கர்த்தரின் சித்தத்தில் இருத்தல்
(வேதபகுதி: ஆதியாகமம் 26:1-22) “ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்” (வச. 6). ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்துக்குப்பின் நூறு ஆண்டுகள் கழித்து ஈசாக்கின் நாட்களிலும் ஒரு பஞ்சம் ஏற்பட்டது. ஈசாக்கு இதனால் பாதிக்கப்பட்டான். விசுவாசிகள் இயற்கைச் சீற்றங்களுக்கும், பேரழிவுகளுக்கும், கொரோனோ போன்ற பெருந்தொற்றுக் காலங்களுக்கும் விதிவிலக்கானவர்கள் அல்லர். எல்லாரையும் போலவே அவர்களும் அவற்றை எதிர்கொள்ள வேண்டும். விசுவாசிகளுக்குத் தேவன் யாவற்றையும் நன்மைக்கு ஏதுவாக முடியப்பண்ணுகிறார். பஞ்சத்தின் ஊடாகவும் தேவன் விசுவாசிகளைக் காப்பாற்ற வல்லவர். “கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி” நீ…