December

ஐசுவரியவானின் இச்சை

December 24

“The rich, man thinks of his wealth as an impregnable defense, a high wall of safety. What a dreamer!” (Prov. 18:11 Living Bible)

The rich fool in Luke’s gospel had so much wealth he didn’t know what to do with it. So he decided to tear down his barns and silos and build bigger ones. Then he thought he would feel satisfied, not knowing that he would die as soon as his building project was completed. His wealth wouldn’t save him from death and the grave.

Sider says, “The rich fool is the epitome of the covetous person. He has a greedy compulsion to acquire more and more possessions, even though he does not need them. And his phenomenal success at piling up more and more property leads to the blasphemous conclusion that material possessions can satisfy all his needs. From the divine perspective, however, this attitude is sheer madness. He is a raving fool.”

There is a legend about a man who wanted to become rich in the stock market. When someone told him he could have anything he wanted, he said he would like to see the newspaper one year from that day. His idea, of course, was that he could make a fortune by buying the stocks that would rise the most during the ensuing year. When he got the paper, he gloated about how rich he would become. But then he looked at the death notices and his name was there.

The psalmist pours scorn on the rich people whose “inner thought is, that their houses are forever, and their dwelling places to all generations; they have called their lands after their own names” (Psa. 49:11 NASB). But they die and leave their wealth to others. “Man in his pomp will not endure; he is like the beasts that perish” (Psa. 49:12 NASB).

It is a true saying that money is the universal passport for everywhere except heaven, and the universal provider for everything but happiness.

No rich person ever has a dollar sign inscribed on his tombstone, even though money has been the obsession of his life. If he used the symbol of what has been paramount to him, it would be the $. But in death he chooses a religious symbol, such as a cross. It is a final gesture of hypocrisy. The righteous look on and say, “Lo, this is the man that made not God his strength; but trusted in the abundance of his riches, and strengthened himself in his wickedness” (Psa. 52:7). And God writes his epitaph, “So is he that layeth up treasure for himself, and is not rich toward God” (Lu. 12:21).

டிசம்பர் 24

ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம். அது அவன் எண்ணத்தில் உயர்ந்து மதில் போலிருக்கும். நீதிமொழிகள் 18:11.

ஐசுவரியவானின் இச்சை

‘செல்வந்தன் தனது பொருட்செல்வத்தைத் தன்னுடைய அரணான பாதுகாப்பாகவும் உயர்ந்த மதிலாகவும் நினைக்கிறான். என்னே அவனுடைய கனவு” என்று இவ்வசனம் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பில் உள்ளது.

தனது செல்வத்தைக் கொண்டு என்ன செய்வது என்று அறியாத அளவிற்கு செல்வச்செழிப்புடையவனாக இருந்தான் என்று செல்வந்தனாகிய ஒரு மூடனைக் குறித்து லூக்கா நற்செய்தி நூலில் காண்கிறோம். ஆகவே தனது களஞ்சியத்தை உடைத்துப் பெரிய களஞ்சியத்தைக் கட்ட அவன் முடிவுசெய்தான். அவனுடைய கட்டுமானப்பணி முடிவடைந்தவுடன் அவன் இறந்து போவான் என்பதை அறியாமல், தான் மனநிறைவு அடையப்போவதாக எண்ணிக்கொண்டான். மரணத்தினின்றும், கல்லறையினின்றும், அவனுடைய செல்வம் அவனைப் பாதுகாக்காது.

சைடர் என்பார் எழுதியுள்ளதாவது, ‘இச்சை மிகுந்த மனிதனுக்கு அந்த மதிகேடனாகிய செல்வந்தன் எடுத்துக்காட்டாக விளங்குகிறான். அவன் தேவைகள் அற்றவனாயிருந்தும், பேராசையின் கட்டாயத்தினால் மென்மேலும் செல்வத்தைச் சேர்க்கிறவனாயிருக்கிறான். அவன் பொருட்செல்வத்தைச் சேர்ப்பதில் மகத்தான வெற்றியடைந்த காரணத்தினால், தன்னுடைய தேவைகளை இந்தப் பொருட்செல்வம் நிறைவுசெய்யும் என்னும் தேவதூஷணமாகிய முடிவிற்கு வந்து விடுகிறான். தேவனுடைய கண்ணோட்டத்தில் இது வெறும் மதியீனமே. அவன் ஒரு மூர்க்கமான மதிகேடன்.”

பங்குச் சந்தையில் பெரும் பணக்காரனாக ஆகவேண்டும் என்று விரும்பிய ஒரு மனிதனைப் பற்றிய கற்பனைக் கதை ஒன்று உண்டு. அவன் விரும்பிய யாவற்றையும் பெற்றுக்கொள்வான் என்ற வாக்கைப் பெற்றான். இன்னும் ஓராண்டிற்கான செய்தித்தாள்களைத் தான் காணவேண்டுமென்று  அவன் விரும்பிக் கேட்டான். அவையாவும் அவனுக்குத் தரப்பட்டன. இன்னும் ஓராண்டில் எந்தப் பங்குகள் அதிகமாக விலையேறும் என்பதை அந்த செய்தித்தாட்களில் கண்டு அந்தப் பங்குகளில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டுமென்று தீர்மானித்தான். ஓராண்டுக்குப் பிறகு தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கும் என்று கணக்கிட்டு பேராசை மிகுதியால் பெருமகிழ்ச்சியடைந்தான். பின்னர் அந்த செய்தித்தாட்களில் உள்ள மரண அறிவிப்புக்களைப் பார்க்கத் தொடங்கினான். சில பக்கங்களைத் திருப்புவதற்கு முன்னரே அவனுடைய பெயரை அந்த அறிவிப்பில் கண்டான்!

