November

ஆவிக்குரிய ஒற்றுமைகள்

November 4

“In this the children of God are manifest, and the children of the devihwhosoever doeth not righteousness is not of God, neither he that loveth not his brother/’ (1 John 3:10)

Years ago almost every home had a large family album in the living room. It had a stuffed leather cover embossed in gold. A leather strap with clasp extended from the right edge of the back cover over to the right side of the top cover where the clasp latched securely into its socket. The pages were of stiff, glossy paper-board, ornamented with floral patterns and gilt edges. On each side of a page were cut-out sections where photographs were inserted. When visitors looked through the album, they would often remark that “Josh looks just like his grandpa” or that “Sarah surely has the family likeness.”

John’s first epistle reminds me of that old family album because it pictures those who are members of God’s family and who have the family likeness. However, here it is a matter of spiritual and moral resemblance rather than physical.

There are at least eight ways in which Christians are spiritual “look-alikes.” The first is that they all say the same tiling about Jesus. They confess that He is the Christ, that is, the Messiah or Anointed One (1 Jn. 4:2; 5:1). To them Jesus and Christ are one and the same Person.

All Christians love God (5:2). Even though that love may often be weak and vacillating, there is never a time when a believer cannot look up into the face of God and say, “You know that I love You.”

All Christians love the brethren (2:10; 3:10, 14; 4:7, 12). This is the hallmark of all who have passed from death to life. Because they love God, they love those who are born of God.

Those who love God characteristically keep His commandments (3:24). Their obedience is motivated, not by fear of punishment, but by love to Him who gave His all.

Christians do not practice sin (3:6, 9; 5:18). True, they commit acts of sin, but sin is not the dominating power in their lives. They are not sinless but they do sin less.

Members of God’s family practice righteousness (2:29; 3:7). It is not just that they do not habitually sin—that could be negative and passive. They reach out to others with deeds of righteousness—that is positive and active.

The seventh characteristic of members of God’s family is that they do not love the world (2:15). They realize that the world is a system that man has built up in opposition to God, and that to be a friend of the world is to be an enemy of God.

Finally Christians overcome the world by faith (5:4). They see beyond the sham of passing things to those things that are eternal. They live for the things that are not seen.

நவம்பர் 4

இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்பு கூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. 1.யோவான் 3:10

ஆவிக்குரிய ஒற்றுமைகள்

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு பெரிய குடும்பத்திலும் நிழற்படங்கள் அடங்கிய கோப்புக்களைத் தங்களுடைய வீட்டின் முன்னறையில் வைத்திருப்பார்கள். அந்தக் கோப்பானது தோலினால் செய்யப்பட்ட அழகிய உறைக்குள் வைக்கப்பட்டிருக்கும். அந்த உறையின் மீது பொன் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். தோலுறைக்கு மேலே ஒருபுறமிருந்து மறுபுறம் வரை ஒரு வார்க்கச்சையும், அதனை இழுத்துக்கட்ட கொக்கியும் தாழ்ப்பாளும் இருக்கும். உள்ளே இருக்கிற தாள்கள் பளபளக்கும் அட்டைகளாகவும், சித்திரப் பூவின் வேலைப்பாடுகளால் ஆனதாகவும் இருக்கும். அந்த அட்டைகளில் நிழற்படங்களைப் பொருத்துவதற்கு ஏற்றபடி மெல்லிய தாள்கள் ஒட்டப்பட்டிருக்கும். விருந்தினர்கள் படங்களைப் பார்க்கும்போது, ‘ஜோஸ் அவனுடைய பாட்டனாரைப்போல இருக்கிறான்.”என்று அவ்வப்போது சொல்லுவார்கள், அல்லது ‘குடும்பத்தின்சாயல் அப்படியே சாராவின் முகத்தில் இருக்கிறது” என்று கூறுவர்.

