August

இரட்சிப்பின் அலங்காரம்

August 7

“…to give unto them beauty for ashes, the oil of joy for mourning, the garment of praise for the spirit of heaviness.” (Isa. 61:3)

In this exalted passage, the Messiah is describing some of the marvelous exchanges which He brings to those who receive Him. He gives beauty for ashes, joy for mourning, praise for heaviness.

We bring Him the ashes of a life burned out with pleasure, the ashes of a body ruined by liquor or drugs. We bring Him the ashes of wasted years in the wilderness, or the ashes of frustrated hopes and shattered dreams. And what do we get? He gives us beauty, the beauty of a dazzling bridal diadem. What an exchange! “The poor wearied drudge of sin is honored by becoming the consort of the holy God” (J.H. Jowett). Mary Magdalene, controlled by seven demons, is not only delivered but becomes a daughter of the King. The Corinthians come to Him in all their degradation and are washed, sanctified and justified.

We bring Him the tears of mourning. These are tears brought on by sin, defeat and failure. Tears caused by tragedy and loss. Tears over shattered marriages and wayward children. Can He do anything with these briny, scalding tears? Yes, He can wipe them away and give us the oil of joy in their place. He gives us the joy of forgiveness, the joy of acceptance, the joy of His family, the joy of finding the reason for our existence. In short, He gives us “the joy of the bridal feast for heavy-footed woe.”

Finally, He takes from us the spirit of heaviness. We all know what this spirit is like—the burden of guilt, remorse, shame and humiliation. The spirit of loneliness, of rejection, of betrayal. The spirit of fear and anxiety. He takes them all away and gives us the garment of praise. He puts a new song in our mouth, even praise to our God (Psa. 40:3). The grumbler is filled with thanksgiving, the blasphemer with worship.

Something beautiful, something good,
All my confusion He understood.
All I had to offer Him was brokenness and strife
And He made something beautiful of my life.

(Gaither)

ஆகஸ்டு 7

அவர்களுக்கு சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்திற்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையைக் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார். ஏசாயா 61:3.

இரட்சிப்பின் அலங்காரம்

இந்த உன்னதமான வேதப் பகுதியில், தம்மை ஏற்றுக்கொள்வோருக்குத் தாம் தந்தருளும் வியத்தகு பண்டமாற்றுப் பொருட்களைக் குறித்து மேசியா விளக்கமளிக்கிறார். சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்திற்குப் பதிலாக ஆனந்தத்தையும், ஒடுக்கத்திற்குப் பதிலாகத் துதியையும் அவர் தருகிறார்.

சுகபோகத்தினால் எரிந்துபோன வாழ்வின் சாம்பலை நாம் அவரிடத்தில் கொண்டு வருகிறோம். மதுபானத்தினாலும், போதைப் பொருட்களினாலும் அழிந்து போன சரீரத்தின் கழிவைக் கொண்டு வருகிறோம். பாலைவனத்தில் சுற்றித் திரிந்த வீணான ஆண்டுகளின் தூசியை நாம் அவரிடத்தில் கொண்டு வருகிறோம். நம்பிக்கை இழந்தவர்களாக, சிதறடிக்கப்பட்ட கனவுகளைக் குப்பையாக அவரிடத்தில் நாம் கொண்டு வருகிறோம். ஆனால், அவரிடத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்வது யாது? அவர் நமக்கு அழகைத் தருகிறார். ஒளிமிக்க மணப்பெண்ணின் மணிமுடியைச் சூட்டிச் சிங்காரிக்கிறார். பண்டமாற்றின் சிறப்புத்தான் என்னே! ‘பாவத்திற்கு அடிமைப்பட்டு அதற்காகவே உழைத்துக் களைத்துப்போன என்னைத், தூய தேவனின் தோழனாக மாற்றி மேன்மைப்படுத்தினார்” என்று த.h ஜோவெட் எழுதியுள்ளார். ஏழு தீயஆவிகளுக்குக் கட்டுப்பட்டிருந்த மகதலேனா மரியாள், அவற்றின்று மீட்க்கப்பட்டது மட்டுமின்றி மன்னரின் மகளாகவும் ஆக்கப்பட்டாள். சீரழிந்த நிலைமையில் இருந்த கொரிந்துபட்டணத்தார் அவரிடம் வந்தபோது கழுவப்பட்டனர். பரிசுத்தவான்களாகப்பட்டனர். நீதிமான்களாக்கப்பட்டனர்.

நாம் அவரிடத்தில் துயரத்தின் கண்ணீரைக் கொண்டு வருகிறோம். இந்தக் கண்ணீர் பாவத்தினாலும், தோல்வியினாலும், களைப்பினாலும், இழப்பினாலும், உண்டானது. பேரிடரினாலும், துயரத்தினாலும் ஏற்பட்டது. திருமண உறவுகள் சீர்குலைந்து போனதினாலும், பிள்ளைகள் ஒழுங்கற்றுப் போவதினாலும், கண்ணீர் உண்டாகிறது. கடல்நீர் போன்று உவர்ப்பானதும், சூடானதுமான இந்தக் கண்ணீரை அவரால் என்ன செய்யமுடியும்? ஆம், அந்தக் கண்ணீரைத் துடைத்து அதற்குப் பதிலாக மகிழ்ச்சியை அவர் தருவார். மன்னிப்பின் மகிழ்ச்சி, அவர் நம்மை ஏற்றுக்கொள்வதால் உண்டாகும் மகிழ்ச்சி, அவருடைய குடும்பத்தில் அங்கமாக ஆக்கப்பட்டதால் பெறும் மகிழ்ச்சி, நாம் வாழ்வுடையோராக இருப்பதன் காரணத்தை அறிகிறதால் உண்டாகும் மகிழ்ச்சி யாவற்றையும் அவர் நமக்குத் தருகிறார். சுருங்கக் கூறின் ‘பாரமான பேரிடருக்குப் பதிலாக, திருமண விருந்தாகிய மகிழ்ச்சியை” அவர் நமக்குத் தருகிறார்.

