December

ஆரம்பமும் முடிவும்

December 6

“When Ephraim spoke, men trembled; he was exalted in Israel. But he became guilty of Baal worship and died.” (Hosea 13:1 NIV)

There is tremendous forcefulness and authority in the words of a righteous man. When he speaks, he has impact on the lives of others. His words carry weight. Men look up to him as one who deserves respect and obedience.

But if that same man falls into sin, he loses all that positive influence on Others. The authoritative tone with which he spoke is dissipated. People no longer look to him for counsel. If he attempts to give it, they are apt to look at him with a jaundiced eye and say, “Physician, heal thyself” or “First take the beam out of your own eye; then you’ll be able to remove the mote from mine.” His lips are sealed.

This emphasizes the importance of maintaining a consistent testimony right to the end. It is important to begin .well but that is not enough. If we let down our guards in the closing stretch, the glory of earlier days will be obscured in the mists of dishonor.

“When Ephraim spoke men trembled.” Williams comments, “When Ephraim walked with God, as in the days of Joshua, he spoke with authority and people trembled, and so he had a position of dignity and power. But he turned to idolatry and died spiritually… The Christian has moral power and dignity so long as his heart is wholly governed by Christ and free from idolatry.”

Gideon is another case in point. The Lord was with this mighty man of valor. With an army of 300 men he defeated the Midianites, 135,000 strong. When the men of Israel wanted to make him king, he wisely refused, because he realized that Jehovah was the rightful King.

But having gained illustrious victories and having successfully resisted great temptations, he caved in on what we might think was a minor matter. He asked his soldiers to give him the gold earrings they had taken as prey from the Ishmaelites. With these earrings, he made an ephod, which became an idol to the people of Israel, and a snare to Gideon and his family.

Of course, we know that when we fail, we can go to God in confession and find forgiveness. We know that He can even restore the years that the locusts have eaten, that is, He can enable us to make up for wasted time. But no one will deny that it is better to avoid a fall altogether than to recover from it, better not to smash our testimony than to try to glue the pieces back together again. Andrew Sonar’s father used to say to him, “Andrew, pray that we both may wear well to the end!” So let us pray that we might finish our course with joy!

டிசம்பர் 6

எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று, அவன் இஸ்ரவேலிலே மேன்மை பெற்றான். அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ் செய்து மடிந்து போனான். ஓசியா 13:1

ஆரம்பமும் முடிவும்

நீதிமானின் சொற்கள் மிகுந்த ஆற்றல் திறனும் அதிகாரமும் உடையவையாகும். அவனுடைய பேச்சு, மற்றவர்களுடைய வாழ்க்கையில் தாக்கத்தை விளைவிக்கிறது. அவனுடைய சொற்களுக்கு மதிப்பு இருக்கிறது. மரியாதைக்கும் கீழ்படிதலுக்கும் தகுதியானவன் என்று மனிதர்கள் அவனை நோக்கிப் பார்க்கின்றனர்.

ஆனால், அந்த மனிதன் பாவத்திற்குள் விழுவான் என்றால், மற்றவர்கள் மீது அவன் கொண்டிருக்கிற நன்மையான செல்வாக்குகள் அனைத்தையும் இழந்து போகிறான். அவனுடைய அதிகார தொனி மறைந்து விடுகிறது. ஆலோசனை கேட்க மக்கள் அவனிடத்தில் வருவதில்லை. மற்றவர்களுக்கு ஆலோசனை நல்க அவன் முயற்சி செய்வானானால், அவர்கள் அவனை நோக்கி, ‘மருத்துவரே, முதலில் உம்மைக் குணமாக்கிக்கொள்ளும்” என்றோ, ‘முதலில் உமது கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்துப் போடும், பின்னர் என் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப் போடலாம்” என்றோ சொல்லுவார்கள். அவனுடைய வாய் பேசாதபடி அடைக்கப்படும்.

