August

ஜீவதண்ணீர் ஊற்று

August 23

“For my people have committed two evils; they have forsaken me the fountain of living waters, and hewed them out cisterns, broken cisterns, that can hold no water.” (Jer. 2:13)

It is a bad bargain to exchange a fountain for cisterns, and especially for broken cisterns. A fountain is a spring of cool, pure, refreshing water, gushing forth from the earth. A cistern is an artificial reservoir for storing water. The water in it may become stagnant and foul. When the cistern is broken, the water leaks out and pollution seeps in.

The Lord is a Fountain of living waters. His people can find lasting satisfaction in Him. The world is a cistern, and a broken cistern at that. It offers the hope of pleasure and happiness, but those who seek satisfaction in it are inevitably disappointed.

Mary was brought up in a Christian home where the Word of God was read and memorized. But she rebelled against her parents’ lifestyle and left home, determined to live it up. Dancing became the passion of her life. Trying to repress all memories of her Christian background, she lived from one dance to the next.

One night while gliding across the dance floor with her partner, she was arrested by a verse of Scripture which she had learned as a girl: “For my people have committed two evils; they have forsaken me the fountain of living waters, and hewed them out cisterns, broken cisterns, that can hold no water.” In the middle of the dance, she was convicted of her sin. Realizing the emptiness of her life, she turned to the Lord and was converted. She excused herself from continuing the dance, left the hall and never returned.

From that moment she could identify with the poet who wrote: “I tried the broken cisterns, Lord,/ But ah! the waters failed!/ E’en as I stooped to drink they’d fled,/ And mocked me as I wailed./ Now none but Christ can satisfy,/ None other name for me;/ There’s love, and life, and lasting joy,/ Lord Jesus, found in Thee.”

Mary experienced the truth of the Savior’s words, “Whosoever drinketh of this water shall thirst again: but whosoever drinketh of the water that I shall give him shall never thirst; but the water that I shall give him shall be in him a well of water springing up into everlasting life” (John 4:13, 14).

ஆகஸ்டு 23

என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள். தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள். எரேமியா 2:13

ஜீவதண்ணீர் ஊற்று

நீர் ஊற்றைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வெடிப்புள்ள தொட்டியை வாங்குவது நல்லதொரு பேரம் அன்று. குளிர்ந்த, தூய்மையான, புத்துணர்ச்சியைத் தரக்கூடிய நீர் பூமியிலிருந்து பீறிட்டுப் பொங்கி வருவதையே நீருற்று எனக் கூறுகிறோம். நீர்த்தொட்டியானது செயற்கையான ஒன்று. நீரைத் தேக்கிவைக்க அது பயன்படுகிறது. தேங்கிய நீர் அசுத்தம் அடைந்து துர்நாற்றம் வீசக்கூடியதாகிவிடும். அந்தத் தொட்டியில் வெடிப்பு உண்டாகிறபோது, அதிலிருந்து நீர் கசிந்து மாசு அதிகரிக்கிறது.

நம்முடைய கர்த்தர் ஜீவ தண்ணீரின் ஊற்றாக விளங்குகிறார். நிலையான மனநிறைவை அவருடைய மக்கள் அவரிடத்திலிருந்து பெற முடியும். இவ்வுலகமோ நீர்த்தொட்டியாக, அதுவும் வெடிப்புள்ள தொட்டியாக இருக்கிறது. இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அது தருவதாகக் கூறுகிறது. ஆயின் அதில் மனநிறைவை எதிர்பார்க்கிறவர்கள், நிச்சயமாக ஏமாற்றமே அடைவர்.

மேரி என்னும் பெயருள்ள பெண்ணைப் பற்றிய கதை: கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து, வேத வசனங்களைப் படித்து மனப்பாடம் செய்து வளர்ந்தவள். ஆனால், வாலிப வயதில் தனது பெற்றோர்களுடைய வாழ்க்கைமுறையை வெறுக்க ஆரம்பித்தாள். வாழ்வின் இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்று முடிவுசெய்தாள். நடனமாடுதல் அவளுடைய நோக்கமாக மாறிற்று. தனது கிறிஸ்தவப் பின்னணியின் நினைவுகளை முற்றிலுமாக மறக்க எண்ணங்கொண்டவளாக ஒரு நடனக் கலையிலிருந்து மற்றொரு நடனக்கலைக்குத் தாவினாள்.

ஓரிரவு தனது நண்பனுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்தாள். அப்பொழுது தான் சிறுமியாக இருந்தபோது கற்ற எரேமியா 2:13ம் வேதவசனத்தினால் சிறைப் பிடிக்கப்பட்டாள். நடனமாடிக் கொண்டிருந்தபோது, தனது பாவத்தினால் குற்றவுணர்வு அடைந்தாள். தனது வாழ்வின் வெறுமையை உணர்ந்தவள், கர்த்தரிடம் மனம்திரும்பி இரட்சிப்படைந்தாள். தனது நண்பனிடம், நடனத்தைத் தொடரமுடியவில்லை என்று மன்னிப்புக் கேட்டவளாக வீடு திரும்பினாள். பின்னர் நடன அரங்கிற்குத் திரும்பவே இல்லை.