“தங்கள் வீடுகள் நித்தியகாலமாவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்று அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள். ஆகிலும் கனம் பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை. அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்னும் சொற்களால் செல்வந்தர்கள் மீது வெறுப்பைக் கொடுக்கிறான் சங்கீத ஆசிரியன் (சங்.49:11,12). அவர்கள் இறந்துபோய் தங்களுடைய செல்வத்தைப் பிறருக்கு விட்டுச் செல்கின்றனர்.

“இப்பிரபஞ்சம் எங்கும் செல்ல பணம் பயண இசைவுச் சீட்டாக (Passport) விளங்குகிறது. ஆனால் அதைக்கொண்டு பரலோகம் செல்ல முடியாது. இப்பிரபஞ்சத்தில் அதைக்கொண்டு எதைவேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் மகிழ்ச்சியை வாங்கமுடியாது” என்னும் கூற்று உண்மையானதே.

செல்வத்தைப் பணம் ஆட்டிப் படைத்திருந்தாலும், எந்தச் செல்வந்தனுடைய கல்லறையிலும் ரூபாய் நோட்டின் படம் வரையப்படவில்லை. எந்த நாட்டின் பணத்தின் சின்னத்தையும் தெரிந்தெடுக்காமல், மதத்தின் சின்னத்தையே அவன் பயன்படுத்துகிறான். இதுவே அவனுடைய மாய்மாலத்தின் கடைசிக் காட்சி, நீதிமானோ அவனை நோக்கி, ‘இதோ தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப் பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான்” என்பான் (சங்.52:7). தேவன் அவனுடைய கல்லறையில் மீது, ‘தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்று எழுதி வைக்கிறார்.

24. Dezember

»Das Vermögen des Reichen ist seine feste Stadt und wie eine hoch ragende Mauer – in seiner Einbildung.« Sprüche 18,11

Der reiche Mann, von dem im Lukasevangelium erzählt wird, hatte so viel Reichtum, dass er gar nicht wusste, was er damit anfangen sollte. Deshalb entschloss er sich, seine Scheunen und Speicher einzureißen und größere zu bauen. Dann, so dachte er, würde er zufrieden sein. Doch er wusste nicht, dass er sterben würde, sobald sein Bauvorhaben in die Tat umgesetzt
war. Sein Reichtum konnte ihn nicht vor dem Tod und dem Grab bewahren.

Sider sagt dazu: »Dieser reiche Mann ist der Typ eines habgierigen Menschen. Er hat das unstillbare Verlangen danach, immer mehr und mehr Besitztümer anzuhäufen, obwohl er sie eigentlich gar nicht braucht. Und sein einzigartiger Erfolg im Aufhäufen von Reichtum führt ihn zu dem gotteslästerlichen Schluss, dass materieller Besitz alle seine Bedürfnisse befriedigen könnte. Aus der göttlichen Perspektive jedoch ist diese Einstellung der helle Wahnsinn. In Gottes Augen ist dieser Mann ein vollkommener Narr.«

Es gibt eine Geschichte von einem Mann, der durch Börsenspekulationen reich werden wollte. Als ihm jemand anbot, er könnte sich etwas wünschen, was er nur wollte, da sagte er, er wollte gern die Zeitung sehen, die ein Jahr später am gleichen Tag erscheinen würde. Er dachte dabei natürlich daran, dass er sich so ein Vermögen aufbauen könnte, indem er jetzt die Aktien aufkaufte, die im Laufe des kommenden Jahres am meisten steigen würden. Er bekam auch wirklich die Zeitung und freute sich schon hämisch im Gedanken daran, wie ungeheuer reich er werden würde. Aber
dann kam er zu den Todesanzeigen, und da fand er seinen eigenen Namen.

Der Psalmist ist voller Verachtung für die reichen Leute und sagt von ihnen: »Ihr Gedanke ist, dass ihre Häuser in Ewigkeit stehen, ihre Wohnung von Geschlecht zu Geschlecht; sie hatten Ländereien nach ihrem Namen benannt« (Psalm 49,12). Aber dann sterben sie und müssen ihren Reichtum anderen überlassen: »Doch der Mensch, der im Ansehen ist, bleibt nicht; er gleicht dem Vieh, das vertilgt wird« (Vers 13).

Es ist schon richtig, wenn man sagt, dass das Geld ein überall gültiger Pass ist, nur nicht für den Himmel, und dass man sich überall alles damit beschaffen kann, nur nicht das Glück.

Kein reicher Mensch hat sich je einen Geldschein in seinen Grabstein einmeißeln lassen, auch wenn er im Leben oft besessen war vom Geld. Wenn er das Zeichen nehmen wollte, was ihm am allerwichtigsten war, dann müsste auf seinem Grabstein eigentlich »€« stehen. Aber für das Grab sucht er sich ein religiöses Symbol aus wie beispielsweise das Kreuz. Das ist im Grunde eine letzte Geste der Heuchelei. Die Gerechten sehen weiter und sagen: »Siehe, der Mann machte nicht Gott zu seinem Schutz, sondern vertraute auf die Größe seines Reichtums, durch sein Schadentun war er stark!« (Psalm 52,9). Und Gott schreibt auf seinen Grabstein: »So ist, der für sich Schätze sammelt und nicht reich ist im Blick auf Gott« (Lukas 12,21).