பரிசுத்தம் நாடும் கர்த்தர்
(வேதபகுதி: யாத்திராகமம் 19:9-15) “பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்” (வச. 11,12). இங்கே மோசே தேவனுக்கும் மக்களுக்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுகிறார். தேவனுடைய வார்த்தைகளை மக்களிடத்தில் தெரிவிப்பதற்கும், மக்களின் எண்ண ஓட்டங்களை தேவனிடத்தில் பிரதிபலிப்பதற்கும் அவர் பள்ளத்தாக்குக்கும் மலைக்குமாக ஏறி இறங்குகிறார். இப்பொழுது நமக்கான ஒரே மத்தியஸ்தர் கிறிஸ்து மட்டுமே. இவர் மூலமாக நாம் எப்பொழுதும் தேவ…