அபிகாயில் (Abigail)

(மகிழ்ச்சியின் ஊற்று)



1. இவள் மாகோனிலிருந்த நாபால் என்பவனின் மனைவி. ஓர் அழகான, புத்தியுள்ள ஸ்திரி. தாவீது தன் மனுஷரை நாபாலிடம் அனுப்பினபோது அவன் அவர்களோடு மரியாதையீனமாய் பேசினதினிமித்தம், தாவீது அவன்மேல் பழிவாங்கும்படி போனான். அப்பொழுது அபிகாயில் காணிக்கைகளை எடுத்துக்கொண்டுபோய், அவனைச் சந்தித்து, சமாதானம் பண்ணிக்கொண்டாள். பின்பு நாபால் மரித்தபோது, தாவீது அவளை விவாகம் பண்ணினான் (1.சாமு.25:3,14-44). யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும், தாவீது விவாகம் பண்ணினான். இவர்கள் இருவரும் அவனோடு சவுலுக்குத் தப்பி, காத் பட்டணத்தில் ஆகிசீடம் தங்கியிருந்தார்கள் (1.சாமு.27:3).

பின்பு தாவீது இவ்விரண்டு மனைவிகளைக் கூட்டிக்கொண்டு எப்ரோனுக்குப் போனான் (2.சாமு.2:2).

தாவீது சிக்லாகில் இருந்த நாட்களில், அமலேக்கியர் இந்த இரு மனைவிகளையும் சிறை பிடித்துக்கொண்டுபோனவேளையில், அவன் போய் இவர்களை மீட்டுக்கொண்டான் (1.சாமு.30:5,18).

தாவீதின் இரண்டாம் குமாரன் அபிகாயிலிடம் பிறந்த சீலேயாப் (2.சாமு.3:3). இவனுடைய பெயர் தானியேல் என்றும் குறித்துள்ளது (1.நாளா.3:1).

2. தாவீதுடைய சகோதரியின் பெயர் (1.நாளா.2:16). இவள் யெத்தேர் என்பவனை விவாகம் பண்ணி அமாசாவைப் பெற்றாள் (1.நாளா.2:17).