‘தாகம் கொண்டேன், நீர்த்தொட்டியைக் கண்டு ஆவலுடன் அங்கு நீர் அருந்தச் சென்றேன். ஆ! அது உடைந்த தொட்டி, அங்கு தாகம் தீர்க்க நீர் இல்லை, குனிந்து பார்த்தேன், இருந்த நீரும் ஒழுகிப்போறிற்று, புலம்பிய என்னைக்கண்ட தொட்டி ஏளனத்துடன் எள்ளி நகையாடிற்று. கிறிஸ்து ஒருவரைத் தவிர எவரும் மனநிறைவை அளிக்கமாட்டார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பும், ஜீவனும், நிலையான மகிழ்ச்சியும் பெற்றேன்” என்றுரைத்த கவிஞரின் சொற்களில் தன்னை இணைத்துக் கொண்டவளாக அது முதல் விளங்கினாள்.

நமது இரட்சகரின் சொற்களில் இருந்த உண்மையில் மேரி ஆட்கொள்ளப்பட்டாள். ‘இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீருற்றாயிருக்கும்” (யோவான் 4:13,14).

23. August

»Denn zwiefach Böses hat mein Volk begangen: Mich, den Born lebendigen Wassers, haben sie verlassen, um sich Zisternen auszuhauen, geborstene Zisternen, die kein Wasser halten.« Jeremia 2,13

Es ist ein schlechtes Geschäft, einen Born gegen Zisternen, und besonders gegen geborstene Zisternen einzutauschen. Ein Born ist eine Quelle kühlen, reinen, erfrischenden Wassers, das aus der Erde hervorsprudelt. Eine Zisterne ist ein künstliches Reservoir, um Wasser zu speichern. Das Wasser in ihr kann abgestanden und faulig werden. Wenn die Zisterne birst, läuft das Wasser aus, und Verunreinigungen sickern ein.

Der Herr ist eine Quelle lebendigen Wassers. Die Seinen können in Ihm dauernde Befriedigung finden. Die Welt ist eine Zisterne, und noch dazu eine geborstene Zisterne. Sie erweckt Hoffnung auf Vergnügen und Glück, aber wer bei ihr Befriedigung sucht, wird unweigerlich enttäuscht.

Mary wuchs in einem christlichen Elternhaus auf, wo das Wort Gottes gelesen und auswendig gelernt wurde. Aber sie rebellierte gegen die Lebensweise ihrer Eltern und ging von zu Hause weg mit dem festen Entschluss, das Leben in vollen Zügen zu genießen. Tanzen wurde zur Leidenschaft ihres Lebens. Indem sie versuchte, jede Erinnerung an ihre christliche Vergangenheit
zu unterdrücken, lebte sie von einem Tanz zum nächsten.

Als sie eines Nachts mit ihrem Partner über die Tanzfläche glitt, kam ihr plötzlich ein Vers aus der Heiligen Schrift in den Sinn, den sie als kleines Mädchen gelernt hatte. »Denn zwiefach Böses hat mein Volk begangen: Mich, den Born lebendigen Wassers, haben sie verlassen, um sich Zisternen auszuhauen, geborstene Zisternen, die kein Wasser halten.« Mitten im Tanz wurde sie von ihrer Sünde überführt. Im Bewusstsein der Leere ihres Lebens wandte sie sich zum Herrn und bekehrte sich. Sie entschuldigte sich, dass sie den Tanz nicht fortsetzen konnte, verließ das Lokal
und kehrte nie mehr zurück.

Von diesem Augenblick an konnte sie sich mit dem Dichter identifizieren, der schrieb:

»Ich versuchte die gebrochene Zisterne, Herr, aber ach! das Wasser blieb aus! Im Augenblick, wo ich mich beugte, um zu trinken, verschwand es und verspottete mich, während ich weinte. Jetzt kann mich niemand außer Christus befriedigen, es gibt keinen anderen Namen für mich; Liebe und Leben und immer währende Freude, Herr Jesus, wird in Dir gefunden.«

Mary erfuhr die Wahrheit der Worte unseres Herrn: »Jeden, der von diesem Wasser trinkt, wird wiederum dürsten; wer irgend aber von dem Wasser trinken wird, das ich ihm geben werde, den wird nicht dürsten in Ewigkeit; sondern das Wasser, das ich ihm geben werde, wird in ihm eine Quelle Wassers werden, das ins ewige Leben quillt« (Johannes 4,13.14).