May

அந்நிய நெருப்பு

(வேதபகுதி: லேவியராகமம் 10:1-11) “பின்பு ஆரோனின் குமாரனாகிய நாதாவும் அபியூவும் தன் தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவர் சந்நிதியில் கொண்டுவந்தார்கள் ” (வச. 1). ஓர் அற்புதமான காட்சிக்குப் பிறகு ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வு. மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஆரோனின் நான்கு மகன்களின் இருவரின் மரணம் அவனை மட்டுமின்றி, நம்மையும், பேச்சற்றவர்களாக்கிவிட்டது. மோசே, ஆரோனின் குடும்பத்தார், முழு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும்…

May

மகிமை வெளிப்படும் இடம்

(வேதபகுதி: லேவியராகமம் 9:1-24) “பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது” (வச. 23). ஓர் அற்புதமான காட்சி. ஆரோனுக்கும் அவனுடைய குமாரருக்கும் எட்டு நாட்களுக்கான சுத்திகரிப்பு முறைமைகள் முடிந்துவிட்டன. எட்டாம் நாளில் அவர்கள் முதன் முதலாக ஆசரிப்புக்கூடாரத்துக்குள் சென்று பலிசெலுத்துகிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் கூடாரத்தின் முன்னால் இருந்து அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கர்த்தருடைய கட்டளையின்படி ஆரோனும் மோசேயும் உள்ளே கூடாரத்துக்குள் பிரவேசித்துவிட்டு திரும்பி…

May

பிரித்தெடுக்கப்பட்ட பிரதான ஆசாரியர்

(வேதபகுதி: லேவியராகமம் 8:18-36) “பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்” (வச. 1-4). ஆசாரியர்களைப் பிரதிஷ்டை செய்கிற பலியைக் குறித்து வாசிக்கிறோம். அவர்களுடைய தனிப்பட்ட தகுதி அல்ல, ஆட்டுக்கடாவின் இரத்தமே அவர்களைத் தகுதிப்படுத்துகிறது. கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக நமக்குக் கிடைக்கிற தகுதியைத் தவிர நமக்கும் எவ்விதத் தனிப்பட்ட தகுதியும் இல்லை என்பதை இந்த இரத்தம் சுட்டிக்காட்டுகிறது. ஆசாரியன் சற்று வித்தியாசமாகக் காட்சியளிக்கிறான். கிறிஸ்துவின் இரத்தத்தால்…

May

நமக்காக ஒரு பிரதான ஆசாரியர்

(வேதபகுதி: லேவியராகமம் 8:1-17) “கர்த்தர் மோசேயை நோக்கி, நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேக தைலத்தையும் பாவநிவராண பலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டுவந்து, சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடார வாசலுக்கு முன்பாகக் வடிவரச் செய்தான்” (வச. 1-4). நமக்காகப் பரலோகத்தில் வேண்டுதல் செய்துகொண்டிருக்கிற மகா பிரதான ஆசாரியராகிய கிறிஸ்துவின் நிழல் சித்திரத்தை இங்கே காண்கிறோம். கர்த்தருடைய கட்டளைப்படி மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் அழைத்தான். தேவனால் அழைக்கப்பட்டாலொழிய,…

May

சிறப்பானது கர்த்தருக்கே உரியது

(வேதபகுதி: லேவியராகமம் 7:22-38) “அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்க வேண்டும். மார்க்கண்டமோ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்” (வச. 31). மகிழ்ச்சி மற்றும் நன்றியின் வெளிப்பாடாகவே சமாதான பலி இருக்கிறது. தன்னுடைய மகிழ்ச்சியைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும்படியாகப் பலியின் மிருகத்தை கர்த்தருடைய சந்தியில் கொண்டு வருகிறான். மகிழ்ச்சி எப்போதும் பிறருடன் பகிர்ந்துகொள்ளப்படும் ஒன்றாகவே வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. பிற பலிகளைக் காட்டிலும் இது வேறுபட்டதாக உள்ளது. இப்பலியில் மூன்று பேருக்குப் பங்கு இருக்கிறது. முதலாவது, மிருகத்தின் சிறப்பான…