யோவான் எழுதிய முதல் மடல், பழைய குடும்ப நிழற்படக் கோப்பை எனக்கு நினைவுற்குக் கொண்டு வருகிறது. ஏனெனில் தேவனுடைய குடும்பத்தின் உறுப்பினர்களையும், குடும்பத்தின் சாயலையும் அங்கே சித்திரமாகக் காண்கிறோம். இங்கே ஆவிக்குரியதும் ஒழுக்கத்திற்குரியதுமான பிரதிபலிப்பைக் காண்கிறோமேயொழிய, சரீர ஒருமைப்பாட்டைக் காண்கிறதில்லை.

குறைந்தது எட்டுவகைகளில் கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றனர். முதலாவது, அவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஒரே விதமாக பேசுகின்றனர். அவரே கிறிஸ்து அதாவது மேசியா அல்லது அபிஷேகிக்கப்பட்டவர் என்று அறிக்கை செய்கின்றனர் (1.யோவான் 4:2, 5:1). இயேசுவும் கிறிஸ்துவும் ஒரே நபர் என்று  அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எல்லாக் கிறிஸ்தவர்களும் தேவனிடத்தில் அன்புகூருகின்றனர் (5:2) அவ்வப்போது அந்த அன்பு வலிமை குன்றியதாகவும், ஊசலாடுகிறதாகவும் இருந்தாலும், விசுவாசியானவன் தனது முகத்தை உயர்த்தி தேவனுடைய முகத்தைப் பார்த்து, ‘நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை அறிவீர்” என்று கூறாதிருக்கமாட்டான்.

அனைத்துக் கிறிஸ்தவர்களும் சகோதரர்களிடம் அன்பு பாராட்டுகின்றனர் (2:10, 3:14, 4:7,12). மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்த அனைவருக்கும் இது அடையாளமாயிருக்கிறது. அவர்கள் தேவனிடத்தில் அன்புகூருவதால், தேவனால் பிறந்தவர்களிடத்திலும் அன்புகூருகின்றனர்.

தேவனிடத்தில் அன்புகூருகிற கிறிஸ்தவர்கள் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் தனிச்சிறப்பையும் உடையவர்களாக இருக்கின்றனர். (3:24). அவரிடத்தில் அவர்கள் கொண்டிருக்கும் பயத்தினால் அல்ல, தம்முடையது எல்லவற்றையும் கொடுத்த தேவனிடத்தில் கொண்டிருக்கிற அன்பினாலே ஏவப்பட்டு அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்படிகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பாவத்தைத் தொடர்ந்து செய்வதில்லை (3:6,9, 5:18). அவர்கள் பாவச்செயலைப் புரிந்துவிடுவது உண்மைதான். ஆனால் அவர்களுடைய வாழ்வில் பாவம் ஆதிக்கம் செலுத்துவதில்லை. அவர்கள் பாவமற்றவர்கள் அல்லர். ஆனால் பாவத்தைக் குறைவாகவே செய்கின்றனர்.

தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாக இருப்பவர்கள் நீதியை நடப்பிக்கின்றனர் (2:29, 3:7). அவர்கள் மனமுவந்து பாவத்தைச் செய்கிறதில்லை. சில வேளைகளில் அதற்கு இடங்கொடுத்துவிடுகின்றனர். எனெனில் நீதியை அவர்கள் மனமுவந்து செய்கின்றனர். அதாவது மற்றவர்களிடம் சென்று அதனை முனைந்து செய்கின்றனர்.

தேவனுடைய குடும்பத்தாரின் ஏழாவது குணநலம் யாதெனில் அவர்கள் உலகத்தில் அன்பு கூருவதில்லை என்பதே (2:15). தேவனுக்கு விரோதமாக மனிதனால் கட்டப்பட்ட முறைமை உலகம் என்றழைக்கப்படுகிறது. உலகத்தில் நட்பு பாராட்டுவது தேவனுக்கு விரோதமான செயலாகும்.

இறுதியாக விசுவாசத்தின் மூலமாக, கிறிஸ்தவர்கள் உலகத்தை வெல்லுகின்றனர் (5:4). அழிந்து போகிற பகட்டான பொருட்களைக் காணமல் நிலை பேறானவற்றையே நோக்கிப் பார்க்கின்றனர். காணாதவற்றுக்காகவே அவர்கள் வாழ்கின்றனர்.

