March

மனமகிழ்ச்சியே தினமகிழ்ச்சி

March 3

“The fruit of the spirit is.. .joy.” (Gal. 5:22)

Man never finds real joy till he finds the Lord. Then he enters in to what Peter calls “joy unspeakable and full of glory” (1 Pet. 1:8).

Anyone can rejoice when circumstances are favorable, but the joy which is the fruit of the Spirit is not the result of earthly circumstances. It springs from our relationship to the Lord and from the precious promises He has given to us. Christ would have to be dethroned before the Church could be finally robbed of its joy.

Christian joy can coexist with suffering. Paul weds the two when he speaks of “all patience and longsuffering with joyfulness” (Col. 1:11). The Thessalonian saints had received the word “in much affliction, with joy of the Holy Ghost” (1 Th. 1:6). Suffering saints down through the centuries have testified how the Lord has given them songs in the night.

Joy can coexist with sorrow. The believer can stand by the grave of a loved one, shed tears of sorrow at the loss, yet rejoice at the knowledge that the loved one is in the presence of the Lord.

But joy cannot coexist with sin. Whenever a Christian sins, he loses his song. Not until he confesses and forsakes that sin is the joy of his salvation restored.

The Lord Jesus told His disciples to rejoice when they were reviled, persecuted and falsely accused (Mt. 5:11, 12). And they did! Not many years later we read of them leaving the courtroom, “rejoicing that they were counted worthy to suffer shame for His name” (Acts 5:41).

Our joy increases as we grow in the knowledge of the Lord. At first, perhaps, we can rejoice in minor irritations, chronic ailments and trivial inconveniences. But the Spirit of God wishes to bring us to the point where we can see God when circumstances are at their worst and rejoice in the knowledge that His way is perfect. We are spiritually mature when we can say with Habakkuk, “Although the fig tree shall not blossom, neither shall fruit be in the vines; the labour of the olive shall fail, and the fields shall yield no meat; the flock shall be cut off from the fold, and there shall be no herd in the stalls; yet I will rejoice in the Lord, I will joy in the God of my salvation” (Hab. 3:17, 18).

மார்ச் 3

ஆவியின் கனியோ…. சந்தோசம் (கலா.5:22)

மனமகிழ்ச்சியே தினமகிழ்ச்சி

கர்த்தரைக் கண்டடையும் வரை மனிதன் தன் வாழ்வில் உண்மையான மனமகிழ்ச்சியைப் பெறமாட்டான். சொல்லிமுமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாகிய சந்தோஷம் என்று பேதுருவினால் அழைக்கப்படும் மகிழ்சிக்குள்ளாக, கர்த்தரைக் கண்டடைந்த பிறகே அவனால் நுழையமுடியும்.

சூழ்நிலைகள் சாதமாக இருக்கின்றவேளையில் யார் வேண்டுமானாலும் மகிழ்ந்திருக்கமுடியும். ஆனால் ஆவியின் கனி என்றழைக்கப்படும் சந்தோஷம் உலகீயச் சூழ்நிலைகளால் உண்டாவதற்கு நாம் கர்த்தரோடு பெற்றிருக்கும் உறவின் அடிப்படையிலும், அவர் நமக்கு அளித்துள்ள வாக்குறுதிகளின் அடிப்படையிலும் இது துளிர்க்கிறது. திருச்சபையில் மிளிரும் இந்த சந்தோஷம் அங்கிருந்து கொள்ளையிடப்பட வேண்டுமென்றால், முன்னதாக கிறிஸ்து அவரது அரியணையின்று அகற்றப்படவேண்டும்.

கிறிஸ்தவ மகிழ்ச்சியையுமம், பாடுகளையும் இணைந்து காணலாம். இவ்விரண்டையும் ஒருங்கிணைத்து, சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும், நீடிய சாந்தமும், என்று பவுல் கூறுவதாகக் காண்கிறோம் (கொலோ 1:11). தெசலோனிக்கே பட்டணத்துப் பரிசுத்தவான்கள, மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டார்கள் (1தெச 1;:6). கடந்த பல நூற்றாண்டுகளில் பாடுகளை அனுபவித்த இரவு வேளைகளிலேயே பரிசுத்தவான்கள், மகிழ்ச்சியின் கீதங்களைக் கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொண்டதாகச் சான்று வழங்கியுள்ளனர்.

சந்தோஷத்தையும் வருத்தத்தையும் இணைந்து காணலாம். மிகவும் அன்பு கூரப்பட்ட ஒருவரின் மறைவிற்குப் பிறுகு, அவ்விழப்பினால் அன்னாராது கல்லறையின் அருகில் நின்று ஒருவர் கண்ணீர் சிந்தலாம். அதே நேரத்தில், தனக்குப் பிரியமானவர் கர்த்தருடைய சமுகத்தில் இருக்கிறார் என்னும் அறிவினால் அந்த நண்பர் மகிழ்சிகொள்கிறவராகவும் இருக்கிறார்.

ஆனால், பாவத்தோடு சந்தோஷத்தைச் சேர்த்துக் காணமுடியாது. ஒரு கிறிஸ்தவன் பாவம் செய்கிறபோது, மகிழ்ச்சியின் கீதத்தை இழந்து போகிறான். தனது பாவத்தை அறிக்கைசெய்து அதனை விட்டுவிடுகிறவரை தான் இழந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை அவன் திரும்பப்பெறுகிறதில்லை.

