June

தேவ கோபம்

June 14

“The wrath of God is revealed from heaven against all ungodliness and unrighteousness of men.” (Rom. 1:18)

The wrath of God is His fierce anger and retributive punishment directed against unrepentant sinners in time and in eternity. A. W. Pink has pointed out that it is as much a divine perfection as is His faithfulness, power and mercy. We need make no apology for it.

In pondering the wrath of God, there are a few facts we should keep in mind.

There is no conflict between God’s love and His wrath. True love punishes sin, rebellion and disobedience.

If men refuse God’s love, what is left but His wrath? There are only two eternal abodes, heaven and hell. If men refuse heaven, they thereby choose hell.

God did not create hell for men, but for the devil and his angels (Mt. 25:41). The Lord does not desire the death of the wicked (Ezek. 33:11). But there is no alternative for the Christ-rejecter.

Judgment is spoken of as God’s strange work (Isa. 28:21). The suggestion is that He prefers to show mercy (Jas. 2:13b).

There is no vindictiveness or spite in God’s wrath. It is righteous wrath, without any stain of sin.

The wrath of God is an attribute we are not called to imitate. It is peculiarly His in the sense that He alone can exercise it with absolute justice. Thus Paul writes to the Romans, “Never take your own revenge, beloved, but leave room for the wrath of God, for it is written, ‘Vengeance is mine, I will repay, says the Lord’” (Rom. 12:19 NASB).

The Christian is called on to display righteous anger, but it must be righteous. It must not overflow into sinful wrath (Eph. 4:26). And it should be exercised only when God’s honor is at stake, never in self-defense or self-justification.

If we really believe in the wrath of God, it should move us out to share the Gospel with those who are still on the broad road that leads to destruction. And when we preach the wrath of God, it should be with tears of compassion.

யூன் 14

மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்திற்கும், விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ரோமர் 1:18.

தேவ கோபம்

இவ்வுலகிலும், வரவிருக்கிற நித்தியத்திலும் மனந்திரும்பாத பாவிகளுக்கு எதிராகச் செலுத்தப்படும் கடுஞ்சினமும், தண்டனையுமே தேவனுடைய கோபம் என்றழைக்கப்படுகிறது. அவருடைய உண்மையுள்ள தன்மை, வல்லமை, இரக்கம், ஆகியவற்றைப்போல அவருடைய கோபமும் தெய்வீகத் தன்மையுள்ள நிறைவான பண்பாகும் என்று A. W. பிங்க் என்பார் உரைத்துள்ளார். இது குறித்து நாம் வருத்தம் அடைய வேண்டியதில்லை.

தேவகோபத்தைக் குறித்து நாம் ஆழ்ந்து சிந்திக்கிற வேளையில் ஒருசில உண்மைகளை நினைவிற் கொள்ளுதல் இன்றியமையாததாகும்.

தேவ அன்பிற்கும், தேவ கோபத்திற்கும் எந்தவிதக் கருத்து வேறுபாடுமில்லை. பாவத்தையும், எதிர்த்து நிற்கும் மனப்பான்மையையும், கீழ்படியாமையையும், உண்மையான அன்பு தண்டிக்கும். தேவனுடைய அன்பை மனிதர்கள் நிராகரித்ததால், அவருடைய கோபத்தை; தவிர வேறென்ன கிடைக்கும்? நித்தியத்தைக் கழிப்பதற்கு இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று பரலோகம், மற்றொன்று நரகம், மனிதர்கள் பரலோகத்தை வேண்டாமென்று நிராகரிப்பதால், அவர்களே நரகத்தைத் தெரிந்து கொள்கின்றனர்.

தேவன் நரகத்தை மனிதர்களுக்கென்று உண்டாக்கவில்லை. அதைப் பிசாசுக்கும், அவனுடைய தூதர்களுக்குமென்றே உண்டாக்கினார். (மத்.25:41). துன்மார்க்கருடைய மரணத்தைக் கர்த்தர் விரும்புகிறதில்லை (எசேக்.33:11). என்றாலும் கிறிஸ்துவை நிராகரித்தவர்களுக்கு வேறு இடமில்லை. நியாயத்தீர்ப்பு தேவனுடைய அபூர்வமான கிரியை என்று சொல்லப்பட்டிருக்கிறது (ஏசா.28:21). இரக்கம் செய்வதையே அவர் விரும்புகிறார் என்பதை இது காட்டுகிறது (யாக்.2:13).
தேவ கோபத்தில் பழிக்குப்பழி வாங்கும் இயல்போ, காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. அது நீதியுள்ள கோபம். அதில் பாவக்கறையேதும் இல்லை.

