July

குறை கூறும் ஆவி

July 18

“Therefore Michal the daughter of Saul had no child unto the day of her death.” (2 Sam. 6:23)

David was ecstatic when he brought the ark to Jerusalem and when it was placed in the tent that he had specially prepared for it. Sensing that this was one of his greatest achievements and one of the most glorious moments in his career, the king danced before the Lord with all his might. His wife, Michal, ridiculed him for what she thought was shameful behavior. As a direct result of her critical attitude, she had no child unto the day of her death.

We learn from this that a critical spirit produces barrenness. Of course, when we say that, we are not speaking about constructive criticism. If criticism is true, we should welcome it and benefit from it. There are few friends in life who love us enough to give helpful criticism.

But destructive criticism can be devastating. It can destroy the work of God in someone’s life, and can undo the progress of years in a few minutes.

In the incident involving David, the ark represents Christ and the ark given its place in Jerusalem speaks of Christ enthroned in the human heart. When that happens, the Spirit-filled believer cannot help but express his exuberance and enthusiasm. This often stirs up the hostility of unbelievers and sometimes the scorn of other Christians. But that critical spirit inevitably leads to barrenness.

It can lead to barrenness not only in an individual life but in a local assembly as well. Take, for example, a fellowship where the young people are subjected to a continual torrent of criticism. They are taken to task for the way they dress, for their hair styles, for their public prayers, for their music. Instead of patiently training them, the leadership expects them to be instantly full-grown. Soon the young people drift away to more congenial fellowships, and the assembly is left to die on the vine.

Let us be warned by the example of Michal that censoriousness not only harms its victims but takes its revenge on the one who practices it. That revenge is spiritual barrenness.

யூலை 18

அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது. 2.சாமுவேல் 6:23.

குறை கூறும் ஆவி

உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமிற்குக் கொண்டு வந்து, அதற்கென்று ஆயத்தப்படுத்தப்பட்ட சிறப்பு மிக்க கூடாரத்தில் அதனை வைத்தபோது தாவீது பரவசமடைந்தான். தனது வாழ்வில் அந்த நேரமே மகிமைபொருந்திய நேரமென்றும், தான் செய்த செயல்களில் அதுவே மிகச் சிறந்த சாதனையென்றும், உணர்ந்த அரசன், தனது வலிமைகொண்ட மட்டும் கர்த்தருக்கு முன்னர் ஆடி மகிழ்ந்தான். அதனைக் கண்ணுற்ற அவன் மணைவி மீகாள், அச்செயல் அவமானத்திற்குரியது என்று கருதித் தன் கணவனை ஏளனம் செய்தாள். அதன் விளைவாக அவள் தன் வாழ்நாட் காலமெல்லாம் பிள்ளையற்றவளாக இருந்தாள்.

குறைகூறும் ஆவி குறைகூறுபவர்களிடம் பயனற்ற வெறுமையை உண்டு பண்ணுகிறது என்னும் பாடத்தை இதிலிருந்து கற்றுக்கொள்கிறோம். ஆக்கபூர்வமான ஆலோசனை சொல்லப்படுவதைப் பற்றி இங்கு நாம் பேசவில்லை. உண்மையை எடுத்துரைத்து நமது குறைகளைச் சுட்டிக்காட்டினால் அதனை நாம் வரவேற்க வேண்டும், அதன் வாயிலாகப் பயன்பெற வேண்டும். நமது குறைகளைத் தீர்க்கதக்க வகையில் ஆலோசனைகளைத் தரக்கூடிய அளவிற்கு வாழ்வில் நண்பர்கள் சிலரையே நாம் பெற்றிருக்கிறோம்.

ஆயினும், குறைகூறிக் குற்றம் காணுதல் ஒருவனைப் பாழாக்கிவிடக் கூடியதாக இருக்கிறது. அதன் நிமித்தமாக ஒருவருடைய வாழ்வில் ஆற்றப்படும் இறையூழியம் ஒழிந்து போய்விடும். பல்லாண்டுகளாகச் செய்த உழைப்பினால் அடைந்த வளர்ச்சி சில மணித்துளிகளில் பயனற்றுப் போகும்.

தாவீதின் வாழ்கையில் நடந்த நிகழ்ச்சியைச் சிந்தித்துப் பார்க்குங்கால், உடன்படிக்கைப் பெட்டி கிறிஸ்துவையும், பெட்டி வைக்கப்பட்ட இடமாகிய எருசலேம், கிறிஸ்து முடிசூடப்பட்ட மனித இதயத்தையும் குறிக்கிறது என அறிவோம். அவ்வாறு ஒரு மனிதனிடம் நிழுங்கால், அவன் ஆவியின் நிறைவைப் பெறுகிறான். உற்சாகத்துடன் உணர்ச்சி பொங்கியவனாகத் தனது உள்ளத்தை வெளிப்படுத்துகிறான். அதன் காரணமாக அவ்வப்போது பிற அவிசுவாசிகளின் உள்ளத்தில் பகமை தூண்டிவிடப்படுகிறது. மற்ற கிறிஸ்தவர்களும் சில வேளைகளில் ஏளனம் செய்கின்றனர். அவ்வகையில் குறைகூறுவது குறைகூறுவோருடைய வாழ்வில் தவிர்க்க இயலா வெறுமையையே உண்டாக்கும்.

