அபிசாய் (Abishai)

(கொடைக்குப் பிதா)



செருயாளின் மகன், யோவாப், ஆசகேல் என்பவர்களின் சகோதரன். தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன் (1.நாளா.2:16).

இவன் தாவீதோடு சவுலின் பாளையத்துக்குப்போய் சவுல் நித்திரையாயிருக்கக்கண்டு, அவனைக் குத்திப்போட எண்ணினபோது, தாவீது தடுத்தான் (1.சாமு.26:6-9).

அப்னேர் ஆசகேலைக் கொன்றதினிமித்தம், யோவாபும், அபிசாயும் அவனைச் சங்காரம் பண்ணினார்கள் (2.சாமு.3:30).

சீரியரோடு யுத்தம் நடந்த வேளையில் அபிசாய் அம்மோனியரை முறிய அடித்தான் (2.சாமு.10:10,14).

அபிசாய் உப்புப் பள்ளத்தாக்கில் 18000 ஏதோமியரை முறி அடித்தான் (1.நாளா.18:12).

சீமேயி என்பவன் தாவீதைத் தூசித்த வேளையில் அபிசாய் அவனைக் கொன்றுபோட எண்ணினபோது தாவீது தடைசெய்தான் (2.சாமு.16:9).

தாவீதின் சேனைகளின் மூன்றிலொரு பங்குக்கு அபிசாய் தளகர்த்தனாயிருந்தான் (2.சாமு.18:2).

சேபா கலகம் செய்தவேளையில் மோவாபும், அபிசாயும் அவனைப் பின்தொடர்ந்துபோனார்கள். பின்பு சேபா கொல்லப்பட்டான் (2.சாமு.21:17).

தாவீதை வெட்டவந்த ஒரு பெலிஸ்தனை, அபிசாய் வெட்டிக் கொன்றுபோட்டான் (2.சாமு.21:17).

தாவீதின் மூன்று பராக்கிரமசாலிகளில் அபிசாய் பிரதானமானவன் (2.சாமு.23:18).