இது நல்ல சாட்சியை இறுதிவரை தொடர்ந்து கொண்டிருக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நன்றாகத் தொடங்குவது நல்லது. ஆயின் அது போதாது. நமது வாழ்வின் கடைசி நாட்களில், நம்மைக் காத்துக்கொள்ளத் தவறுவோமாயின், முன்னர் பெற்ற மகிமையாவும் மங்கிப்போகும், கனவீனமே நம்மைச் சூழ்ந்துகொள்ளும்.

‘எப்பராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று” இதற்கு வில்லியம்ஸ் என்பார் இங்ஙனம் கருத்துரை வழங்குகிறார். ‘யோசுவாவின் காலத்தில், எப்பிராயீம் தேவனோடு நடந்தான். அப்பொழுது அவன் அதிகாரத்தோடு பேசினான். அதனைக் கேட்ட மக்கள் நடுங்கினர். ஆகவே அவன் நன்மதிப்பும் அதிகாரமும் உடையவனாயிருந்தான். ஆனால் பிற்காலத்தில் சிலைவணக்கம் செய்து ஆவிக்குரிய நிலையில் இறந்து போனான். கிறிஸ்துவினால் ஒருவனது இருதயம் முற்றிலுமாக ஆளப்பட்டு, சிலை வணக்கத்திலிருந்து விடுபட்டவனாக இருப்பானென்றால், அந்தக் கிறிஸ்தவன் ஒழுக்க ரீதியாக அதிகாரமும் நன்மதிப்பும் உடையவனாக இருப்பான்.”

மற்றுமொரு எடுத்துக்காட்டை கிதியோனிடத்தில் காண்கிறோம். வலிமை பொருந்திய பராக்கிரமசாலியாகிய கிதியோனோடு கர்த்தருடைய சமுகம் இருந்தது. 300 படை வீரர்களோடு சென்று, 135 000 பலசாலிகளான மீதியானியரை அவன் முறியடித்தான். இஸ்ரவேல் மனிதர்கள் அவனை மன்னனாக முடிசூட்ட முயன்றபோது ஞானமாக அதை நிராகரித்தான். யெகோவா ஒருவரே மன்னராக விளங்குவதற்குத் தகுதியுடையவர் என்பதை அவன் அறிந்திருந்தான்.

ஆனால், குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பான வெற்றிகளை அடைந்து, எதிர்த்து வந்த அனைத்து சோதனைகளையும் புறக்கணித்து வாழ்ந்தவன் இறுதியில் மிகச் சாதாரணமானது என்று நாம் நினைக்கக் கூடிய ஒன்றிற்கு இடம் கொடுத்துவிட்டான். இஸ்மவேல் மனிதர்களிடமிருந்து கொள்ளையிட்ட பொன் காதணிகளைக் கொண்டுவரும்படி அவன் தனது போர்வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அதைக் கொண்டு ஒரு ஏபோத்தைச் செய்வித்தான். அது இஸ்ரவேல் மக்கள் தொழுதுகொள்ளும் சிலையாக மாறிற்று. கிதியோனுக்கும் அவனுடைய குடும்பத்திற்கும் அது கண்ணியாக மாறிற்று.

நாம் தவறும்போது, தேவனிடத்திற்குச் சென்று அறிக்கை செய்து பாவமன்னிப்புக் கண்டடையலாம் என்பது உண்மையே. வெட்டுக்கிளிகள் தின்று போட்ட வருடங்களை அவர் மீண்டும் தருவார் என்பதையும் நாம் அறிவோம். அதாவது நாம் வீணாக்கின காலத்தை அவர் ஈடுசெய்வார். ஆனாலும், வீழ்ந்து போய் பின்னர் அந்நிலையிலிருந்து மீட்கப்படுவதைக் காட்டிலும், வீழாதிருப்பதே நன்று என்பதை ஒருவரும் மறுத்துரைக்க மாட்டார். உடைந்துபோன சாட்சியை மீண்டும் ஒன்று சேர்த்து, பசை கொண்டு ஒட்டவைப்பதைக் காட்டிலும், அதனை உடைக்காமலிருப்பதே மேல். ஆண்ட்ரு போனார் என்பாரின் தந்தை தன் மகனிடம் அவ்வப்போது இவ்வாறு கூறுவார். ‘ஆண்ட்ரு, இறுதிவரை நாம் இருவரும் உண்மையாயிருக்க ஜெபி.” ஆகவே நமது ஓட்டத்தை மகிழ்ச்சியோடு முடிக்க நாம் தேவனிடத்தில் மன்றாடுவோம்.