கடைசியாக, ஒடுங்கின ஆவியை நம்மிடத்திலிருந்து நீக்கி விடுகிறார். இந்த ஆவி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாமனைவரும் அறிவோம். குற்றவுணர்வு, மனச்சாட்சியில் உறுத்தல், அவமானம், இழிவு, ஆகியவற்றால் ஏற்படும் ஒடுக்கம், தனிமை, நிராகரிப்பு, காட்டிக்கொடுக்கப்படுதல், உண்டாகும் தாக்கம் நம்மை வாட்டுகிறது. அச்சத்தினாலும், கவலையினாலும், ஒடுங்கின ஆவியைப் பெறுகிறோம். இவை யாவற்றையும் நம்மைவிட்டு அகற்றி அதற்கு மாறாக, துதியின் உடையை அவர் நமக்கு அணிவிக்கிறார். தேவனுக்குப் புகழ்ச்சியாக புதிய பாடலை நமது வாயில் இடுகிறார். (சங்.40:3). முன்னர் முறுமுறுத்த நாம் இப்பொழுது நன்றி பகிர்கிறோம். அவதூறு செய்த நாம் தொழுது கொள்கிறோம்.

கலக்கமும் கவலையும் அவரிடம் கொணர்ந்தேன்
உளமதின் குழப்பங்கள் அனைத்தம் அகன்றன.
வாழ்வினை வளமாக்கி மகிழ்ச்சியைக் கொடுத்தார்.
அழகினை நல்கியே அருமையாய்ச் செய்தார்.

7. August

»… und ihnen zu geben Kopfschmuck statt Asche, Freudenöl statt Trauer, ein Ruhmesgewand statt eines verzagten Geistes.« Jesaja 61,3

In diesem erhabenen Text beschreibt der Messias einige der herrlichen Veränderungen, die Er denen bringt, welche Ihn aufnehmen. Er bringt Schönheit statt Asche, Freude statt Trauer, Ruhm statt Verzagtheit.

Wir bringen Ihm die Asche eines Lebens, das vom Vergnügen ausgebrannt ist, die Asche eines Leibes, der von Alkohol oder Drogen ruiniert ist. Wir bringen Ihm die Asche der in der Wüste vergeudeten Jahre oder die Asche frustrierter Hoffnungen und zerbrochener Träume. Und was bekommen wir dafür? Er gibt uns Schönheit, die Schönheit eines funkelnden bräutlichen Kopfschmucks. Was für eine Veränderung! »Der arme elende Sklave der Sünde wird zu der Ehre befördert, Hausgenosse des heiligen Gottes zu sein« (J.H. Jowett). Maria Magdalena, einst von sieben Dämonen beherrscht, wird nicht nur von diesen befreit, sondern wird auch eine Tochter des Königs. Die Korinther kamen zu Ihm mit ihrem ganzen entarteten Leben und wurden
abgewaschen, geheiligt und gerechtfertigt.

Wir bringen Ihm die Tränen der Trauer. Diese Tränen wurden durch Sünde, Unglück und Versagen verursacht. Tränen, die durch Schicksalsschläge und Verluste hervorgerufen wurden. Tränen über zerbrochene Ehen und ungeratene Kinder. Kann Er etwas mit diesen salzigen heißen Tränen anfangen? Ja, Er kann sie abwischen von unseren Augen und uns stattdessen Freudenöl geben. Er schenkt uns die Freude der Vergebung, die Freude der Annehmung durch Gott, die Freude Seiner Familie, die Freude, endlich den Grund unserer Existenz gefunden zu haben. Kurz, Er schenkt uns »die Freude des Hochzeitsfestes statt drückenden Schmerz«.

Schließlich nimmt Er den Geist der Verzagtheit von uns. Wir kennen alle diesen Geist – die Last der Schuld, Gewissensbisse, Scham und Demütigung. Den Geist des Verlassen-, Verworfen- und Verratenseins. Den Geist von Angst und Sorge. Er nimmt uns das alles weg und gibt uns dafür ein Ruhmesgewand. Er legt ein neues Lied in unseren Mund, einen Lobgesang unserem Gott (siehe Psalm 40,3). Der Nörgler wird mit Dankbarkeit erfüllt, der Gotteslästerer mit Anbetung.

Etwas Schönes, etwas Gutes,
All mein Elend hat Er verstanden.
Alles, was ich Ihm geben musste, war Zerbrochenheit und Streit,
Und Er machte etwas Schönes aus meinem Leben.