புத்தாண்டின் நுழைவாயில்
“உலகத்தோற்றமுதல் தேவனுக்கு தம்முடைய கிரியையெல்லாம் தெரிந்திருக்கிறது” (அப். 15:18). 1939 -ஆம் ஆண்டின் இறுதியில் ஜெர்மனி போலந்தை ஆக்கிரமித்ததன் வாயிலாக இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. முழு ஐரோப்பாவையும் போர் மேகம் சூழ்ந்தது, மக்கள் அச்சத்திலும் திகிலிலும் இருந்தார்கள். எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமற்ற சூழல் காணப்பட்டது. இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஜார்ஜ் நாட்டு மக்களுக்கு வானொலி வாயிலாக ஆண்டு இறுதிச் செய்தி வழங்க வேண்டிய தருணம். எந்த வகையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியை அளிக்கலாம் என்று யோசித்துக்…