6. Dezember

»Wenn Ephraim redete, war Schrecken; es erhob sich in Israel. Aber es wurde schuldig durch Baal und starb.« Hosea 13,1

Es liegt eine ungeheure Kraft und Autorität in den Worten eines Gerechten. Wenn er spricht, hat das Einfluss auf das Leben von anderen Menschen. Seine Worte haben Gewicht. Die Menschen sehen zu ihm auf als zu einem, der Respekt und Gehorsam verdient.

Aber wenn dieser selbe Mann durch die Sünde zu Fall kommt, dann verliert er allen positiven Einfluss auf andere. Der Klang der Autorität ist dann aus seiner Stimme verschwunden. Die Menschen erwarten keinen Rat mehr von ihm. Und wenn er doch versucht, ihnen Ratschläge zu geben, kann es passieren, dass sie ihn bitter ansehen und sagen: »Arzt, hilf dir selbst!« oder: »Nimm erst einmal den Balken aus deinem eigenen Auge; dann kannst du auch den Splitter aus meinem ziehen.« Die Lippen eines solchen Mannes sind dann wie versiegelt.

Das unterstreicht nur noch, wie wichtig es ist, ein konsequentes Lebenszeugnis bis zum Ende durchzuhalten. Es ist von Bedeutung, gut zu beginnen, aber das ist noch nicht genug. Wenn wir im weiteren Verlauf nicht mehr wachsam sind, dann wird die Klarheit der frühen Tage schnell durch den Nebel der Schande verdunkelt.

»Wenn Ephraim redete, war Schrecken.« Williams schreibt dazu in einem Kommentar: »Als Ephraim noch mit Gott wandelte, wie in den Tagen Josuas, da sprach er mit Vollmacht, und die Leute zitterten vor ihm, und so hatte er eine Stellung voller Würde und Kraft. Aber er wendete sich dem Götzendienst zu und war nun geistlich gesehen tot … Der Christ hat so lange moralische Kraft und Würde, wie sein Herz voll und ganz von Christus regiert wird und frei ist vom Götzendienst.«

Gideon ist ein weiterer Fall dieser Art. Der Herr war mit diesem mächtigen, tapferen Mann. Mit einer Armee von nur 300 Mann besiegte er die Midianiter, die 135000 Soldaten hatten. Doch als die Männer Israels ihn zum König machen wollten, da lehnte er ab, und das war klug, denn er hatte erkannt, dass allein der Herr der rechtmäßige König war. Aber als er strahlende Siege errungen und schon erfolgreich viele große Versuchungen bestanden hatte, stolperte er schließlich über eine, wie man sagen möchte, geringfügige Sache. Er bat seine Soldaten, ihm die goldenen
Ohrringe zu geben, die sie als Beute von den Ismaeliten erobert hatten. Und aus diesen Ohrringen machte er ein Priestergewand, das für das Volk Israel zu einem Götzenbild und für Gideon und seine Familie zu einem Fallstrick wurde.

Natürlich wissen wir, dass wir immer, wenn wir versagt haben, zu Gott kommen können, Ihm bekennen dürfen und Vergebung bei Ihm finden. Wir wissen, dass Er uns sogar die Jahre zurückgeben kann, die die Heuschrecken verschlungen haben, das heißt, Er kann uns fähig machen, diese vergeudete Zeit wieder aufzuholen. Aber niemand wird leugnen können, dass es besser ist, einen Fall überhaupt zu vermeiden, als sich davon wieder zu erholen. Besser ist es, unser christliches Zeugnis gar nicht erst in Scherben gehen zu lassen, als zu versuchen, es nachträglich wieder mühsam zusammenzuleimen. Andrew Bonars Vater sagte immer zu seinem Sohn: »Junge, bete darum, dass wir beide gut bis zum Ende durchhalten!« So wollen
wir auch darum beten, dass wir unseren Lauf mit Freude zum Ziel führen können!