June

பிள்ளைகளின் மரணம்

June 24

“Suffer the little children to come unto me, and forbid them not; for of such is the kingdom of God.” (Mark 10:14)

The death of children is always an especially severe trial of the faith of God’s people, and it is important to have some solid moorings to hold us at such a time.

The general belief among Christians is that children who die before they reach the age of accountability are safe through the blood of Jesus. The reasoning goes something like this: the child himself has never had the capacity to either accept or reject the Savior, so God reckons to him all the value of the work of Christ on the Cross. He is saved through the death and resurrection of the Lord Jesus, even though he himself has never fully understood the saving value of that work.

As far as the age of accountability is concerned, no one but God knows what that is. It is clearly different in each case since one child may mature earlier than another.

While there is no Scripture that says specifically that children who die before the age of accountability go to heaven, there are two lines of Scripture that support this view. The first is our verse for today: “Suffer the little children to come unto me, and forbid them not; for of such is the kingdom of God” (Mark 10:14). Speaking of children, Jesus said, “…of such is the kingdom of God.” He didn’t say that they had to become adults to enter the kingdom of God, but that they themselves are characteristic of those who are in the kingdom of God. This is a very strong argument for the salvation of little children.

Another line of proof is as follows. When Jesus was speaking of adults, He said, “The Son of man is come to seek and to save that which was lost” (Lu. 19:10). But when he was speaking of children, He omitted any mention of seeking. He simply said, “The Son of man is come to save that which was lost” (Matt. 18:11). The implication here is that children have not wandered away as adults have, and that the Savior sovereignly gathers them into His fold at the time of their death. Although they have never known about the work of Christ, God knows about it and reckons all the saving value of that work to their account.

We should not question the providence of God when He takes children away from us. As Jim Elliot wrote, “I must not think it strange if God takes in youth those whom I would have kept on earth till they were older. God is peopling eternity, and I must not restrict Him to old men and women.”

யூன் 24

சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடைபண்ணாதிருங்கள். தேவனுடைய இராஜயம் அப்படிப்பட்டவர்களுடையது. மாற்கு 10:14.

பிள்ளைகளின் மரணம்

சிறுபிள்ளைகளின் இறப்பு, என்றும் தேவனுடைய மக்களுடைய விசுவாசத்திற்கு வரும் மிகப்பெரும் சோதனையாக விளங்குகிறது. அந்த நேரங்களில் நாம் அசைக்கப்படாதபடிக்கு விளங்க உறுதியான சில நங்கூரங்கள் இன்றியமையாத தேவைகளாக உள்ளன.

தங்களுடைய வாழ்வைக் குறித்து கணக்கை ஒப்புவிப்பதற்குரிய வயதை எட்டாத குழந்தைகள் இறக்க நேரிட்டால், இயேசு கிறிஸ்துவின் குருதியால் பாதுகாக்கப்படுவர் என்று பொதுவான நம்பிக்கை கிறிஸ்தவர்களிடையில் விளங்குகிறது. அதற்குரிய காரணங்கள் இவ்விதமாகச் சொல்லப்படுகிறன. இரட்சகரை ஏற்றுக்கொள்வதற்கோ, வேண்டாமென மறுப்பதற்கோ அந்தக் குழந்தை இன்னும் அறிவுத்திறன் பெறவில்லை. ஆகவே, கிறிஸ்து சிலுவையில் ஆற்றிய தியாகச் செயலின் நற்பயனை, தேவன் அக்குழந்தைக்கு உரியதாக கணக்கிடுகிறார். அந்தக் கிரியையின் பயனை அக்குழந்தை முற்றிலும் அறிந்திருந்தபோதிலும், இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலமாக அது இரட்சிப்பைப் பெறுகிறது. கணக்கு ஒப்புவிப்பதற்கான வயதை தேவனைத் தவிர வேறொருவரும் அறியார். ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனைக் காட்டிலும் விரைவில் வளர்ச்சி அடைந்தவனாகக் காணப்படுவதால் ஒவ்வொருவருக்கும் அந்த வயது வேறுபடும்.

தனது வாழ்வின் கணக்கை ஒப்புவிப்பதற்கான வயதை எட்டாத குழந்தைகள் பரலோகத்திற்குச் செல்வார்கள் என திருமறை குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும், இரண்டு வேத வசனங்கள் இக்கருத்தை ஆதரிக்கின்றன. இன்றைய நாளுக்கு நாம் எடுத்துக் கொண்ட வசனம் அவற்றில் முதலாவதாவகும். அதில், சிறுபிள்ளையைக் குறித்து இயேசு கிறிஸ்து, ‘தேவனுடைய இராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” என்று கூறினார். அவர்கள் பெரியவர்களான பிறகே விண்ணுலகம் ஏற்கமுடியும் என்று அவர் கூறவில்லை. தேவனுடைய இராஜ்யத்தில் இருப்போர், சிறுபிள்ளைகளைப்போல நடக்கையுடையவர்களாக இருப்பார்கள் என்றே கூறினார். சிறுபிள்ளைகள் இரட்சிக்கப்படுவார்கள் என்பதற்கான வலுவான வாதமாக இது இருக்கிறது.