தேவனுடைய கோபம் என்னும் அவருடைய இயல்பை, நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்லப்படவில்லை. அது அவருடைய தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாகும், அதாவது, அவர் ஒருவரே முற்றிலும் நீதியாய்க் கோபத்தைச் செலுத்தக் கூடியவர். ‘பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால் நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்” என்று பவுல் ரோமருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார் (ரோமர் 12:19).

நீதியுள்ள கோபத்தை வெளிப்படுத்திக் காட்டுவேண்டுமென்று கிறிஸ்தவனுக்குச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அது நீதியாய் இருக்க வேண்மமேயொழிய பாவமுள்ள கோபமாகப் பொங்கியெழக் கூடாது (எபேசி.4:26). தற்காப்புக்காகவோ, சுயநீதிக்காவோ இதனைப் பயன்படுத்தாமல் தேவனுடைய மேன்மை பாதிக்கப்படக்கூடும் என்ற நிலையில் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

உண்மையாவே தேவ கோபத்தின் மீது நாம் நம்பிக்கை உடையவர்களாக இருப்போமென்றால், அழிவை நோக்கி விலாசமான பாதையில் செல்லும் மனிதர்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரைந்து செல்வோம். தேவனுடைய கோபத்தைக் குறித்துப் பிரசங்கிக்கும்போது அச்செய்தி இரக்கத்தின் கண்ணீரினால் நனைந்திருக்க வேண்டும்.

14. Juni

»Denn es wird geoffenbart Gottes Zorn vom Himmel her über alle Gottlosigkeit und Ungerechtigkeit der Menschen.« Römer 1,18

Der Zorn Gottes ist Sein rückhaltloser Grimm und Seine vergeltende Strafe, gerichtet gegen die unbußfertigen Sünder in Zeit und Ewigkeit. A.W. Pink hat darauf hingewiesen, dass er ebenso eine göttliche Tugend ist wie Seine Treue, Macht und Barmherzigkeit. Wir brauchen uns dafür nicht zu entschuldigen.

Wenn wir über den Zorn Gottes nachdenken, sollten wir uns einige Fakten vor Augen führen.

Es besteht kein Widerspruch zwischen Gottes Liebe und Seinem Zorn. Wahre Liebe bestraft Sünde, Rebellion und Ungehorsam.

Wenn die Menschen Gottes Liebe ablehnen, was bleibt dann noch übrig als Sein Zorn? Es gibt nur zwei Aufenthaltsorte für die Ewigkeit, Himmel und Hölle. Wenn die Menschen den Himmel ablehnen, entscheiden sie sich damit für die Hölle. Gott hat die Hölle nicht für die Menschen bereitet, sondern für den Teufel und seine Engel (Matthäus 25,14). Der Herr hat kein Gefallen am Tod des Gesetzlosen (Hesekiel 33,11). Aber für den, der Christus verwirft, gibt es keine Alternative. Das Gericht wird als Gottes »befremdendes Werk« bezeichnet (Jesaja 28,21). Das scheint darauf hinzuweisen, dass Gott viel lieber Barmherzigkeit erzeigen möchte (Jakobus 2,13b).

Gottes Zorn enthält keinerlei Gefühle der Rache oder Gehässigkeit. Es ist gerechter Zorn ohne jeden Makel der Sünde.

Der Zorn Gottes ist eine Eigenschaft, zu deren Nachahmung wir nicht aufgefordert werden. Er ist allein Sein Recht, weil Er allein ihn mit vollkommener Gerechtigkeit ausüben kann. Darum schreibt Paulus an die Römer: »Rächet nicht euch selbst, Geliebte, sondern gebet Raum dem Zorn; denn es steht geschrieben: ›Mein ist die Rache, ich will vergelten, spricht der Herr« (Römer 12,19).

Der Christ darf gerechten Zorn zeigen, aber er muss gerecht sein. Er darf nicht in sündigen Zorn übergehen (Epheser 4,26). Und er sollte nur ausgeübt werden, wenn Gottes Ehre auf dem Spiel steht, niemals aber zur Selbstverteidigung oder -rechtfertigung.

Wenn wir wirklich an den Zorn Gottes glauben, dann sollte uns das hinaustreiben, um das Evangelium denen mitzuteilen, die immer noch auf der breiten Straße sind, welche zum Verderben führt. Und wenn wir den Zorn Gottes predigen, dann sollten wir das mit Tränen des Mitleids tun.