December

தேவனைச் சோதிப்பது

December 12

“Thou shalt not tempt the Lord thy God (Matt. 4:7)

What does it mean to tempt the Lord? Is it something of which we can be guilty?

The children of Israel tempted the Lord when they complained about the lack of water in the wilderness (Ex. 17: 7). In saying, “Is the Lord among us, or not?” they doubted not only His divine presence but His providential care for them as well.

Satan tempted the Lord when he challenged Him to jump down from the peak of the Temple (Lu. 4:9-12). Jesus would have tempted God the Father if He had done so, because He would have been performing a stunt, something that was outside the Father’s will.

The Pharisees tempted the Lord when they asked Him if it was lawful to pay tribute to Caesar (Matt. 22:15-18). They thought that no matter how He answered, He would alienate either the Romans or those Jews who were violently anti-Roman.

Sapphira tempted the Spirit of the Lord by pretending to give the total proceeds from a sale of property to the Lord, when actually she held back some for herself (Acts 5:9).

Peter told the council at Jerusalem that it would be tempting God to put Gentile believers under the law, a yoke that the Jewish people themselves had not been able to bear (Acts 15:10).

To tempt God is “to see how much one can get away with before He judges; it means to presume on Him, to see if He will perform His Word, or to stretch Him to the limits of judgment (cf. Deut. 6:16; Matt. 4:7)” (Toussaint). We tempt God when we murmur or complain, because we are, in effect, doubting His presence, power or goodness. We are saying that He doesn’t know our circumstances, He doesn’t care, or He isn’t able to deliver us.

We tempt God when we needlessly expose ourselves to danger and expect Him to rescue us. Every so often we read of misguided believers who handle poisonous snakes and die as a result. Their reasoning was that God had promised safety in Mark 16:18; “They shall take up serpents.” But this was intended to justify our performing miracles only when they are necessary in carrying out His will in and through us.

We tempt God when we lie to Him, and we do this when we profess greater dedication, sacrifice and commitment than we actually intend to deliver. Just as the Pharisees tempted Christ by their hypocrisy, so we tempt Him by ours.

Finally, we tempt the Lord whenever we remove ourselves from the sphere of His will for us and act in self-will.

It is an astounding thing that a creature should ever desire or dare to tempt his Creator, or that a sinner should thus insult his Savior!

டிசம்பர் 12

உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக. மத்தேயு 4:7

தேவனைச் சோதிப்பது

கர்த்தரைப் பரீட்சை பார்ப்பது என்பது யாது? அவ்வாறு செய்தால் நமக்குக் குற்ற உணர்வு உண்டாகக் கூடுமோ?

வனாந்திரத்தில் இஸ்ரவேல் மக்களுக்குக் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்தார்கள் (யாத்.17:7). ‘கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா? என்னும் கேள்வியை எழுப்பினபோது, அவர்களோடு அவருடைய சமுகம் இருக்கிறதா என்பதைக் குறித்துமட்டும் ஐயம் எழவில்லை. தங்களுக்குத் தேவையானவற்றை அவரால் தரமுடியுமா என்றும் ஐயமுற்றனர்.

தேவாலயத்து உப்பரிகையிலிருந்து தாழக்குதிக்கும்படியாகக் கர்த்தருக்கு அறைகூவல் விடுத்து, சாத்தான் அவரைப் பரீட்சை பார்த்தான் (லூக்கா 4:9-12). அவன் கூறியபடி கர்த்தர் செய்திருந்தால், அவர் தேவனைப் பரீட்சை பார்த்ததாக அச்செய்கை அமைந்திருக்கும். பகட்டு வித்தையாகிய அச்செயல், தேவனுடைய சித்தத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

இராஜானுக்கு வரிப்பணம் செலுத்துவது சரியானதா என்று வினவி பரிசேயர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்தார்கள் (மத்.22:15-18). அவர் என்ன விடை கொடுத்தாலும் அது அவர்களுக்குப் பொருட்டன்று. ஆயினும் அவர் கூறும் விடை, ஒன்று அவரை ரோமருக்கு எதிரியாக்கும் அல்லது ரோமரை எதிர்த்து நிற்கும் வன்முறை செயலர்களாகிய யூதருக்கு எதிரியாக்கும்.

