புதிய உலகத்தின் மக்கள்
(வேதபகுதி: ஆதியாகமம் 10:1-32) “நோவாவின் குமாரராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்ச வரலாறு; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்” (வச. 1). புதிய உலகத்தின் மனித இனத்தோற்றத்தின் வரலாற்றை இப்பகுதியில் படிக்கிறோம். நோவாவின் குமாரராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வரலாறு. இவர்களில் யாப்பேத் மூத்தவன் (வச. 21). ஆனால் ஆவியானவர் இங்கு சேமின் பெயரை முதலாவது குறிப்பிடுகிறார். இந்தச் சேமின் இனத்தில்தான் ஆபிரகாமும், தாவீதும், இயேசு கிறிஸ்துவும் தோன்றினார்கள். நாமும்கூட எந்த இனத்தாராகவும்…