August

கிறிஸ்துவுக்காகத் துறத்தல்

August 31

“What things were gain to me, those I counted loss for Christ. Yea doubtless, and I count all things but loss for the excellency of the knowledge of Christ Jesus my Lord: for whom I have suffered the loss of all things, and do count them but dung, that I may win Christ.” (Phil. 3:7, 8)

It is always eminently fine when a believer makes great renunciations for Jesus’ sake. Here is a man whose talents have brought him wealth and fame, yet in obedience to the divine call, he lays them at the Saviors feet. Or a woman whose voice has opened doors to the world’s great concert halls. But now she feels she must live for another world, so she gives up her career to follow Christ. After all, what are reputation or fortune or earthly distinctions when compared to the incomparable gain of winning Christ?

Ian MacPherson asks, “Is there anywhere a sight more deeply moving than that of a man laden with gifts, laying them all numbly and adoringly at the Redeemer’s feet? And that, after all is where they were meant to be. In the words of a wise old Welsh divine, ‘Hebrew, Greek and Latin are all very well in their place; but their place is not where Pilate put them, over Jesus’ head, but rather at His feet.’”

The Apostle Paul renounced wealth, culture, and ecclesiastical status and counted them loss for Christ. Jowett comments that “when the Apostle Paul regarded his aristocratic possessions as great gains, he had never seen the Lord; but when ‘the glory of the Lord’ blazed upon his wondering eyes these things faded away into shadow and even eclipse. And it was not only that the Apostle’s former gains were cheapened in the effulgence of the Lord, and stood revealed as contemptible nothings m his hands; it was that he ceased to think of them at all. They vanished entirely from the mind where they had been treated as supreme and sacred deposits.”

It is strange, then, that when a man forsakes all to follow Christ, some think that he has lost his mind. Some are shocked and uncomprehending. Some weep and offer alternate routes. Some argue on the basis of logic and common sense. A few approve and are stirred to their depths. But when a person walks y faith, he is able to appraise the opinions of others properly.

C. T. Studd forsook a private fortune and fine prospects at home to devote his life to missionary service. John Nelson Darby turned his back on a brilliant career to become an unctionized evangelist, teacher and prophet of God. The five martyrs of Ecuador renounced the comforts and materialism of the United States to bring Christ to the Auca tribe.

People call it a great sacrifice but it is no sacrifice. When someone tried to commend Hudson Taylor for the sacrifices he had made for Christ, he said, “Man, I never made a sacrifice in my life.” And Darby said, “It is no great sacrifice to give up refuse.”

ஆகஸ்டு 31

எனக்கு இலாபமாயிருந்தவைகள் எவைகளோ அவைகளை கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். பிலி.3:7-8.

கிறிஸ்துவுக்காகத் துறத்தல்

இயேசு கிறிஸ்துவுக்காக விசுவாசிகள் பெரிய தியாகங்களைச் செய்வது எக்காலத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகத் திகழும். எடுத்துக்காட்டாக ஒருவன் தனது திறமையால் புகழும், செல்வமும் அடைகிறான். ஆயினும் இப்பொழுது தெய்வீக அழைப்புக்குக் கீழ்ப்படிந்து அனைத்தையும் இரட்சகரின் காலடியில் சமர்ப்பிக்கிறான். வேறொரு பெண்மணி தனது சங்கீத ஞானத்தினால் இசை அரங்குகளை நிறையச் செய்கிறாள். இப்பொழுது அவள் வேறொரு உலகத்தைச் சார்ந்தவளாக மாறிவிட்டாள். ஆகவே தனது தொழிலைத் துறந்து கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ்கிறாள். புகழ், நற்பேறு, இவ்வுலக மேன்மை எனக் கருதப்படுபவை யாவும், கிறிஸ்துவை அடைவதால் பெறும் பயனுக்கு ஒப்பிடத்தக்கவையல்ல.