நிலத்தை இவ்வளவு பணத்திற்குத்தான் விற்றோம் என்று பொய்யுரைத்து, ஒரு பங்கைத் தனக்கென்று மறைத்து வைத்துக்கொண்டு, மீதியைக் கர்த்தருக்குக் கொடுத்த சப்பீராள் கர்த்தருடைய ஆவியைப் பரீட்சித்தாள் (அப்.5:9).

யூதர்களே சுமக்கக் கூடாதிருந்த நுகத்தடியாகிய பிரமாணத்தைக் கடைப்பிடிக்கும்படியாகப் புற இனத்து விசுவாசிகளை அதற்கு அடிமைப்படுத்துவது தேவனைச் சோதிப்பதாகும் என்று பேதுரு எருசலேம் சபையாரின் ஆலோசனைக் கூட்டத்தில் கூறினான். (அப்.15:10).

‘தேவன் நியாயம் தீர்ப்பதற்கு முன்னர் என்னென்ன செய்ய முடியுமோ எல்லாவற்றையும் செய்துவிடுவது என்பது தேவனைப் பரீட்சை பார்ப்பதாகும். அவர் தமது சொற்களின்படிச் செயல்புரிகிறாரா என்று சோதிப்பதும், அவர் தீர்ப்பு வழங்கும்வரை அவரை விடாப்பிடியாகப் பற்றி இழுப்பதும் இதனுள் அடங்கும் (ஒப்பிடுக, உபா.6:16, மத்.4:7)” (டௌசைன்ட்). நாம் முணுமுணுக்கும்போதும் குறைகூறும்போதும் தேவனைப் பரீட்சை பார்கிறவர்களாக இருக்கிறோம். ஏனெனில் இவற்றின் மூலமாக அவருடைய பிரசன்னத்தையும், ஆற்றலையும், தயைபாராட்டும் தன்மையையும், நாம் சந்தேகிக்கிறவர்களாக இருக்கிறோம். நம்முடைய சூழ்நிலைகளை அவர் அறியாதிருக்கிறார் என்றும், நம்மைக்குறித்து அவர் கவலைப்படுவதில்லை என்றும், இக்கட்டுக்களினின்றும் நம்மை அவரால் மீட்க இயலாது என்றும் கூறுகிறவர்களாகக் காணப்படுவோம்.

தேவையற்ற ஆபத்தான சூழ்நிலைகளில் அகப்பட்டுக்கொண்டு, அச்சூழ்நிலையிலிருந்து அவர் நம்மை விடுவிப்பார் என்று எதிர்நோக்குவது அவரை நாம் பரீட்சிப்பதாகும். நச்சுப் பாம்போடு விளையாடி இறந்துபோகிற விசுவாசிகளைப் பற்றி அவ்வப்போது படிக்கிறோம். ‘சர்ப்பங்களை எடுப்பார்கள்” (மாற்கு 16:18) என்னும் வசனம், தேவன் வாக்குரைத்துள்ள பாதுகாப்பு என அவர்கள் கூறுகிற காரணம் அர்த்தமற்றதாகும். அவருடைய சித்தத்தை நமது மூலமாக நிறைவேற்றுவதற்குச் சில வேளைகளில் அற்புதங்களைச் செய்ய பலனளிக்கிறார். அதனை நியாயப்படுத்தும்படியே இவ்வாறு உரைக்கப்பட்டிருக்கிறது.

நாம் தேவனிடம் பொய்யுரைக்கும்போது அவரைச் சோதிக்கிறோம். நாம் விரும்புவதற்கு மேலான அளவில் நம்மை ஒப்புவிப்பதாகவும், தியாகமாகத் தருவதாகவும், சமர்ப்பணம் செய்வதாகவும், கூறுவது அவரைச் சோதிப்பதாகும். பரிசேயர்கள் தங்களுடைய மாய்மாலத்தினாலே கிறிஸ்துவைச் சோதித்தது போன்று, நாமும் நம்மடைய மாய்மாலத்தினாலே அவரைச் சோதிக்கிறோம்.

இறுதியாக, அவருடைய சித்தத்தின் ஆளுகைக்குள் நம்மை ஒப்புவிக்காமல், நம்முடைய சொந்த சித்தத்தின்படிச் செயலாற்றுவதின் மூலமாக நாம் அவரைச் சோதிக்கிறோம்.