இக்கருத்தை உறுதிசெய்கிற வேறொரு வசனத்தை காணலாம். பெரியவர்களைப் பற்றி இயேசு கிறிஸ்து, ‘இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” என்றார் (லூக்கா 19:10). ஆனால், சிறுபிள்ளைகளைக் குறித்து பேசியபோது தேடுதல் என்பதை அவர் குறிப்பிடவில்லை. ‘மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்கவே வந்தார்” என்றே கூறினார் (மத்தேயு 18:11). பெரியவர்களைப் போலச் சிறுவர்கள் அலைந்து திரிகிறதில்லை. ஆகையால், தமது நிகரற்ற இறையாண்மையினாலே அவர்கள் மரணம் அடையும் வேளையில் அவர்களைத் தமது கட்டுக்குள் சேர்த்துக்கொள்கிறார். கிறிஸ்துவின் செயலை அவர்கள் அறியாதிருந்தும், அதன் பயனை தேவனே அவர்கள் கணக்கில் சேர்க்கிறார்.

நம்மைவிட்டு தேவன் சிறுபிள்ளைகளை எடுத்துக்கொள்ளும்போது, அவரை நாம் கேள்விகேட்க முடியாது. ‘ஒரு இளைஞனை தேவன் எடுத்துக் கொள்வாராயின் அதனை விநோதமாக நாம் எண்ணிப்பார்க்கக் கூடாது. விண்ணுலகத்தை அவர் மனிதர்களால் நிரப்புகிறார். வயது முதிர்ந்தவர்களை மட்டுமே அவர் எடுத்துக்கொள்ளவேண்டும் என அவரை என்னால் தடைசெய்யமுடியாது.” என ஜிம் எலியட் என்பார் கூறியுள்ளார்.

24. Juni

»Lasset die Kindlein zu mir kommen und wehret ihnen nicht, denn solcher ist das Reich Gottes.« Markus 10,14

Der Tod von Kindern ist immer eine besonders schwere Prüfung für den Glauben des Volkes Gottes, und es ist wichtig, dass wir einige feste biblische Fundamente haben, an denen wir uns in solchen Zeiten festhalten können.

Die allgemeine Auffassung unter den Christen ist, dass Kinder, die sterben, ehe sie moralische Entscheidungen treffen können, durch das Blut des Lammes gerettet sind. Die Schlussfolgerung sieht in etwa so aus: Das Kind selbst hatte niemals die Fähigkeit oder Möglichkeit, den Herrn als Heiland anzunehmen oder zu verwerfen, deshalb rechnet ihm Gott den vollen Wert des Werkes Christi am Kreuz zu. Es ist gerettet durch den Tod und die Auferstehung des Herrn Jesus, wenn es auch selbst niemals die rettende Wirkung dieses Werkes verstehen konnte.

Was nun das Alter betrifft, ab welchem ein Kind zu moralischen Entscheidungen fähig ist, so weiß Gott allein, wann das ist. Sicher liegt jeder Fall anders, da manche Kinder früher reif sind als andere.

Wenn es auch keine Schriftstelle gibt, die eindeutig sagt, dass Kinder, die vor dem Alter moralischer Entscheidungsfähigkeit sterben, in den Himmel kommen, gibt es doch zwei Linien in der Schrift, die diese Ansicht unterstützen. Die erste finden wir in unserem Vers für heute: »Lasset die Kindlein zu mir kommen, und wehret ihnen nicht, denn solcher ist das Reich Gottes« (Markus 10,14). Der Herr Jesus sprach von Kindern, als Er sagte: »… solcher ist das Reich Gottes.« Er sagte nicht, dass sie erwachsen werden müssten, um ins Reich Gottes eingehen zu können, sondern dass sie selbst charakteristisch sind für diejenigen, die im Reich Gottes sind. Dies ist ein sehr starkes Argument für die Errettung der kleinen Kinder.

Eine andere Linie der Beweisführung ist folgende: Als Jesus von Erwachsenen sprach, sagte Er: »Denn der Sohn des Menschen ist gekommen, zu suchen und zu erretten, was verloren ist« (Lukas 19,10). Aber als Er von Kindern sprach, sprach Er nicht vom »Suchen«. Er sagte einfach: »Denn der Sohn des Menschen ist gekommen, das Verlorene zu erretten« (Matthäus 18,11). Hier wird angedeutet, dass die Kinder nicht in die Irre gegangen sind wie die Erwachsenen und dass der Herr sie zur Zeit ihres Todes in souveräner Macht zu Seiner Herde hinzufügt. Obwohl sie niemals das Werk Christi gekannt haben, kennt Gott es und rechnet ihnen die ganze rettende Kraft dieses Werkes zu. Wir sollten nicht die Vorsehung Gottes in Frage stellen, wenn Er Kinder von uns nimmt. Jim Elliot schrieb: »Ich darf es nicht für seltsam halten, wenn Gott diejenigen schon in ihrer Jugend zu sich nimmt, die ich gerne auf der Erde gelassen hätte, bis sie älter gewesen wären. Gott bevölkert die Ewigkeit, und ich darf Ihn nicht auf alte Männer und Frauen beschränken. «