ஜெபத்தின் மேன்மை
(வேதபகுதி: ஆதியாகமம் 25:19-34) “மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்” (வச. 21). ஈசாக்கு தேவனுடைய வல்லமையாலும் வாக்குறுதியாலும் பிறந்தவன். அவனுடைய திருமணம் தேவனுடைய திட்டத்தின்படி நடந்தது. திருமணம் ஆகி இருபது ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரன் இஸ்மவேலுக்கோ பன்னிரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். தேவனுடைய பிள்ளைகளைக் காட்டிலும் உலகத்தாரின் ஆசீர்வாதத்தைக் காணும்போது நமக்கும் சில நேரங்களில் மனச்சோர்வு உண்டாகிறது. “துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில்,…