சிறப்பானது கர்த்தருக்கே உரியது
(வேதபகுதி: லேவியராகமம் 7:22-38) “அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்க வேண்டும். மார்க்கண்டமோ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்” (வச. 31). மகிழ்ச்சி மற்றும் நன்றியின் வெளிப்பாடாகவே சமாதான பலி இருக்கிறது. தன்னுடைய மகிழ்ச்சியைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும்படியாகப் பலியின் மிருகத்தை கர்த்தருடைய சந்தியில் கொண்டு வருகிறான். மகிழ்ச்சி எப்போதும் பிறருடன் பகிர்ந்துகொள்ளப்படும் ஒன்றாகவே வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. பிற பலிகளைக் காட்டிலும் இது வேறுபட்டதாக உள்ளது. இப்பலியில் மூன்று பேருக்குப் பங்கு இருக்கிறது. முதலாவது, மிருகத்தின் சிறப்பான…