராணவாயுவைப் பயன்படுத்தாது இருந்துவிடக்கூடாது என்பதை நிரூபிக்க ஒரு செயல்விளக்கத்தைச் செய்து காட்டினர். அதன்படி காற்றழுத்தம் குறைக்கப்பட்ட அறை ஒன்றிற்கு ஒரு விமானி செல்லவேண்டும். அறையின் உள்ளே செல்லும் விமானி இருக்கையில் அமர்ந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட கணக்கை விடைதீர்க்கவேண்டும். அத்தருணத்தில் அறைக்குள் இருக்கும் பிராணவாயு குறைக்கப்பட்டு விமானம் மிக உயரமாகப் பறப்பதற்கு ஒப்பான சூழ்நிலை உருவாக்கப்படும். அந்தக் கணக்கை இதுவரை ஒருவரும் சரியாகத் தீர்க்கவில்லை என்றும் அவரிடம் சொல்லப்படும்.

அறைக்குள் சென்ற ஒரு விமானி கணக்குத்தேர்வுத்தாளை கவனத்தோடு ஆராய்ந்தார். விடைகளைக் கண்டுபிடித்து விட்டதாக நம்பிக்கையும் கொண்டார். கணக்குக்கள் யாவும் மிக எளிமையாகத் தோன்றின. நிச்சயமாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறப்போவதாக எண்ணினார். அதைக்குறித்து எவ்வித ஜயமும் அவருள்ளத்தில் எழவில்லை.

பிறகு பிராணவாயு அந்த அறைக்குள் செலுத்தப்பட்டது. அங்கிருந்து விமானி வெளியே வந்தார். அவருடைய வினாத்தாள் திருத்தப்பட்டது. அவருடைய மூளைக்குத் தேவையான பிராணவாயு கிடைக்காததால், கணக்கைத் தீர்க்கும் திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டதை அப்பொழுது தான் அந்த விமானி உணர்ந்தார். இதிலிருந்த அவர் பெற்றுக்கொண்ட பாடம் யாதெனில், மிக உயரமான மட்டத்தில் விமானம் பறக்கும்போது, பிராணவாயுவைப் பயன்படுத்தவில்லையெனில் அவர் எடுக்கும் முடிவுகள் தவறானவையாக இருக்கும். விமானம் கீழே விழுந்து நொருங்கும். ஆகவே அவருடைய கணிப்புகள் யாவும் தவறாகப் போய்விடும் என்பதேயாகும்.

மனிதனுடைய கணிப்புகள், பாவத்தினால் முற்றிலும் பாதிப்படைந்துள்ளன. சிறந்த செயல்களைச் செய்வதன் மூலம் விண்ணுலகைச் சென்றடையலாம் என்று அவன் நினைக்கிறான். நற்கிரியையினால் எவரொருவரும் இதுகாறும் இரட்சிப்பைப் பெற்றதில்லை என்று நீங்கள் கூறினாலும் அவனுடைய தவறான நம்பிக்கை குன்றிப்போவதில்லை. மாறாக, தன்னுடைய நற்கிரியையால் உங்களுடைய கூற்றை முறியடித்துவிடலாம் என்று திடநம்பிக்கை கொள்கிறான். பரலோக வாசலிலிருந்து தேவன் தன்னைத் திருப்பி அனுப்பமாட்டார் என்னும் உறுதியுடையவனாக இருக்கிறான்.

அவன் தவறிழைத்துத் தன் நிலையில் நிலை நிற்பானாயின் ஆவிக்குரிய பிராணவாயு இல்லாத காரணத்தால் மடிந்துபோவான். சொந்தக் கணிப்புகளை நம்பாமல் தேவனுடைய வார்த்தையை நம்புவதில்தான் அவனுடைய பாதுகாப்பு இருக்கிறது. அவ்வாறு செய்யுங்கால், தன்னுடைய பாவத்திலிருந்து மனந்திருப்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தனது கர்த்தரும் இரட்சகருமாகப் பெற்றுக்கொள்கிறான். ஏனெனில் தேவனுடைய வார்த்தை உண்மையுள்ளது. தேவ வார்த்தையைப் பற்றிக்கொள்கிறவன் சரியான வழியில் செல்லும் நம்பிக்கையை உடையவனாயிருக்கிறான்.

4. Mai

»Da ist ein Weg, der einem Menschen gerade erscheint, aber sein Ende sind Wege des Todes.« Sprüche 14,12

Zweimal erfahren wir im Buch der Sprüche (14,12 und 16,25), dass man sich auf das Urteil des Menschen hinsichtlich des richtigen Weges nicht verlassen kann. Was ihm richtig erscheint, endet in Elend und Not.

Während des Zweiten Weltkrieges gab die amerikanische Marine ihrem fliegenden Personal eine eindrucksvolle Illustration dieser Tatsache. Sie versuchte ihnen einzuschärfen, dass sie beim Flug in großen Höhen ohne die Verwendung von Sauerstoff ihren Sinnen nicht mehr trauen konnten. Ein Pilot musste die Dekompressionskammer betreten und sich an einen Tisch mit einem Bogen mathematischer Aufgaben setzen. Nun wurde zur Simulation großer Höhen der Kammer Sauerstoff entzogen. Wenn die Luft dünner wurde, musste der Pilot mit der Lösung der Aufgaben beginnen. Ihm wurde auch gesagt, dass bisher niemand damit Erfolg gehabt hatte.

Der Pilot löste mit großer Geschwindigkeit die Aufgaben im vollen Vertrauen, dass er die erste Ausnahme von der Regel sei. Die Aufgaben schienen leicht, und er war sich völlig sicher, dass er ein fehlerloses Ergebnis vorweisen würde. Er hatte darüber nicht den geringsten Zweifel.

Als aber der Kammer wieder Sauerstoff zugeführt wurde und er herauskam, um seinen Bogen korrigieren zu lassen, erkannte er, dass seine Fähigkeit zur Problemlösung gefährlich eingeschränkt war, weil sein Gehirn nicht genügend Sauerstoff bekommen hatte. Die Lektion war natürlich, dass er bei einem Flug in großen Höhen ohne Verwendung von Sauerstoff seinem eigenen Urteil nicht mehr trauen konnte und dadurch einen Absturz riskierte.

Das Urteil des Menschen ist durch die Sünde gefährlich eingeschränkt. Er ist sich absolut sicher, dass der Weg zum Himmel darin besteht, sein Bestes zu tun. Wenn man ihm erzählt, dass durch gute Werke bisher noch niemand gerettet wurde, dann ist er dennoch völlig sicher, dass er die erste Ausnahme von der Regel ist. Er ist sich gewiss, dass Gott ihn niemals an den Toren des Himmels abweisen wird.

Aber er hat Unrecht, und wenn er weiterhin auf seinem »geistlichen Sauerstoffmangel « besteht, so wird er verloren gehen. Seine Sicherheit und Rettung liegt im Vertrauen auf das Wort Gottes und nicht in seinem eigenen Urteil. Wenn er das tut, bereut er seine Sünden und nimmt den Herrn Jesus Christus als seinen Herrn und Heiland an. Weil Gottes Wort Wahrheit ist, können diejenigen, die ihm vertrauen, sicher sein, dass sie dem richtigen Weg folgen.