விசுவாசத்தால் நீதிமானாகுதல்
(வேதபகுதி: ஆதியாகமம் 15:1-6) “அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் நீதியாக எண்ணினார்” (வச. 6). ஆபிராம், சோதோமின் அரசன் தந்த வாய்ப்பை நிராகரித்தான், ஆயினும் அவன் எதையும் இழந்துபோகவில்லை. கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, “நீ பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்” என்றார். அதாவது சோதோமின் ராஜாவைப் போல பொருட்களைத் தருவேன் என்று கூறாமல் கர்த்தர்தாமே பரிசாக இருப்பேன் என்று கூறினார். நாம் உலகம் தரும் அநித்தியமான வாய்ப்புகளைப் புறக்கணிக்கும்போது, அது நம்மைப்…