நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
(வேதபகுதி: யாத்திராகமம் 12:1-14) “நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்” (வச. 3). பூட்டிய வீட்டுக்குள் அடிக்கப்படுகிற ஓர் ஆட்டுக்குட்டியின் மரணம் ஒரு நாட்டின் விடுதலைக்கான கதவைத் திறந்துவிடுகிறது. பிறந்து ஓராண்டு நிறைவுற்ற இளம் ஆட்டுக்குட்டியின் மரணம் நானூறு ஆண்டுகால அடிமை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. ஓர் எளிய ஆட்டுக்குட்டியின் முடிவு இஸ்ரயேலர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுக்கிறது.…