படைப்பானது படைப்பாளரைப் பரீட்சை பார்ப்பதும், பரீட்சைபார்க்க விரும்புவதும், தைரியம்கொள்வதும் அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாகும். அல்லது ஒரு பாவி தனது இரட்சகரைப் பரீட்சை பார்ப்பது அதிர்ச்சியூட்டும் செய்கையாகும்.

12. Dezember

»Du sollst den Herrn, deinen Gott, nicht versuchen.« Matthäus 4,7

Was ist das eigentlich, den Herrn versuchen? Ist das irgendetwas, womit wir uns auch schuldig machen können?

Die Kinder Israel versuchten den Herrn, als sie sich darüber beklagten, dass es in der Wüste kein Wasser gab (siehe 2. Mose 17,7). Als sie sagten: »Ist der Herr in unserer Mitte oder nicht?«, zweifelten sie nicht nur an Seiner göttlichen Gegenwart, sondern auch an Seiner Vorsehung und Fürsorge für sie.

Satan versuchte den Herrn, als er Ihn aufforderte, doch von den Zinnen des Tempels herabzuspringen (siehe Lukas 4,9-12). Jesus hätte Gott den Vater versucht, wenn Er das getan hätte, denn dann hätte Er ein bloßes Kunststück vorgeführt, etwas getan, was nicht nach dem Willen des Vaters war.

Die Pharisäer versuchten den Herrn, als sie ihn fragten, ob es denn rechtmäßig sei, dem Kaiser Steuern zu zahlen (siehe Matthäus 22,15-18). Denn sie dachten: Ganz gleich, was Er antwortet, er wird entweder die Römer vor den Kopf stoßen oder diejenigen Juden, die leidenschaftlich gegen die Römer eingestellt sind.

Saphira versuchte den Geist des Herrn, indem sie vorgab, sie hätte den ganzen Erlös aus dem Verkauf eines Stücks Eigentum dem Herrn überlassen, während sie in Wirklichkeit einen Teil davon für sich selbst zurückbehielt (siehe Apostelgeschichte 5,9).

Petrus sagte vor dem Rat in Jerusalem, dass man Gott versuchen würde, wenn man die Heidenchristen dem jüdischen Gesetz unterwerfen wollte, denn das wäre ein Joch, das schon die Juden selbst nicht hätten tragen können (siehe Apostelgeschichte 15,10).

Gott versuchen bedeutet »auszuprobieren, mit wie viel man noch davonkommt, bevor der Herr es bestraft; es bedeutet, Ihn auszunutzen, zu sehen, ob Er Sein Wort auch wahr macht, oder die Grenzen Seines Gerichtes auszuweiten« (siehe dazu 5. Mose 6,16 und Matthäus 4,7). Wir versuchen Gott schon, wenn wir murren oder uns beschweren, weil wir damit eigentlich Seine Gegenwart, Seine Macht und Güte bezweifeln. Wir drücken damit aus, dass Er unsere augenblicklichen Lebensumstände gar nicht kennt. Er kümmert sich wohl nicht darum, oder Er ist nicht fähig, uns daraus zu befreien.

Wir versuchen Gott auch, wenn wir uns ohne Notwendigkeit großen Gefahren aussetzen und dann von Ihm erwarten, dass Er uns rettet. Öfter einmal lesen wir von fehlgeleiteten Gläubigen, die giftige Schlangen anfassen und dann daran sterben. Sie haben sich darauf berufen, Gott hätte doch versprochen, dass Christen davor sicher wären (»… sie werden Schlangen aufheben«; siehe Markus 16,18). Aber mit diesem Vers ist nicht gesagt, dass wir Wunder vorführen können, wie wir wollen; Gott verspricht uns nur dann Schutz, wenn es notwendig ist, wenn Er Seinen Willen in und durch uns ausführen will.

Wir versuchen Gott, wenn wir Ihn anlügen, und das tun wir, wenn wir nach außen hin eine größere Hingabe, Opferbereitschaft und Bereitwilligkeit vortäuschen, als wir in Wirklichkeit haben und geben wollen. Genauso wie die Pharisäer Christus in ihrer heuchlerischen Haltung versuchten, so machen wir es auch.

Schließlich versuchen wir den Herrn immer dann, wenn wir uns dem Bereich Seines Willens entziehen und aus unserem Eigenwillen heraus handeln.

Eigentlich ist es eine unerhörte Sache, dass ein Geschöpf jemals wünscht oder wagt, seinen Schöpfer zu versuchen.