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, உள்ளுர் சபையிலும் பயனற்ற வெறுமையான நிலையை அது ஏற்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக, இளைஞர்களைக் குறித்துத் தொடர்ந்து குறைகூறும் ஒரு ஐக்கியத்தை எடுத்துக் கொள்ளுவோம். அவர்கள் ஆடை அணியும் விதம், முடி அலங்காரம், அவர்கள் ஏறுறெடுக்கும் ஜெபம், இசை யாவற்றையும்குறித்துக் குறைகூறுவார்கள். பொறுமையோடு அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு மாறாக, முற்றிலும் வளர்ச்சியடைந்த நிலையில் அவர்கள் விளங்கவேண்டுமென்று தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நடப்பது என்ன? கொஞ்ச நாட்களில் தங்களது மனதிற்கிசைந்த ஐக்கியத்தை நாடி இளைஞர்கள் சென்று விடுவர். அத்தகைய சபை சாவுக்கென்று விதிக்கப்பட்டிருக்கிறது.

மீகாளின் உதாரணம் நமக்கொரு எச்சரிப்பாக விளங்குகிறது. குறைகூறப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி குறைகூறியவருக்கும் இச்செயல் தீங்கு விளைவிக்கிறது. அவரிடத்திலும் ஆவிக்குரிய நிலையில் மலட்டுத்தன்மையை அது ஏற்படுத்துகிறது.

18. Juli

»Michal aber, die Tochter Sauls, hatte kein Kind bis zum Tage ihres Todes.« 2. Samuel 6,23

David floss über vor Begeisterung, als er die Bundeslade nach Jerusalem brachte und sie in das Zelt gestellt wurde, das er speziell dafür vorbereitet hatte. Der König spürte, dass dies eine seiner größten Errungenschaften und einer der herrlichsten Augenblicke seiner Laufbahn war, und so tanzte er mit aller Kraft vor dem Herrn. Seine Frau Michal verspottete ihn für dieses ihrer Meinung nach unwürdige Verhalten. Als direkte Konsequenz ihrer Kritik bekam sie bis zu ihrem Tod kein Kind.

Wir lernen daraus, dass ein Kritikgeist zu Unfruchtbarkeit führt. Natürlich reden wir dabei nicht über aufbauende Kritik. Wenn Kritik berechtigt ist, sollten wir sie dankbar annehmen und daraus Nutzen ziehen. Es gibt wenige Freunde im Leben, die uns genügend lieben, um an uns hilfreiche Kritik zu üben.

Aber negativ ausgerichtete Kritik kann sich katastrophal auswirken. Sie kann das Werk Gottes in jemandes Leben zerstören und jahrelanges Wachstum in wenigen Minuten zunichte machen. In der Geschichte mit David ist die Lade ein Bild auf Christus, und die nach Jerusalem gebrachte Lade spricht von Christus, der im menschlichen Herzen Seinen Thron einnimmt. Wenn das geschieht, kann der vom Heiligen Geist erfüllte Gläubige nicht anders, als seiner überströmenden Freude Ausdruck zu geben. Das erweckt oft die Feindschaft von Ungläubigen und manchmal
auch die Verachtung anderer Christen. Doch diese kritische Haltung führt unvermeidlich zu Unfruchtbarkeit.

Sie kann nicht nur im persönlichen Leben Unfruchtbarkeit bewirken, sondern auch in einer örtlichen Versammlung. Nehmen wir zum Beispiel eine Versammlung, wo die jungen Leute einer unaufhörlichen Sturzflut von Kritik unterworfen sind. Sie werden wegen ihrer Kleidung zur Rechenschaft gezogen, wegen ihrer Haartracht, ihrer öffentlichen Gebete, ihrer Musik. Anstatt sie geduldig zu führen und zu belehren, erwarten die Leiter von ihnen, dass sie von einem Augenblick auf den anderen erwachsen werden. Bald bleiben die jungen Menschen weg und gehen in andere Gemeinden, wo ihnen mehr Verständnis entgegengebracht wird, und die Versammlung stirbt bei lebendigem Leib.

Wir sollten uns von dem Beispiel Michals warnen lassen, dass ein solcher Richtgeist nicht nur seine Opfer verletzt, sondern sich auch an dem rächt, der ihn ausübt. Diese Vergeltung besteht in geistlicher Unfruchtbarkeit.