இயான் மேக்பெர்ஸான் இதனைக்குறித்து எழுதியுள்ளதாவது: ‘அருந்திறம் படைத்த மனிதன், தனது திறமைகள் யாவற்றையும் தாழ்மையான உள்ளத்தோடும், தொழுகையோடும், மீட்பரின் பாதத்தண்டை சமர்ப்பிக்கிற செயலைக் காட்டிலும் நமது இருதயத்தை ஆழமாக அசைக்கக் கூடிய காட்சியை வேறு உங்கும் காணக்கூடுமோ? அவற்றைச் சமர்ப்பிப்பதற்கு ஏற்ற இடம் அதுதானே. எபிரேயு, கிரேக்கு, லத்தீன், ஆகியவை அவற்றிற்குரிய இடத்தில் நன்றாய் இருக்கின்றன. ஆனாலும், இயேசு கிறிஸ்துவின் சிரசிக்கு மேலாக பிலாத்து அவற்றை வைத்தான். அவருடைய காலடியே அவற்றுக்குத் தகுதியான இடம்” என்று ஞானத்தில் சிறந்தவரும், பக்தியில் நிறைந்தவருமாகிய வெல்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அப்போஸ்தலனாகிய பவுல் தனது செல்வத்தையும், பண்பாட்டையும், சமயம் தனக்குத் தந்த பதவியையும், கிறிஸ்துவுக்காக இழப்பென்று கருதினான். ‘அப்போஸ்தலனாகிய பவுல் உயர்குடிப் பிறப்பினால் தான் பெற்றிருந்த மேன்மையான நிலையைப் பெரிதாக நினைத்தபோது கர்த்தரைக் காணவில்லை. ஆனால், ‘கர்த்தருடைய மகிமை” அவருடைய வியந்து காணும் கண்களின் மீது வீசியபோது, இந்த மேன்மைகள் யாவும் மறைந்து போயின. கர்த்தருடைய பிரகாசத்தில், அப்போஸ்தலனுடைய முந்தைய மேன்மைகள் மதிப்பெற்றுப் போனபின்பு, தனது கரங்களில் இழிவானதாகவும, வெறுமையானதாகவும், எஞ்சிநிற்கிறதை உணர்ந்தார். பின்னர் அவற்றைக் குறித்து நினைக்கிறதை விட்டொழிந்தார். மேன்மையான மற்றும் புனிதமான பொக்கிஷமாகக் கருதப்பட்ட மனதிலிருந்து அவையாவும் முற்றிலுமாக மறைந்து போயின. என்று திருவாளர் ஜோவட் அவர்கள் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஒரு மனிதன் தனக்குரிய எல்லாவற்றையும் துறந்து, கிறிஸ்துவைப் பின்பற்றுவானாயின், அவனுக்குப் பயித்தியம் பிடித்து விட்டது என்று சிலர் நினைப்பது விநோதமாயிருக்கிறது. சிலருக்கு அது அதிர்ச்சியைத் தருகிறது. அவர்களுக்கு அது புரியாத புதிராக இருக்கிறது. சிலர் அழுது, வேறு வழியைச் சொல்லித் தருவார்கள். தத்துவம், பொது அறிவு என்பனவற்றின் அடிப்படையில் வாக்குவாதம் புரிவார்கள். ஒருசிலரே இதனை ஏற்றுக்கொள்வர். ஆனாலும் மெதுவாகவே அசைந்து கொடுப்பர். ஆனால், விசுவாசத்தில் நடக்கிறவன், மற்றவர்களுடைய கருத்துகளை நிதானித்து அறிவான்.

திருவாளர் C. T. ஸ்டட் தனக்கு கிடைத்த வாய்ப்பையும், வீட்டின் செல்வத்தையும் துறந்து, இறைப்பணியை மேற்கொள்ள தனது வாழ்க்கையை ஒப்புவித்தார். J. N. டார்பி இன்பமான வாழ்க்கையை வேண்டாமென்று துறந்து இறையருள் பெற்ற சுவிஷேகராகவும், போதகராகவும், தேவனுடைய தீர்க்கதரிசியாவும், விளங்கினார். ஈகுவேடார் நாட்டிற்குச் சென்று தங்களுடைய உயிரைத் தியாகமாக ஒப்புவித்த ஐவரும், குடியினருக்கு கிறிஸ்துவைக் கொண்டு சென்றனர்.