4. November

»Hieran sind offenbar die Kinder Gottes und die Kinder des Teufels: Jeder, der nicht Gerechtigkeit tut, ist nicht aus Gott, und wer nicht seinen Bruder liebt.« 1. Johannes 3,10

Vor Jahren gab es in fast jeder Familie ein großes prachtvolles Familienalbum, das im Wohnzimmer stand. Es hatte einen wattierten Ledereinband, mit Gold eingelegt. Die Seiten waren aus steifem, glänzendem Papier, das mit Blumenmustern übersät war und an den Rändern Goldschnitt hatte. Und auf jeder Seite waren ausgeschnittene Felder, in die Photographien gesteckt wurden.

Wenn sich Gäste dieses Album ansahen, dann sagten sie oft: »Ach, Heinrich sieht aber doch genau aus wie sein Großvater!« oder: »An Sophie sieht man wirklich die Familienähnlichkeit.«

Der erste Brief des Johannes erinnert mich an ein solch altes Familienalbum, weil er jene beschreibt, die Mitglieder der Familie Gottes sind und die entsprechende Familienähnlichkeit
haben. Nur geht es hier um geistliche und moralische Ähnlichkeit und nicht um Gesichtszüge oder Körperbau.

In mindestens achtfacher Hinsicht sind sich Christen geistlich gesehen ähnlich. Zunächst einmal sagen sie alle dasselbe über Jesus. Sie bekennen, dass Er der Christus ist, das heißt, der Messias oder der Gesalbte (siehe Kap. 4,2; 5,1). Für sie ist Jesus und der Christus ein und dieselbe Person.

Alle Christen haben Gott lieb (siehe Kap. 5,2). Selbst wenn diese Liebe oft schwach und schwankend sein mag, so gibt es doch keinen Augenblick, in dem ein Gläubiger nicht zum Angesicht Gottes aufsehen und sagen könnte: »Du weißt, dass ich dich liebe.«

Alle Christen lieben auch ihre Brüder (siehe Kap. 2,10; 3,10.14; 4,7.12). Das ist das Kennzeichen aller, die vom Tod zum Leben hindurchgedrungen sind. Weil sie Gott lieben, lieben sie auch die, die aus Gott geboren sind.

Kennzeichnend für diejenigen, die Gott lieben, ist auch, dass sie Seine Gebote halten (siehe Kap. 3,24): Ihr Gehorsam kommt nicht aus der Furcht vor Strafe, sondern aus der Liebe zu dem Gott, der Sein Ein und Alles für uns hingegeben hat.

Christen praktizieren keine Sünde (siehe Kap. 3,6.9; 5,18). Es stimmt zwar, dass sie einzelne sündige Taten begehen, aber die Sünde ist nicht die bestimmende Macht in ihrem Leben. Ihr Handeln ist zwar nicht ohne Sünde, aber sie sündigen weniger.

Die Mitglieder der Familie Gottes üben Gerechtigkeit (siehe Kap. 2,29; 3,7). Es ist also nicht nur so, dass sie nicht gewohnheitsmäßig sündigen, das wäre ja bloß ein negatives und passives Verhalten. Vielmehr wenden sie sich anderen Menschen zu und tun Taten der Gerechtigkeit, das ist positiv und aktiv.

Das siebte Kennzeichen für die Familienmitglieder Gottes ist, dass sie nicht die Welt lieben (siehe Kap. 2,15). Sie haben erkannt, dass die Welt ein System ist, das der Mensch im Widerstand gegen Gott aufgebaut hat, und dass man automatisch ein Feind Gottes wird, wenn man ein Freund der Welt ist.

Und schließlich überwinden die Christen die Welt durch ihren Glauben (siehe Kap. 5,4). Sie sehen durch die Scheinwelt der vergänglichen Dinge hindurch auf die Dinge, die ewig sind. Sie leben für die Dinge, die nicht sichtbar sind.