April

புயலின் நடுவிலும் திவ்விய சமாதானம்

(வேதபகுதி: லேவியராகமம் 7:1-21) “சமாதான பலியாகிய ஸ்தோத்திர பலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றையத்தினமே புசிக்கப்பட வேண்டும், அதில் ஒன்றும் விடியற்காலம் மட்டும் வைக்கப்படலாகாது” (வச.15). சமாதான பலியை எவ்விதமாகப் படைக்கவும் அதைப் பாவிக்கவும் வேண்டும் என்பதைப் பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே காண்கிறோம். இந்த சமாதான பலியை மூன்று விதங்களில் படைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவையாவன: 1. ஸ்தோத்திரத்திர பலியாக (வச. 15), 2. பொருத்தனையாக (வச. 16), 3. உற்சாக பலியாக (வச. 16). இது…

April

மெய்யான பலியை அடையாளப்படுத்தும் நிழற்பலிகள்

(வேதபகுதி: லேவியராகமம் 6:1-30) “பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்க வேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலியின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்” (வச.12). இந்த அதிகாரத்தில் ஏற்கனவே சொல்லப்பட்ட பலிகளின் நோக்கம் அதன் வரையறைகள் மீண்டுமாக விவரிக்கப்பட்டுள்ளது. குற்ற நிவாரணபலி நம்மைத் தேவனிடத்தில் மன்னிப்பைப் பெற்று ஒப்புரவாகச் செய்கிறதுபோல, உடன் சகோதர சகோதரிகளுக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தோமானால் அவர்களிடத்திலும் ஒப்புரவாக வேண்டும் என்பதையும் குற்றத்தால்…

April

குற்றநிவாரண பலி: பாவத்தின்மேல் வெற்றி

(வேதபகுதி: லேவியராகமம் 5:1-19) “ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த சேக்கல் கணக்கின்படியே நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் ஒரு பழுதற்ற ஆட்டுக்கடாவை குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து… ” (வச.15). குற்றநிவாரண பலி என்பது அறியாமையினால் செய்த பாவத்துக்கான பரிகாரத்தை முன்வைக்கிறது. இது துணிந்து வேண்டுமென்றே செய்கிற பாவத்தைக் குறித்துப் பேசவில்லை, மாறாக, நாம் விரும்பாவிட்டாலும் கூட நம்முடைய அறியாமையாலே…

April

பாவநிவாரண பலி: குற்றமனசாட்சியிலிருந்து விடுதலை

(வேதபகுதி: லேவியராகமம் 4:1-35) “ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால், … தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையைப் பாவநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்” (வச.2,3). பழைய ஏற்பாட்டு லேவியராகமப் பலிகள் மனித குலம் தேவனுடனான தன்னுடைய உறவைக் கட்டி எழுப்புவதற்குப் பயன்படும் அடிப்படைத் தேவைகளாக உள்ளன. இப்பொழுது நாம் நான்காவதாக உள்ள, “பாவநிவராண பலிக்கு” நேராக வருகிறோம். பிற தகன பலிகளைப் போலக் காணப்பட்டாலும் இந்த…

April

சமாதானபலி: ஒரு பரிபூரண ஐக்கியம்

(வேதபகுதி: லேவியராகமம் 3:1-17) “ஒருவன் சமாதான பலியைப் படைக்க வேண்டுமென்று, மாட்டு மந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில் அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதைக் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்” (வச. 1). சமாதான பலி பல வகைகளில் தகனபலிக்கு ஒத்ததுபோலக் காணப்பட்டாலும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது: தகனபலி முழுவதும் பலிபீடத்தில் தகனிக்கப்பட்டது, ஆனால் சமாதானபலியில் கொழுப்பும் முக்கியமான உள்ளுறுப்புகளும் தகனிக்கப்பட்டது, அதனுடைய மாம்சம் ஆசாரியர்கள் உண்ணுவதற்காக பிரித்துவைக்கப்பட்டது. இது கிறிஸ்துவுக்கும் தேவனுக்கும் உள்ள பரிபூரணமான ஐக்கியத்தைத் தெரிவிக்கிறது.…