இது பெரிய தியாகம் என்று மனிதர்கள் சொல்கின்றனர். ஆனால் இது பெரிய தியாகம் இல்லை. ஹட்சன் டெய்லர் செய்த தியாகத்தை வியந்து ஒருவர் அவரைப் போற்றினார். அதற்கு அவர் ‘மனிதனே நான் எந்தவொரு தியாகத்தையும் செய்யவில்லை” என்று பதிலுரைத்தார். ‘குப்பை கூளத்தைத் துறப்பது தியாகமல்ல” என்று இதனையே டார்பி கூறினார்.

31. August

»Aber was irgend mir Gewinn war, das habe ich um Christi willen für Verlust geachtet; ja, wahrlich, ich achte auch alles für Verlust wegen der Vortrefflichkeit der Erkenntnis Christi Jesu, meines Herrn, um dessentwillen ich alles eingebüßt habe und es für Dreck achte, auf dass ich Christum gewinne. « Philipper 3,7.8

Es ist immer überaus schön und kostbar, wenn ein Gläubiger um Jesu willen auf viel verzichtet. Da ist ein Mann, dessen Talent ihm Ruhm und Reichtum eingetragen haben, aber dem göttlichen Ruf gehorsam, legt er sie seinem Erlöser zu Füßen. Oder eine Frau, vor deren Stimme sich die Türen der großen Konzertsäle der Welt geöffnet haben. Aber jetzt ist sie überzeugt, dass sie für eine andere Welt leben muss, deshalb gibt sie ihre Karriere auf, um Christus nachzufolgen. Was sind schließlich Ruhm und Reichtum und irdische Auszeichnungen im Vergleich zu dem unermesslichen Gewinn, in Christus erfunden zu werden.

Ian McPherson fragt: »Gibt es irgendwo ein bewegenderes Bild als das eines Mannes, beladen mit Gaben, die er aber alle demütig und bewundernd dem Heiland zu Füßen legt? Und dort ist ja schließlich ihr eigentlicher Platz. Oder, mit den Worten eines alten walisischen Gottesmannes: ›Hebräisch, Griechisch und Lateinisch sind sehr gut, wenn sie am richtigen Platz sind; aber ihr Platz ist nicht dort, wo Pilatus sie hintat, über dem Haupt Jesu, sondern vielmehr zu Seinen Füßen.« Der Apostel Paulus verzichtete auf Reichtum, Kultur und religiöse Positionen und achtete alles für
Verlust um Christi willen. Jowett kommentiert dazu: »Solange der Apostel Paulus seine fürstlichen Gaben als großen Gewinn betrachtete, hatte er den Herrn noch nicht gesehen. Aber als die ›Herrlichkeit des Herrn‹ vor seinen staunenden Augen aufstrahlte, verblassten diese Dinge zu Schatten, ja, zu Nichts. Und nicht nur erschien der frühere Gewinn des Apostels wertlos im Licht der strahlenden Herrlichkeit des Herrn und lag in seinen Händen als verächtlicher Tand; er hörte auf, überhaupt an ihn zu denken. Er verschwand völlig aus seinem Denken, wo er als erhabener und
heiliger Schatz gehütet worden war.«

Es ist deshalb seltsam, dass, wenn ein Mann alles verlässt, um Christus nachzufolgen, manche denken, er wäre verrückt geworden. Manche sind schockiert und verstehen überhaupt nichts mehr. Andere weinen und bieten Alternativen an. Andere argumentieren mit Vernunft und gesundem Menschenverstand. Einige wenige stimmen zu und werden bis ins Innerste bewegt. Aber wenn jemand im Glauben wandelt, kann er die Meinungen anderer richtig werten und einordnen.

C.T. Studd verzichtete auf ein Privatvermögen und glänzende Aussichten in seiner Heimat, um sein Leben in den Dienst der Mission zu stellen. John Nelson Darby kehrte einer brillanten Karriere den Rücken und wurde ein vom Geist bevollmächtigter Evangelist, Lehrer und Prophet Gottes. Die fünf Märtyrer von Ecuador verzichteten auf die Annehmlichkeiten und den Materialismus der Vereinigten Staaten, um dem Auca-Stamm Christus zu bringen.

Die Menschen nennen es ein großes Opfer, aber es ist kein Opfer. Als jemand Hudson Taylor für die Opfer loben wollte, die er gebracht hatte, sagte er: »Mann, ich habe nie in meinem Leben ein Opfer gebracht.« Und Darby sagte: »Es ist kein großes Opfer, auf Dreck zu verzichten.«