நிந்தையால் இன்னலுறும் வேளையிலும், தீமையான மொழிகள் பொய்யாய்ச் சொல்லப்படும் வேளையிலும் சந்தோஷத்தோடு களிகூரவேண்டுமென்று, கர்த்தர் தம் சீடர்களுக்கு அறிவுரை வழங்கினார் (மத் 5:11-12). அவர்கள் அவ்வாறே நடந்து கொண்டனர். கர்த்தருடைய திருப்பெயரின் மேன்மையின் நமித்தம், சிறிது காலத்திற்குள்ளாகவே தாங்கள் அவமானம் அடைவதந்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியால், சந்தோஷமாய், நீதிமன்றத்தைவிட்டு வெளியேறினர் என்று படிக்கிறோம் (அப் 5:41)

கர்த்தரை அறிகிற அறிவனால் நமது மகிழ்சி பெருகுகிறது. ஒருவேளை, முதலில் சிறுதொல்லைகள், நீங்கா வியாதிகள், சிற்சில அசௌகரியங்கள் ஆகியவற்றின் ஊடாகச் செல்லும் தருணங்களில் நாம் மகிழ்ச்சியுடையவர்களாகக் காணப்படலாம். ஆனால் சூழ்நிலைகள் மிகவும் கடினமாக மாறி, பாடுகள் தொடர்ந்து நம்மைப் பற்றிக்கொள்ளும் வேளைகளில் தேவனைக் காணும்படியான நிலைக்கு நாம் வந்திட வேண்டுமென்று தூய ஆவியானவர் விரும்புகிறார். அத்தருணங்களிலும் அவருடைய வழியே நிறைவானது என்னும் அறிவு, நம்மைக் களிகூரச் செய்யும். இதன் நிமித்தம், அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்பேனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப் போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்சியாயிருப்பேன். என் இரட்ச்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன் (ஆப 3:17-18) என்று ஆபகூக்கோடு சேர்ந்து கூறுவோமாயின், ஆவிக்குரிய முதிர்ச்சி பெற்றவர்களாயிருப்போம்.

3. März

»Die Frucht des Geistes aber ist: … Freude …« Galater 5,22

Der Mensch findet so lange keine wirkliche Freude, bis er den Herrn gefunden hat. Dann erfährt er, was Petrus »unaussprechliche und verherrlichte Freude« nennt (1. Petrus 1,8).

Wenn die Umstände günstig sind, kann sich jeder freuen, aber die Freude, die eineFrucht des Geistes ist, ist nicht ein Produkt irdischer Umstände.Sie hat ihre Quellein unserer Beziehung zum Herrn und in den kostbaren Verheißungen, die Er unsgegeben hat. Christus müsste erst entthront werden, ehe die Gemeinde ihrer Freudeberaubt werden könnte.

Christliche Freude kann neben und zusammen mit Leiden existieren. Paulusschaffteine Verbindung der beiden, wenn er von »allem Ausharren und aller Langmut mitFreuden« spricht (Kolosser 1,11). Die Heiligen in Thessalonich hatten das Wort »invieler Drangsal mit Freude des Heiligen Geistes« aufgenommen (1. Thessalonicher1,6). Heilige, die leiden mussten, haben alle Jahrhunderte hindurch bezeugt, wie derHerr ihnen »Gesänge in der Nacht« gab.

Freude kann neben und mit Schmerz existieren. Der Gläubige kann am Grab eines geliebten Freundes oder Verwandten stehen und Tränen über den Verlust vergießen, aber sich gleichzeitig freuen in dem Bewusstsein, dass der Geliebte nun in der Gegenwart des Herrn ist.

Aber Freude kann nicht neben und zusammen mit Sünde existieren. Wann immerein Christ sündigt, verliert er sein Lied. Erst wenn er seine Sünde bekennt und lässt,kehrt die Freude seines Heils zurück.

Der Herr Jesus empfahl seinen Jüngern, sich zu freuen, wenn sie geschmäht, verfolgt und verleumdet würden (Matthäus 5,11.12). Und sie handelten danach! Nur einige Jahre später lesen wir von ihnen, wie sie den Gerichtssaal verließen »voll Freude, dass sie gewürdigt worden waren, für den Namen Schmach zu leiden« (Apostelgeschichte 5,41).

Unsere Freude vermehrt sich, wenn wir in der Erkenntnis des Herrn wachsen. Zuerst sind wir vielleicht nur in der Lage, uns bei kleineren Verärgerungen, chronischen Krankheiten und alltäglichen Unannehmlichkeiten zu freuen. Aber der Geist Gottes möchte uns an einen Punkt bringen, dass wir Gott auch dann noch sehen können, wenn die Umstände absolut unerträglich sind, und uns in dem Bewusstsein erfreuen können, dass alle Seine Wege vollkommen sind. Wir sind zur geistlichen Reife gelangt, wenn wir mit Habakuk sagen können: »Denn der Feigenbaum wird nicht blühen, und kein Ertrag wird an den Reben sein; und es trügt die Frucht des Olivenbaumes, und die Getreidefelder tragen keine Speise; aus der Hürde ist verschwunden das Kleinvieh, und kein Rind ist in den Ställen. Ich aber, ich will in dem HERRN
frohlocken, will jubeln in dem Gott meines Heils« (Habakuk 3,17.18).