மாராவை மதுரமாக்குகிற கர்த்தர்
(வேதபகுதி: யாத்திராகமம் 15:22-27) “மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான், அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில்போட்டவுடனே அது மதுரமான தண்ணீராயிற்று” (வச. 25). இரட்சிப்பில் தொடங்குகிற நம்முடைய பயணம் மகிமையில் முற்றுப்பெறும். இவ்விரண்டுக்கும் இடையிலான சாலை, வனாந்தரம் என்னும் இந்த உலகத்தின் வழியாகச் செல்கிறது. சூர் வனாந்தரத்திலிருந்து மூன்று நாள் பயணத்தில் மாரா வந்தார்கள் (வச. 22-23). மூன்று நாள் பிரயாணம் செய்து நாங்கள் வனாந்தரத்தில் ஆராதனை செய்ய எங்களைப் போகவிடு…