ஆளுகை செய்யும் வாழ்க்கை
(வேதபகுதி: ஆதியாகமம் 1:20-25) “பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்” (வச. 20). இந்த வேதபகுதி மனிதனுக்காகவும் அவனுடைய ஆளுகைக்காகவும் தேவனால் பூமி எவ்வாறு ஆயத்தம் செய்யப்படுகிறது என்பதை மோசே விவரிக்கிறார் (வச. 20-25). கடல்கள் மீன்களால் நிரம்பின, வானம் பறவைகளால் நிரம்பியது, காடுகள் விலங்குகளால் நிரம்பின. இவை எண்ணற்ற வேறுபாடுகளுள்ள, ஆச்சரியமூட்டும் கலவையான உயிரினங்கள். இனிமேல் படைக்கப்படப் போகிற மனிதனுக்காக தேவனின் மகத்தான…